search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99169"

    உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி கோவில் அமைந்துள்ள பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #Ayodhya #RamJanmaBoomi
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    இதுதொடர்பாக, ராமஜென்ம பூமியின் டெபுடி சூப்பிரன்டெண்ட் ராஜேந்திர சிங் கூறுகையில், ராமர் கோவில் அருகில் வந்த ஒரு காரை மடக்கி நிறுத்தினோம். அதில் இருந்த பவான் சவுரையா, நந்த்லால் திவாரி, ஆஷிஷ், கவுரவ் பாண்டே மற்றும் உமாசங்கர் சேத் ஆகிய 5 பேரை தடுத்து நிறுத்தினோம்.

    விசாரணையில், அவர்கள் வழிதவறி அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர். அதை உறுதிசெய்த பின்னரே அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதித்தோம் என தெரிவித்தார். #Ayodhya #RamJanmaBoomi
    கோடிக்கணக்கான இந்துக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி துரோகம் செய்துவிட்டதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்திய பிரதமர் மோடிக்கு அயோத்தியில் வந்து தரிசனம் செய்யக்கூட நேரம் இல்லை என்றும், ஆனால் வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல நேரம் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

    மேலும், அயோத்தி, மதுரா, மற்றும் காசி ஆகிய பகுதிகளில் கோவில் கட்டப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மோடி பல கோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தாம் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்து வருவதாகவும், அதனை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    மேலும், அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் எனும் புதிய அமைப்பைத் துவங்கியுள்ள தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    ×