என் மலர்
நீங்கள் தேடியது "slug 99110"
- காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு தகவல்.
- போலீஸார் சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் பொதுக் கழிப்பிடம் அருகே நேற்று காலை காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த முத்தூர் அருகே உள்ள மோளக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன்(வயது 65). சண்முகம்(50), சந்திரன் (46), ராஜேஷ் (42), ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே, சின்னாக்கவுண்டனூர் அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவரது உத்திரன்படி, சங்ககிரி எஸ்.ஐ. சுதாகர் தலைமையிலான போலீசார் சின்னாக்கவுண்டனுார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த சுந்தரம் (வயது 53), சுந்தரம் காலனியைச் சேர்ந்த சரவணன் (42), தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (28), குமாரபாளையம் ஆனங்கூர் ரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (40), பவானியை சேர்ந்த கோகுல் (38), புள்ளாக்க வுண்டம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (26), ஈரோட்டை சேர்ந்த சேகர் (29), குமாரபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), பவானியை சேர்ந்த செல்வம் (35), குமாரபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துசாமி (37), அமிர்தம் காலணியை சேர்ந்த குமார் (29), குமரன் (35), பாஸ்கரன் (43), ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் பணம் வைத்து சூதாடி இருவர் கைது செ்ய்யப்பட்டார்.
- போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் உள்ள ஆயியார்மடம் மணிமுத்தாறு ஆற்றின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பழமலைநாதர் பகுதியை சேர்ந்த ராஜ் (26), சதீஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர், மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வெள்ளகோவில் போலீஸ் சம்பாம்பாளையத்தில் கண்காணித்தனர்.
- தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையம் என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படையினர் முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையத்தில் கண்காணித்த போது ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,43,700 பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
- 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தவாடை தெருவை சேர்ந்த அசாருதீன், ஹனிபா பாய் ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் புகையிலை, கஞ்சா, பணம் வைத்து சூதாட்டம்,சேவல் சண்டை, அனுமதியின்றி மது விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம் என்ற பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்துசாமி (53), நல்லசிவம் (35), ரவிக்குமார் (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.230 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து
- ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
மண்டைக்காடு சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.
அங்குள்ள குருசடி எதிரே செல்லு்ம்போது தாவூரை சேர்ந்த ரெங்கன், குன்னங்காட்டை சேர்ந்த பிரதீஸ், பிரமேன் அழகன்பாறை ஆன்றனி ஜோசப்ராஜ், ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ஜனபர் தெரு மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த பிரபாகர் (வயது 42), அரூர் வெங்கட்ராமன் (35), ஓசூர் வாணியர் தெரு பவன் (28), அலசநத்தம் சாலை நவீன்குமார் (29), மொரப்பூர் சிவலிங்கம் (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,300 பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி போலீசார் கோனேரிப்பள்ளி அரசு பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் முனிதேவி நகர் ரபிக் (37), நல்லகான கொத்தப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி (30), கோனேரிப்பள்ளி வெங்கட்ராஜ் (34), முரளி (38), பெரிய சப்படி நாகேஷ் (40), குருபசப்படி ரவி (34) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,850 பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அருண்குமார் (35), பேளகொண்டப்பள்ளி முருகேஷ் (36), தளி நவீன் (28), மதகொண்டப்பள்ளி ரமேஷ் (34), ஓசூர் ராம்நகர் மாயூபேக் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,140 பறிமுதல் செய்யப்பட்டது.