search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99216"

    நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது. #kikichallenge #KiKiDance
    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

    இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு கிகி நடனம் ஆடியுள்ளார்.

    நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #kikichallenge #KiKiDance
    அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் பிரபு ராமமூர்த்தி (வயது 35). இந்தியர். இவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணம் செய்தார்.

    3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுவில் பிரபு ராமமூர்த்தியும், அவரது இடதுபுறம் மனைவியும், வலதுபுறம் ஜன்னலோரம் 22 வயதான மற்றொரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர். அந்தப் பெண் ஆழ்ந்து தூங்கிய நேரத்தில், பிரபு ராமமூர்த்தி பாலியல் ரீதியில் தொல்லைகள் செய்தார். ஒரு கட்டத்தில் அவரது கைகள் தன் உடல் மீது படர்வதை உணர்ந்து, அந்தப் பெண் விழித்து விட்டார். அவர் தனது உடைகள் கலைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரபு ராமமூர்த்தி மீது டெர்ரன்ஸ் பெர்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் டிசம்பர் மாதம் 12-ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
    பெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்றுகாலை சென்ற விமானத்தில் பயணம் செய்த தம்பதி ஒருவரது 4 மாத குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
    ஐதராபாத்:

    பெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்று காலை தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினரும் பயணம் செய்தனர்.

    விமானம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு மேல் எழுந்து சென்றதும் அந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்ட அந்த குழந்தை உயிருக்கு போராடியது.

    இதுபற்றி பெற்றோர் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஊழியர்களும், அதே விமானத்தில பயணம் செய்த டாக்டரும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குள் விமானம் நீண்ட தூரம் வந்துவிட்டது. எனவே விமானத்தை ஐதராபத்தில் தரையிறக்க முடிவு செய்தனர்.

    ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    விமானம் தரை இறங்கியதும் குழந்தையை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை.
    மும்பை விமான நிலையத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது தரையிறங்கிய விமானம், ஓடுபாதையை விட்டு தாண்டிச் சென்று புல்வெளியில் தரையிறங்கியது. #MumbaiRains #MHRains
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது.

    இதேபோல் விமான நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இந்த விமான நிலையம் இப்போது படகுகள் செல்லும் துறைமுகமாக மாறியிருப்பதாக டுவிட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

    மழை பெய்துகொண்டிருந்தபோது, விஜயவாடாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், மழை காரணமாக ஓடுபாதை அதிக அளவில் வழுக்கியது. இதனால் விமானம் ஓடுபாதையை தாண்டி 10 அடி தூரம் சென்று புல்வெளியில்  நின்றது. எனினும் விமானத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனவே, அதில் இருந்த 82 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஓடுபாதை இந்த அளவுக்கு வழுக்கும் நிலைமையில் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை மீட்க கடற்படை வீரர்கள் இன்று வரவழைக்கப்பட்டுள்ளனர். #MumbaiRains #MHRains
    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் விமானத்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று ரூ. 35 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. #vijaymallya

    பெங்களூர்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற வில்லை.

    மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையா மீது வரி ஏய்ப்பு புகார்களும் உள்ளன. குறிப்பாக சேவை வரித்துறைக்கு அவர் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த சேவை வரியை வசூலிக்க, விஜய் மல்லையாவின் குட்டி விமானத்தை சேவை வரித்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் விற்பனை செய்து பணத்தை பெற சேவை வரித்துறையினர் அறிவிப்பு செய்தனர். முதல் தடவை நடந்த ஏலத்தில் யாரும் அதிக பணத்துக்கு ஏலம் கேட்க வில்லை. இரண்டாவது நடந்த ஏலத்திலும் அதிக தொகை கேட்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது முறையாக அந்த குட்டி விமானம் ஏலம் விடப்பட்டது. அப்போது மல்லையாவின் விமானம் ரூ. 35 கோடிக்கு ஏலம் போனது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று அந்த குட்டி விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மல்லையாவின் விமானம் ஏலம் போய் இருக்கிறது. 650 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பறக்கும் நிலையில் இல்லை. இதனால்தான் அந்த விமானம் மிக, மிக குறைவாக ரூ.35 கோடிக்கு ஏலம் போனதாக தெரிய வந்துள்ளது.

    இந்த சொகுசு விமானத்தில் 25 பேர் பயணம் செய்யலாம். விமான பைலட், பணிப்பெண்கள் 6 பேர் இருந்தனர். இந்த சொகுசு விமானத்துக்குள் படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்த பார் வசதி, கான்பரன்ஸ் ஹால் ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ##vijaymallya #tamilnews

    வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிக்கா சென்ற போது அவர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. #SushmaSwaraj
    புதுடெல்லி

    ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார். இவர் பயணம் செய்த விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானம், திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி செல்ல ஏற்பாடாகி இருந்தது.

    அதன்படி திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு, பிற்பகல் 2.08 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மாலி வான்பரப்பை மாலை 4.44 மணிக்கு கடந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தின் கட்டுப்பாடு மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் மொரீஷியஸ் வான்பரப்பை அடைந்த அந்த விமானத்தால், அந்த நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது ரேடாரின் இணைப்பில் இருந்து விடுபட்டு திடீரென மாயமானது. இதனால் மொரீஷியஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சுஷ்மாவின் விமானம் நடுவானில் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே ‘இன்செர்பா’ (நிச்சயமற்ற நிலை) எனப்படும் உஷார் நிலையை பிறப்பித்தனர். பிரச்சினையில் சிக்கும் விமானங்களை மீட்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் முதல் கட்ட உஷார் நிலை இதுவாகும்.

    எனினும் 14 நிமிடங்களுக்குப்பின் அதாவது மாலை 4.58 மணிக்கு சுஷ்மாவின் விமானம் மொரீஷியஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. பின்னர் அது மொரீஷியசில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பின்னரே விமானப்போக்குவரத்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து புறப்பட்டு தென் ஆப்பிரிக்கா போய் சேர்ந்தார். அங்கு அவரை தென் ஆப்பிரிக்க வெளியுறவு துணை மந்திரி லவெல்லின் லாண்டர்ஸ் வரவேற்றார். தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தின் 125-வது நினைவையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    சுஷ்மாவின் விமானம் சென்ற கடற்பரப்புக்கு மேலான அந்த பாதையில் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. எனவே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இதுபோன்று விமானங்கள் மாயமானால் 30 நிமிடம் வரை காத்திருப்பது வழக்கம். அதன் பின்னரே ‘உஷார்’ நிலை பிறப்பிப்பார்கள்.

    ஆனால் இந்த விமானத்தில் சென்றது முக்கிய பிரமுகர் (மந்திரி) என்பதால் 30 நிமிடம் காத்திராமல், உடனே ‘உஷார்’ நிலையை பிறப்பித்திருக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   #SushmaSwaraj  #tamilnews
    பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்துவிடடனர். இதனால் 10 மணி நேரம் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வழியாக கொச்சி செல்லும் விமானம் இரவு 11 மணிக்கு வந்து பின்னர் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்லும். வழக்கம்போல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியான நேரத்துக்கு அதாவது 11 மணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    2½ மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. 11 மணியுடன் பணி நேரம் முடிந்ததால் மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர்.

    எனவே நள்ளிரவில் வந்த சிங்கப்பூர் விமானம் மீண்டும் கொச்சி புறப்பட்டு செல்லவில்லை. அந்த விமானத்தில் வந்த கொச்சி பயணிகள் 8 பேர் மதுரை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 10 மணி நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். #tamilnews

    துருக்கியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண்ணுக்கு அருகில் அமர்ந்து அசிங்கமான செய்கையில் ஈடுபட்ட ரஷிய ஆசாமி பிடிபட்டார்
    புதுடெல்லி:

    துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் வந்து கொண்டிருந்தது.

    அப்போது விமானத்தில் இருந்த ரஷிய பயணி ஒருவர், அருகில் இருந்த பெண்ணுக்கு முன்னால் தனது பேண்ட் ஜிப்பை கழற்றி சுய இன்பத்தில் ஈடுபட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் விமான நிறுவன ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

    இதையடுத்து, விமான நிறுவன ஊழியர்கள் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். டெல்லி வந்திறங்கிய ரஷிய ஆசாமியை விமான நிலைய போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானம் இன்று தாமதமானதால், ஆத்திரமடைந்த பயணி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #manharmsself #flightdelay
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆத்திரமடைந்த பயணி, தான் வைத்திருந்த பேனாவை எடுத்து தன்னைத் தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அந்த பயணியை விமான நிலைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பயணி மது அருந்தி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. #manharmsself #flightdelay
    சீனாவில் இருந்து திபெத்துக்கு சென்ற விமானத்தின் கதவு நடுவானில் திறந்ததை அறிந்த விமான பயணி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார். #SichuanAirlines
    பெய்ஜிங்:

    சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 128 பேர் இருந்தனர்.

    விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

    இந்த நிலையில் விமானிகள் அறையான ‘காக்பிட்’டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானி லியூ சுயாங் ஷியான் உஷாரானார்.

    அதை தொடர்ந்து அவர் விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பினர்.

    இதனால் விமான லியூ சிசுயானை பயணிகளும், அதிகாரிகளும் பாராட்டினர். இதற்கு முன்பு இவர் சீன விமான படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்தார். #SichuanAirlines #Plane
    ×