search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99110"

    உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி அறிவுரையின் பேரில் உடுமலை காவல் உதவி ஆய்வாளர் சம்பத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்துகுட்பட்ட நேரு நகர் பகுதியில் சட்டவிரோத சீட்டாட்டம் நடைபெற்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி அறிவுரையின் பேரில் உடுமலை காவல் உதவி ஆய்வாளர் சம்பத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முருகன், வினோத்குமார், முத்துக்குமார் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 120 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ஜனபர் தெரு மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த பிரபாகர் (வயது 42), அரூர் வெங்கட்ராமன் (35), ஓசூர் வாணியர் தெரு பவன் (28), அலசநத்தம் சாலை நவீன்குமார் (29), மொரப்பூர் சிவலிங்கம் (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,300 பறிமுதல் செய்யப்பட்டது.

    சூளகிரி போலீசார் கோனேரிப்பள்ளி அரசு பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் முனிதேவி நகர் ரபிக் (37), நல்லகான கொத்தப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி (30), கோனேரிப்பள்ளி வெங்கட்ராஜ் (34), முரளி (38), பெரிய சப்படி நாகேஷ் (40), குருபசப்படி ரவி (34) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,850 பறிமுதல் செய்யப்பட்டது.

    மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அருண்குமார் (35), பேளகொண்டப்பள்ளி முருகேஷ் (36), தளி நவீன் (28), மதகொண்டப்பள்ளி ரமேஷ் (34), ஓசூர் ராம்நகர் மாயூபேக் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,140 பறிமுதல் செய்யப்பட்டது.
    கருப்புப்பணத்தை தடுக்கும் வகையில் பந்தையங்கள் மற்றும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக மாற்ற வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சில வகை பந்தயங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. இந்த செயல்பாடுகளின் வழியா கருப்புப்பணம், ஹவாலா பணம் ஆகியவை பெரும்பாலும் புழங்கும். இந்நிலையில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    பான் கார்டு, ஆதார் எண் ஆகியவை பெறப்பட்டு, முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் இதனை செயல்படுத்தினால் கருப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சூதாட்டத்தில் பணம், நகைகளை இழந்து கடைசியாக மனைவியை வைத்து சூதாடி தோற்றதால், கணவன் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம் ஒரிசாரில் நடந்துள்ளது.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த நபர் ஐதராபாத்தில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ம் தேதி மனைவியை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கணவன், அங்கு ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த அபிராம் தலாய் என்பவரிடம் மனைவியை ஒப்படைத்துள்ளார்.

    என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை, அந்த பெண்ணின் கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது.

    கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் போலீசில் சென்று புகாரளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவரும், தலாயும் சூதாடியுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த அந்த கணவன் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளான்.

    ஆனால், அதிலிலும் தோற்றுப்போகவே சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை குளத்திற்கு அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது, இருவரும் தலைமறைவாக இருக்கவே போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 
    ×