search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.

    அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.

    அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் முறைப்படி கட்சி தொடங்காமல் தாமதித்து வந்தார்.

    அரசியல் ஈடுபாட்டுடன் புதியதாக சினிமா படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என்று கூறி உள்ளார்.

    ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.

    நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

    தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Rajinikanth
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது. உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #PulwamaAttack #Rajinikanth
    விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
    மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.

    டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.



    இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.



    விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
    மணமக்கள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Rajini #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், நேற்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 



    இந்நிலையில், மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் மகள் சவுந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின், மத்திய அமைச்சர், திரு.பொன்ராதா கிருஷ்ணன், திரு.முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு.திருநாவுக்கரசர், திரு.அமர்நாத், திரு.கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’. 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். #Prakashraj #pmmodi #parliamentelection #rajinikanth

    பெங்களூரு:

    பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார்.

    கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

    நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.


    பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

    அந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.

    ரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Prakashraj #pmmodi #parliamentelection #rajinikanth 

    நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

    9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.

    சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.



    திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



    நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.

    திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan

    ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth
    ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளை (10-ந்தேதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது.

    திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

    பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.



    அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. மரம் வளர்க்க விரும்புபவர்கள், முடிந்தவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வீசி எறிந்தால் போதும். அந்த விதை செடியாக வளர்ந்துவிடும். ரஜினியின் இந்த அசத்தல் ஐடியாவுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது.

    அதைத் தொடர்ந்து 11-ந்தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. #Rajinikanth166 #YogiBabu
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கான நடிகர்கள் தேர்வை தொடங்கியுள்ளது படக்குழு.

    இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவிடம் பேசியுள்ளனர். யோகிபாபு தற்போது ‘தளபதி 63’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.



    இதன்மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடிக்க உள்ளார் யோகிபாபு. முன்னதாக ‘பேட்ட’ படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். #Rajinikanth166 #YogiBabu #ARMurugadoss

    என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.

    ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.

    நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.

    அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?

    ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.

    இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.



    சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.

    இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.

    கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

    பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.



    இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.

    சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.



    இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.

    பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

    நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

    ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

    டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.



    மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.

    ‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்...’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.

    விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது, அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே என்று சினிமா நிகழ்ச்சியொன்றில் சீமான் பேசினார். #MigaMigaAvasaram #Seeman
    சென்னை:

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.

    பெண் காவலர்களின் அன்றாட பிரச்சனையை பேசும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருக்குமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.

    இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.

    சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்து விட்டார்கள். சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.



    இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன். தலைவருடன் பேசினேன். தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள். அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30 சதவீத இடங்கள் வேண்டும் என குரல் கொடுக்க இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

    அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம். அந்த தீ இன்னும் அணையவில்லை. தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம். இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்.”

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman #MigaMigaAvasaram
    நவாசுதீன் சித்திக் நடிப்பில் தாக்கரே படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், ரஜினி, கமலை ஒப்பிட வேண்டாம் என்றும், மீண்டும் கமலுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். #NawazuddinSiddiqui
    பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக், தாக்கரே படத்தில் பால் தாக்கரேவாக நடித்து அசத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது தாக்கரே படத்தில் நடித்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி கொள்ளவேண்டும். உடன் நடித்த நடிகர்களில் தமிழில் விஜய் சேதுபதியையும், ரஜினியையும் ரொம்பவே பிடித்தது. ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்ய ஆசைப்படுகிறார். அதையே செய்கிறார்.



    இது பெரிய வி‌ஷயம். கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் கமல் மிகச்சிறந்த நடிகர். கமலின் ஹேராம் படத்தில், ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன். அவருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். #NawazuddinSiddiqui #Thackeray #Rajinikanth #KamalHaasan

    ×