search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்துடன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் காஞ்சனா 3 படத்தின் டீசர் இணைந்துள்ளது. #Petta
    ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்த படத்தில் வேதிகா மற்றும் ஓவியா கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும், இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

    படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோ‌ஷன் போஸ்டருடன் கூடிய பர்ஸ்ட் லுக் டீசரை ‘பேட்ட’ படத்துடன் வெளியிட முடிவு செய்துள்ளனர்.



    ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார். கோடை விடுமுறையை கணக்கில் கொண்டே, இந்த தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு. ‘காஞ்சனா’ படத்தின் 2 பாகங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் திரும்ப இருக்கிறார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 29-ந்தேதி 2.0 படம் வெளியானது. அடுத்து அவர் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் படப்பிடிப்புகளில் இருந்த ரஜினி சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார்.

    இன்று மாலை தனது குடும்பத்தினருடன் ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் திரும்ப இருக்கிறார்.

    ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தான் தனது அரசியல் வருகையை ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். பின்னர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கினார்.


    அரசியல் வருகையை அறிவித்து ஒரு ஆண்டு முடிவடைவதால் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரஜினி அமெரிக்கா செல்கிறார். பொங்கலுக்காவது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram
    ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #PettaCensoredUA
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் நிலையில், பேட்ட படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth

    ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #SuperStarTV
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கூறி சரியாக ஓராண்டு முடியப் போகிறது.

    ஆனால் இன்னமும் அவர் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவரது கைவசம் சில சினிமா படங்கள் இருப்பதால், தற்போது அவரது முழுக் கவனமும் அந்த படங்களை முடித்துக் கொடுப்பதிலேயே உள்ளது.

    இதற்கிடையே ரஜினி தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக “ரஜினி மக்கள் மன்றம்” எனும் அமைப்பை உருவாக்கி உள்ளார். 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் ரஜினி மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வளவு வேலைகள் நடந்தாலும் ரஜினி தனது புதிய அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரஜினி கட்சியின் டி.வி. சேனல் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும் கடந்த மாதம் 9-ந்தேதி “டிரேடு மார்க் ரிஜிஸ்டிரார்” அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதில் ரஜினி கட்சி டெலிவி‌ஷனுக்கு மூன்று பெயர்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பெயர்களில் “சூப்பர் ஸ்டார் டி.வி.” எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து டி.வி. சேனல் பெயருக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


    மேலும் சூப்பர் ஸ்டார் டி.வி. பெயர் அருகில் ரஜினி படத்துடன் லோகோ ஒன்றும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நடிகர் ரஜினியும் “டிரேடு மார்க்”கை பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “சென்னை அண்ணாநகர் கிழக்கு என் பிளாக் லோட்டஸ் காலனியில் வசிக்கும் வி.எம். சுதாகர் எனது பெயரில் டெலிவி‌ஷன் சேனல் தொடங்க விண்ணப்பித்துள்ளது தொடர்பாக இந்த கடிதம் தருகிறேன். சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. பெயர்களை பயன்படுத்த எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறி உள்ளார்.

    மேலும், “அந்த சானலில் எனது புகைப்படம், லோகோ, லேபிள் போன்றவற்றை பயன்படுத்தவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனவே சுதாகர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினியின் கடிதத்தை தொடர்ந்து விரைவில் தடை இல்லா சான்றிதழ் வழங்குவார்கள் என்று தெரிகிறது. என்றாலும் ரஜினி கட்சியின் டி.வி. சேனல் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய தகவல்களை ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான தமிழக கட்சிகள் தங்களுக்காக டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. அதன் மூலம் அந்தந்த கட்சி தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ரஜினி கட்சிக்கும் டெலிவி‌ஷன் சேனல் வரும்பட்சத்தில் அதில் ரஜினி தொடர்பான தகவல்களை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். #Rajinikanth #SuperStarTV
    ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை என்னவென்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘பேட்ட’ சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் தனது முந்தைய படங்களான ‘கபாலி’யில் மலேசிய தாதாவாகவும், ‘காலா’வில் மும்பை தாதாவாகவும் நடித்து இருந்தார். 2.0 படத்தில் எந்திரனாகவும், விஞ்ஞானியாகவும் இரு வேடங்களில் வந்தார். அவரது நடிப்பில் அடுத்தாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

    மதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. படம் மலைப்பகுதியில் நடக்கும் கதை என்று இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அத்துடன் மதுரை பின்னணியிலும் படம் உருவாகி இருக்கிறது. 

    வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர். இமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்றும் கூறினர்.



    இந்த நிலையில், தற்போது நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.

    இந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. #Petta #Rajinikanth

    பிரபல மேக்-அப் மேனும், ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேனுமான முத்தப்பா இன்று காலை காலமானார். #MakeupMan #Muthappa #Rajinikanth
    நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 75வது வயதில் இன்று காலை காலமானார். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக ஒப்பனை செய்த இவர், கமல்ஹாசனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ உள்பட பல படங்களில் ஒப்பனையாளராகப் பணியாற்றியவர்.

    ‘ஏவிஎம்’ முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்போதைய முன்னணி இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன், சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன் செட்டியார் அவர்களால் மேக்-அப் மேனாக வாழ்க்கையைத் துவக்கியவர் முத்தப்பா.

    60 ஆண்டுகளாக ஹீரோ-ஹீரோயின்களுக்கு மேக்-அப் போட்டு ஜொலித்த முத்தப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களிடம் மேக்-அப் மேனாக பணியாற்றியவர்.



    ஒரு கட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். அத்துடன் ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார்.

    இத்தகைய புகழ்பெற்ற மேக்-அப் மேன் முத்தப்பா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
     நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    கஸ்தூரிராஜாவுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. #Rajinikanth #MadrasHighCourt
    சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் முகன்சந்த் போத்ரா.

    இவர், திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து முகன்சந்த் போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் குற்றவியல் கோர்ட்டில் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்தார். 

    இந்த வழக்கு விசாரணைக்கு முகன்சந்த் போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முகன்சந்த்போத்ரா வழக்கு தொடர்ந்தார்.



    இதற்கிடையே தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ரஜினி தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உரிமையியல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியாது, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருடைய வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது. 

    இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி உத்தரவு இன்று வெளியாகி இருக்கிறது. அதில், ரஜினிகாந்த்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்து உத்தரவிட்டார். #Rajinikanth #MadrasHighCourt #MuganchandBothra

    ரஜினியின் `பேட்ட' படமும், அஜித்தின் `விஸ்வாசம்' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Viswasam
    ரஜினிகாந்த் நடிப்பில் `பேட்ட' படமும், அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படமும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய கதாநாயகர்களின் படங்கள் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடு என்பதை சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களைப் பொறுத்த வரை ரஜினியின் பேட்ட படத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எந்தெந்த படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது ஜனவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.



    இந்த வாரத்தில், 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. #Petta #Viswasam

    `பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், முருகதாஸ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். #Rajinikanth166 #ARMurugadoss
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருந்த நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூலை தொடவிருக்கிறது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.



    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

    அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பின்னரும் படம் தமிழகம் முழுவதும் 398 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

    சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.

    உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.



    தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.

    2.0 படம் நேற்று வரை தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக 3டி வசதி கொண்ட தியேட்டர்களில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகிறது. 2டி பதிப்பை விட 3டி வசதியில் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

    இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய கதாநாயகர்களின் படங்கள் வருகின்றன. 2.0 படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ம்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.



    முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தின் சில பகுதிகளை கைப்பற்றியிருந்ததாக பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். #Petta #Rajinikanth

    சென்னையில் நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajini #KarunanidhiStatue
    சென்னை:

    சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.



    நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். #Rajini #KarunanidhiStatue

    ×