search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து"

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-
    பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.
    வாஸ்துவின் அடிப்படை நிலைகள் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் வாழ்க்கை பாதையை இனிமையாக மாற்றிக்கொள்ள தக்க வழிகளை காட்டுவதாகவும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு, மனை ஆகியவற்றின் அமைப்பு பற்றிய தகவல்களை சொல்வது என்பதாக அறியப்பட்டுள்ளது. ஆனால், வாஸ்துவின் அடிப்படை நிலைகள் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் வாழ்க்கை பாதையை இனிமையாக மாற்றிக்கொள்ள தக்க வழிகளை காட்டுவதாகவும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    பூமி வாஸ்து

    நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் நான்கு திசைகளில் எந்த திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது என்பது பற்றி சொல்கிறது. நான்கு பக்கங்களிலும் சாலைகள் கொண்ட மனைகள் கூட இருக்கலாம் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட மனைக்கான சாலை அமைப்பு ஒரு பக்கம் மட்டுமே உள்ளதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் உள்ளதா என்ற தகவல்களையும் குறிப்பிடுகிறது. கண்களுக்கு தெரியாத சல்லிய தோஷங்கள், மனையின் சுற்றுப்புறம், மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்னர் மனை எப்படிப்பட்ட பகுதியாக இருந்தது என்ற செய்திகளை குறிப்பிடுகிறது. மேலும், அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் வழிகாட்டுகிறது.

    கட்டிட வாஸ்து

    வீடுகள், அடுக்குமாடிகள், பொது கட்டமைப்புகள் ஆகியவற்றின் வகைக்கேற்ப அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள் கட்டமைப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இப்பகுதி விளக்குகிறது. சொந்த வீடு அல்லது வாடகை வீடு சம்பந்தமான விஷயங்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டுமானங்களின் அமைப்பு முறை பற்றியும் இப்பகுதியில் காணலாம். மனை அல்லது இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எந்த காலகட்டத்தில் கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்ற செய்திகள் இப்பகுதில் சொல்லப்படும்.

    கட்டுமானம் அமையும் இடத்தின் நான்கு பிரதான திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் பற்றியும், அவற்றின் அமைப்புகள் பற்றியும் இப்பகுதி குறிப்பிடும். பிரதான நுழைவாசல், வரவேற்பறை, வீட்டிற்கு பின்புறம் உள்ள வாசல்கள், சமையலறை, உணவு அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின் சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம் டாய்லெட் போன்ற அனைத்து அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

    இருக்கை வாஸ்து

    வீடுகள் மற்றும் வியாபார, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகளில் அமரும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் ஆகியவை பற்றி இப்பகுதி கூறுகிறது. அலுவலகம் அல்லது பொது கட்டிடம் ஆகியவற்றில் பணி புரிபவர்கள் அமரும் மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய தகவல்களை இப்பகுதி தருகிறது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பமான தகவல்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது.

    வாகன வாஸ்து

    இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துச் சாதனங்கள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. (மன்னர்கள் காலத்தில் தேர், வண்டி, பல்லக்கு ஆகியவை பற்றி சொல்லப்பட்டது) இன்றைய நாகரிக காலகட்டத்தில் வீடுகளில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் ஒன்றாவது இருப்பது அவசியமாக மாறி இருக்கிறது. அந்த வாகனங்களை வீட்டில் எங்கு நிறுத்த வேண்டும், எந்த திசை நோக்கி நிறுத்த வேண்டும், அவற்றின் வாராந்திர பூஜை போன்ற விஷயங்களை இப்பகுதி குறிப்பிடுகிறது. பயணங்களுக்கு துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி வாஸ்துவின் இப்பிரிவு கவனம் கொள்கிறது.
    தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது.
    வாஸ்து ஸ்லோகம்

    ஓம் வாஸ்து புருஷாய நம
    ஓம் ரத்தலோசனாய நம
    ஓம் க்ருஷ்யாங்காய நம
    ஓம் மஹா காயாய நம

    அனைவரின் வீட்டையும் ஆட்சி புரியும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்குரிய வாஸ்து ஸ்லோகம் இது. தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது. மாதத்தில் வரும் வாஸ்து தினத்தில், வாஸ்து புருஷருக்குரிய நேரத்தில் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது நமது பாரத நாட்டின் மிகவும் தொன்மையான ஒரு கலையாகும். தேவலோக சிற்பியான மயன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் வகையில் இக்கலையை மனித குலத்திற்கு தந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு மனையிலும் வாஸ்து பகவான் எனப்படும் வாஸ்து புருஷன் வீற்றிருக்கிறார். அவரின் அருளை அதிகம் தரும் இந்த வாஸ்து ஸ்லோகத்தை வீட்டில் துதிப்பதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய விஷயம். ஆனால், இன்றைய காலகட்டம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது பலருக்கும் அனுபவமாக உள்ளது.

    இரண்டு வித முறைகள்

    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    முதலாவது வழிமுறை


    இந்த வழிமுறையானது ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது,

    * அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

    * அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

    * மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து முன்னதாக வைத்துகொள்வது அவசியம். மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதன் மூலம் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.



    இரண்டாவது வழிமுறை

    வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவற்றை வாங்குவது தாமதமாகி கொண்டு இருக்கக்கூடும். அது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு வாஸ்து கிரக வசிய முறை என்ற வழி வாஸ்து வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிக்கும் நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

    வாஸ்து விழித்தெழும் நாட்கள்

    * சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.

    * வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.

    * ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.

    * ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.

    * ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.

    * கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.

    * தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.

    * மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.

    மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்து கொள்ளலாம் பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அங்கு வாஸ்து குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டா என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதற்காக கட்டிய வீட்டை இடிக்க முடியாது. ஆனால் சில எளிய பரிகார பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் தீர்வு காணலாம்.

    இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான

    1. பிரமிடு

    2. செப்பு தகடுகள்

    3. கிரிஸ்டல்கள்

    4. வாஸ்து பரிகார பூஜைகள்

    5. வாஸ்து மணி

    6. வாஸ்து மரம்

    7. நீர் விழ்ச்சி

    8. வாஸ்து குபேர பொம்மைகள்

    9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது

    10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி

    11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,

    12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது

    இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.

    இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
    புதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    புதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்த மாதத்தில் குடிபுக வேண்டும் என்பது போல, எந்த மாதத்தில் குடியேறக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி...

    * ஆனி மாதத்தில் புதிய வீட்டில் குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான், மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.

    * புதிய வீட்டிற்கு ஆடி மாதத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதத்தில் தான், இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தனது கோட்டையை இழந்தார்.

    * புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிபோவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் பிரகலாதனின் தந்தையான இரணியன், தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

    * புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க மார்கழி மாதமும் உகந்ததல்ல. ஏனென்றால், மகாபாரதத்தில் வரும் கவுரவர்களில் முக்கியமானவனான துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தது, இந்த மாதத்தில் தான்.

    * மாசி மாதத்திலும் புதிய வீட்டில் குடிபோகக் கூடாது. ஏனெனில் அந்த மாதத்தில் தான், திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் மயக்கமுற்றார்.

    * பங்குனி மாதத்தில் புதிய வீட்டில் குடியேறுவதும் தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்த மாதத்தில் தான், இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் மன்மதனை, சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.

    பொதுவாக ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
    புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிறந்த மாதம்

    * சித்திரை
    * வைகாசி
    * ஆவணி
    * ஐப்பசி
    * கார்த்திகை
    * தை

    சிறந்த நாட்கள்

    * திங்கட்கிழமை
    * புதன் கிழமை
    * வியாழக்கிழமை
    * வெள்ளிக்கிழமை

    சிறந்த நட்சத்திரங்கள்


    அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

    சிறந்த லக்னம்

    * ரிஷபம்
    * மிதுனம்
    * கன்னி
    * விருச்சிகம்
    * கும்பம்
    ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.
    தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும். பொதுவாக வடக்கிலே தலைவைத்துப் படுத்தால், வம்சம் விருத்தியடையாது என்பார்கள்.

    ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால், வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும். தெற்கில் தலை வைப்பதும் அவ்வளவு நல்லதல்ல.

    கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் தான், தலைவைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்ற திசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜ கிரகமான சூரியன் உதிப்பது அந்த திசையில் தான்.

    வீட்டின் கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.
    வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், மனதுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.

    மந்திரம் :

    ஓம் வாஸ்து புருஷாய நம:
    ஓம் ரத்தலோசனாய நம:
    ஓம் க்ருஷ்யாங்காய நம:
    ஓம் மஹா காயாய நம:

    வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி விடும்.

    வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!
    வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!

    உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

    வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம். வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களையும் வைத்திருக்கக் கூடாது.

    தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.

    வீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.

    உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

    வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.
    புது வீடு கிரக பிரவேசம் செய்ய உகந்த தமிழ் மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள், ராசிகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாதங்களில் உகந்தது.

    2. அசுவினி, ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் சிறந்தது.

    3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய தினங்களில் சித்த அல்லது அமிர்த யோகம் உள்ள சமயம்.

    4. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய லக்கனங்கள்.

    5. மேற்கூரை கட்டாமலும் கதவு போடாமலும் சுவர் தரை பூசாமலும் புதுமனை கிரகப்பிரவேசம் நடத்தக் கூடாது.

    கோ(பசு) பூஜை செய்ய

    புரட்டாசி 23 ( 9-10-2018) செவ்வாய்க்கிழமை ஜப்பசி 18 (4-11-2018) ஞாயிற்றுக்கிழமை ஜப்பசி 22 (8-11-2018) வியாழக் கிழமை ஆகிய 3 நாட்களும் கோ பூஜை செய்ய மிக மிக உகந்த நாட்களாகும். இந்நாட்களிலும் அமா வாசை தினங்களிலும் பசுக்களுக்கு பூஜை செய்யவும். அகத்திக்கீரை கொடுக்கவும். அபரிமிதமான நல்ல பலன்கள் ஏற்படும்.
    ×