search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் இதற்கு ஒரே வழி.



    கேள்வி:- ‘பேட்ட’ பட டீசர் பற்றி...

    பதில்:- நல்லா வந்திருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

    கேள்வி:- ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிப்பீர்களா?

    பதில்:- முதலில் ‘பேட்ட’ படம் திரைக்கு வரட்டும். அது பற்றி பின்னர் பார்ப்போம்.

    கேள்வி:- ரிசர்வ் வங்கி இயக்குனர் ராஜினாமா பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- அதில் உண்மையை சரியாக தெரிஞ்சுக்காமல், என்னால் பதில் சொல்ல முடியாது.

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஓராண்டு ஆகிவிட்டதே...

    பதில்:- இதற்கு பல முறை பதில் சொல்லிவிட்டேன்.

    இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
    மேகதாது பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். #Mekadatudam #Rajinikanth
    சென்னை:

    ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?



    பதில்:- மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் இதற்கு ஒரே வழி.

    கேள்வி:- ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதே?

    பதில்:- ரிசர்வ் வங்கி கவர்னர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்ற உண்மையை தெரியாமல் என்னால் பேச முடியாது.

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகப் போகிறது. இப்போது அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- அதை நிறைய முறை சொல்லி விட்டேன்.

    கேள்வி:- உங்களின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வரும்?

    பதில்:- “பேட்ட” படம் வெளி வந்ததும் அடுத்த படம் பற்றி பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekadatudam #Rajinikanth

    ரஜினியின் பேட்ட டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது. #Petta #Rajinikanth
    ‘2.0’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘பேட்ட’.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

    ரஜினிகாந்துக்கு நேற்று 69 ஆவது பிறந்தநாள். ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியானது. ரஜினிக்கே உரிய தனி ஸ்டைலில் அவர் நடந்து வரும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

    ரஜினியின் இரண்டு வேறுபட்ட கெட்டப்களுடன் வெளியாகியுள்ள ‘பேட்ட’ டீசர் 1.32 நிமிடங்கள் ஓடுகிறது. டீசரில் ரஜினியின் ஸ்டைலும் அனிரூத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    மிகவும் இளமையாக, தன்னுடைய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். நேற்று காலை 11 மணிக்கு வெளியான ‘பேட்ட’ டீசர் ரிலீசான 5 நிமிடத்தில் தன்னுடைய சாதனையை தொடங்கி விட்டது.

    20 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்த டீசர் அதே வேகத்தில் 40 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.

    பேட்ட படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் மாறிமாறி தங்களை ரஜினியின் ரசிகன் மட்டும் அல்ல ரஜினியின் வெறியன் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.


    எனவே முழுக்க ரஜினி ரசிகர்களால் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக ‘பேட்ட’ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தற்போது வெளியாகியுள்ள டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.

    முழுக்க ரஜினியின் மாஸ் காட்சிகளின் சில காட்சிகளை ஒருங்கிணைத்து டீசரை வடிவமைத்துள்ளனர். ரஜினியின் பஞ்ச் வசனம் உள்ளிட்ட எந்த வசனமும் டீசரில் இல்லை.

    டீசரின் முடிவில் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் சிரிப்பும் மரண மாஸ் பாடலின் சில வரிகளும் இடம் பெற்றுள்ளன. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளதால் டீசர் முழுக்க ரஜினி மட்டுமே உள்ளார். வேறு எந்த கதாபாத்திரமும் காட்டப்படவில்லை.

    விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் உஷாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி பதவியேற்று ஓராண்டாகிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்று பெற்றுள்ளது. மோடியை வீழ்த்தும் வகையில் ராகுல்காந்தி வளர்ந்துள்ளார்.

    இந்த தோல்வியை ஏற்று கொண்டு மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழிசை பேச்சு மரண ஓலம் போல் உள்ளது. அவர் சொல்வது போல் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று எதுவும் கிடையாது. தமிழிசை பாரதிய ஜனதாவை விட்டு தனிக்கட்சி தொடங்க வேண்டும். அப்போது தான் அவர் ஒரு வார்டிலாவது வெற்றி பெற முடியும்.


    நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருக்க வேண்டும். பா.ஜனதா வலுவிழந்து வருகிறது என்று ரஜினி கூறியதை நான் வரவேற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் பி.ஜே.பி.யுடன் உஷாராக இருக்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்வது மோடியின் செயல்பாடுதான் காரணம். தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    கஜா புயல் பாதிப்பிலும் கமி‌ஷன் அடிக்க தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. சென்னிமலையில் பெட்சீட் தேங்கி கிடக்கிறது. இதை வாங்காமல் வெளி மாநிலங்களில் கமி‌ஷனுக்காக கொள்முதல் செய்துள்ளனர்.

    இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசீட் வாங்காது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #MKStalin #PonRadhakrishnan
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து அனுப்பி உள்ளார்.

    தமிழக ப.ஜனதா தலைவர் அலுவலகமும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளது. பா.ஜனதா எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டரில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்துக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் அவரது நீடித்த ஆயுள், ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    ரஜினிகாந்த் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு டுவிட்டரில் நன்றியை தெரிவித்து உள்ளார். #Rajinikanth #MKStalin #PonRadhakrishnan
    ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    டீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.


    அதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டரில், நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழத்துக்கள் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் இந்த ஆண்டும் நான் சென்னையில் இருக்க மாட்டேன், எனவே ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ரஜினி நேற்று சென்னையில் இருந்து புறப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #KamalHaasan #HBDSuperStarRajinikanth #HappyBirthdayThalaiva #HappyBirthdaySuperstar 

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். #2018electionresults #Rajinikanth
    சென்னை:

    வெளியூர் செல்வதற்காக இன்று மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்த செய்தியாளர்கள்  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரது கருத்தை அறிய முயன்றனர்.



    அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #2018electionresults #Rajinikanth
    ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை நாளை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth #PettaBirthdayTrEAtSER
    '2.0' படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

    அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

    ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு 12-12-2018 (நாளை) பேட்ட படத்தின் டீசரை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்திருக்கிறது. #Petta #Rajinikanth #PettaBirthdayTrEAtSER


    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல் `பாகுபலி 2' படத்தின் வசூலை முந்தியிருக்கிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2
    ரஜினி, அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.

    ‘2.0’ படம் தமிழ் உள்பட வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ‘2.0’ தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால் சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ந் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன்மூலம் ரூ.18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது.



    சென்னையில் வசூலாகி உள்ள தொகை படம் பார்ப்பதற்கு கொடுக்கப்பட்ட 3டி கண்ணாடி கட்டண தொகையும் உள்ளடக்கியது. 3டி கண்ணாடி தொகையைச் சேர்க்காமல் என்றால், 17 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

    அதைச் சேர்க்காமல் வரும் வசூலில் ‘பாகுபலி-2’ படத்தை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருகிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2

    பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் என்பதை குறிப்பிட்டு சொன்னார். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது,

    சின்ன வயதில் இருந்தே எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் தலைவர். இப்போ வரை நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவருடன் பணியாற்றியது ஒரு கனவு போல இருக்கிறது. எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம். 

    சின்ன வயதில், தலைவரை திரையில் பார்க்க தான் தியேட்டருக்கே போவோம். நான் படம் எடுத்தால், அதை தலைவர் பார்ப்பாரா, பாராட்டுவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான். பாராட்டனும்னு அவசியமே இருக்காது. ஆனாலும் பாராட்டுவார். 2.0 படத்தில் சொல்வது போது பாசவிட்டிங் ஆரா தலைவர் தான். 2.0 படத்தில் முனிவருக்கு தான் அதிகமான பாசிட்டிங் ஆரா இருக்குனு சொல்லிருப்பாங்க, ஆனால் அதைவிட தலைவருக்கு நிறைய பாசிட்டிவ் ஆரா இருக்குது.



    பீட்சா படம் ரிலீசான போது ரஜினி சார் வீட்டில் இருந்து போன் வந்த போது நம்பவில்லை. அவர் பேசிய பிறகு தான் நம்பினேன். சூப்பரா பண்ணியதாக சொன்னார். நாம் படம் பண்ணியதற்கான பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். அவருடன் படம் பண்ணுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஜிகர்தண்டா படம் பண்ணிய போது எப்படியாவது இந்த முறை தலைவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கருணாகரன் தலைவருடன் லிங்கா படத்தில் நடித்து வந்தார். அவர் மூலமாக நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பிளான் பண்ணோம். பார்த்துவிட்டோம். 

    நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார். அடுத்ததாக அவரை சந்திக்கும் போது ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொன்னார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரிடம் கதை சொன்னேன்.

    படப்பிடிப்பில் இயக்குநரான எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். இருந்தாலும், தலைவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் தான். இந்த கதை பண்ணால் நான் மட்டும் தான பண்ண முடியும். கண்டிப்பாக பண்ணுவோம் என்றார். பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார். ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறிவிட்டது. எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர். அவரை பார்த்து தான் நானும் பெரிய ரசிகனானேன். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj

    விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார். #Petta #PettaAudioLaunch #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்கான பாராட்டு இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்திற்கு உரியது. அந்த படத்தில் வேலை செஞ்ச தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டினால் பத்தாது. 2.0 படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன் தான்.



    அந்த படத்தை முடிக்க முடியாம தவிச்ச போது, கலாநிதி தான், எனக்காகவும், ஷங்கருக்காகவும் அந்த படத்தை வாங்கி தயாரித்தார். அந்த படம் வெற்றியடைஞ்ச பிறகும் எனக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுத்தார். 2.0 படம் எடுக்க முடிவு செய்த போது, சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடியாததால் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

    திரும்பவும் தயாரிப்பில் இறங்கிய பிறகு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னு சொன்னேன். சில இயக்குநர்களிடம் கதை கேட்டோம். எதுவும் செட்டாகவில்லை. அப்போ கார்த்திக் ஒரு கதை சொன்னது ஞாபகம் வந்தது. அவரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட போது எனக்கு ரொம்ப பிடிச்சது. அதை தயாரிப்பாளரிடம் சொல்ல சொன்னேன். பின்னர் தான் படம் ஓகே ஆச்சு. 

    பேட்ட படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்பு தொல்லை. வெளி மாநிலத்தில் பண்ணோம். கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தார்.

    சரி வில்லன் கதாபாத்திரத்தை பண்ணப்போவது யார்  என்று கேட்டேன். விஜய் சேதுபதி பண்ணுவார் என்று கார்த்திக் கூறினார். எனக்கு சந்தேகம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கார்த்திக் சொன்னார். பின்னர் விஜய் சேதுபதி ஒத்துக்கிட்டதாக அடுத்த நாளே சொன்னார்.



    விஜய் சேதுபதியோட படம் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல நடிகர். அதைவிட அவர் நல்ல மனிதர். அவர் சாதாரண நடிகன் இல்லை. மகா நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன செய்யனும், எப்படி செய்தால் நல்லா இருக்கும், அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என்று கேள்வி மேலலே கேள்வி கேட்டு புதுசா யோசிச்சு செய்வார். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். அவருடைய பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. அவர் ஒரு மனநல மருத்துவர் மாதிரி. ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம்.

    பிளாஷ்பேக் ஹீரோயினான திரிஷா நடிச்சிருக்காங்க. அந்த கதாபாத்திரம் பண்ண திரிஷாவே தயாராக இருந்தார். சிம்ரனுடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது. சிம்ரன் நடிக்கிறார் என்றதும் படக்குழு சந்தோஷமாக இருந்தார்கள்.

    சசிகுமாரின் கதாபாத்திரம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக இருக்கும்படியான கதாபாத்திரம். 42 ஆண்டுகளில் நான் பார்த்த மனிதர்களில் சிறந்த மனிதர் சசிகுமார். நவாசுதீன் சித்திக் எது செய்தாலும் வித்தியாசமாக இருக்கும்.



    என்னோட ஒவ்வொரு ரசிகரும் எப்படி ஆசைப்படுவாங்களோ அதை யோசித்து, பேசி கேட்டு கேட்டு பண்ண வைத்தார் கார்த்திக். யூனிட் முழுவதும் எனது ரசிகர்களாக இருந்ததால் ரசித்து எடுத்துள்ளார்கள். 

    ஷங்கர் எப்படி பிரம்மாண்டமோ, அதேபோல கார்த்திக்னா ஸ்டோரி கில்லிங் தான். 

    சிறிய வயதில் இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். அப்போவே இவருக்குள் ஏதோ இருக்கு. பெரிய ஆளா வருவார் என்று நினைத்தேன். 3 படம் பண்ணும் போது, அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று தனுஷ் சொன்னாரு. பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக பேட்ட படத்தை பார்க்க போறீங்க.

    கார்த்திக் சுப்புராஜை பார்க்கும் போது ஏ.சி.சுலோக் சந்தர் ஞாபகம் வருகிறது.

    அப்பறம் பிறந்தநாள் வரப்போகுது. பிறந்நாளுக்கு இங்கே இருக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். வீட்டிற்கு வந்து ஏமாற வேண்டாம். என்ன நடிக்க வைத்த கார்த்திக், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட படக்கழு அனைவருக்கும் நன்றி என்றார். #Petta #PettaAudioLaunch #Rajinikanth

    ×