search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் நடிகர் ரஜினியை ஒருவர் கத்தியால் குத்தவந்தபோது ஸ்டன்ட் நடிகர் அதிரடி அரசு கத்திக்குத்தை வாங்கிக் கொண்டு ரஜினியை காப்பாற்றினார். #Rajinikanth #AthiradiArasu
    தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பதற்கு பெயர் போன நடிகர் அதிரடி அரசு. இவர் இயக்கி நடித்துள்ள படம் ‘கபடி வீரன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகர் ராதாரவி, நடிகை நமீதா, அபிராமி ராமநாதன் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிக்கு பதிலாக கத்திக்குத்து வாங்கி அவரது உயிரை காப்பாற்றியவர் அதிரடி அரசு எனக் கூறினார்.



    இதுகுறித்து அவர் பேசியதாவது, “ ரிஸ்க் எடுப்பதற்கு பெயர் போனவர் அதிரடி அரசு. நாம் சொல்லி முடிக்கும் முன்பே அந்த வி‌ஷயத்தை செய்து முடித்துவிடுவார். அந்த அளவுக்கு ஆர்வம் மிக்கவர். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால், கத்தியுடன் வந்து நின்றுவிடுவார். இவர் வருகிறார் என்றாலே எனது அலுவலகத்தில் உள்ளோர் பயப்படுவார்கள்.

    மிகுந்த தைரியசாலி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு திடீரென கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர். அப்போது குறுக்கே விழுந்து கத்திக்குத்து வாங்கி ரஜினியின் உயிரை காப்பாற்றியர் அதிரடி அரசு தான்” என அவர் தெரிவித்தார். #Rajinikanth #AthiradiArasu #KabbadiVeeran

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். #seeman #Rajinikanth #pmmodi

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கொடநாடு பிரச்சினையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள காவல்துறையால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதன் முதலாக போராட்டம் நடத்தியது நாங்கள்தான்.

    காங்கிரஸ் கட்சி குடும்ப சொத்து, இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை என கருதுகிறேன். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பொய் பேசி வருகின்றனர். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு ஓட்டுபோடுவோம் என்று யாரும் கூறவில்லை. கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

    மாநில கட்சிகள்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமர் யார் என்று தீர்மானிப்பார்கள். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், கூட்டாட்சி தத்துவம் சிறப்படையும். ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கப்படும். மாநில கட்சிகள் அதிகாரம் பெற்று இந்தியாவை கூடி பேசி கூட்டாட்சி செய்தால்தான் சரியானதாக இருக்கும்.

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆட்சி முடிவடையும் போது நலத்திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டுகின்றனர். தேர்தல் முடிந்த உடன் ஒருமித்த கருத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.


    கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வர வேற்கிறோம். ஆனால் அவர் முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். #seeman #Rajinikanth #pmmodi

    ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi
    நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார்.

    சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

    அதனை தொடர்ந்து சவுந்தர்யா, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.



    விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவில் படித்தவர். ‘வஞ்சகர் உலகம்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர்.

    தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. “சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பிப்ரவரி 9-ந் தேதி முதல் மெகந்தி, வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்தனர்.

    ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுக்க இருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.


    இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்தார். நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth
    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தை 100 தடவைக்கும் மேலாக பார்த்திருப்பதாக பிரபல இசையமைப்பாளர் கூறியிருக்கிறார். #Petta
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேட்ட’ படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதற்கு இசையமைப்பாளர் அனிருத், பின்னணி இசையமைக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். 



    மேலும் ரசிகர்கள் பலர் தாங்கள் எத்தனை முறை படத்தை பார்த்தார்கள் என்பதையும் பதிவு செய்து வருகிறார்கள். #Petta #Rajini #Rajinikanth
    பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் போது விஜய் சேதுபதிக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார். #Petta #VijaySethupathi #Rajinikanth #Rajini
    ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு ரஜினி அறிவுரை வழங்கியுள்ளார். 

    ”படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போது தான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் பின்னர் தயாரிக்கலாம்” என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளார் ரஜினி.



    ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய்சேதுபதி. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. தற்போது, அந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள்.
    ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தை அரசுப் பேருந்தில் திரையிட்டதற்கு ரஜினி ரசிகர்கள் புகார் தெரிவித்த நிலையில், நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth #Vishal
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா நடித்த பேட்ட படம் கடந்த 10-ந் தேதி வெளியானது. படம் ரிலீசான சில மணி நேரங்களில் இணையதளத்திலும் வெளியானது.

    இந்த நிலையில் கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் பேட்ட படம் திருட்டுத்தனமாக ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ரஜினி ரசிகர்களின் புகார் டுவீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-


    ‘பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். பேட்ட படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். #Petta #Rajinikanth #PettaPiracy #Vishal

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் இசையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
    இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ந் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.



    இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவருமே கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    `பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுக்கிறது. 

    சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ரஜினி இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனக்காக மற்றுமொரு கதையை தயார் செய்யும்படி கார்த்திக் சுப்புராஜிடம், ரஜினி கூறியுள்ளாராம். மேலும் ரஜினி - ராஜமவுலி கூட்டணியும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss

    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். #RajiniKanth
    சென்னை:

    ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

    எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மஹால் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் இரா.அபிராமி, மாநில அமைப்பு செயலாளர்கள் என்.ஜி.கலைவாணன், சு.ப.தமிழ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் மகன் செல்வம், மாவட்ட செயலாளர்கள் பெரம்பூர் துரைராஜ், கே.எம்.ஆறுமுகம், சங்கரலிங்கம், பெ.சிவகுமார், சேவியர், கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் கருணாகரன், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஆர்.பி.வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்பது, நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆரம்பித்த இயக்கம். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது, வீடியோ காட்சிகளை படம் எடுத்து தமிழகத்தில் பரப்பி தான் அவரை 3-வது முறை முதல்-அமைச்சராக ஆக்கினோம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அந்த இயக்கத்தை கைப்பற்றினார். அவர் ஆட்சி செய்த போதுதான், தமிழக மக்களுக்காக பாடுபட்ட ஒரு அரசு, ஒரு இயக்கம் பணம் சம்பாதிக்கிற வியாபாரக் கூட்டமாக மாறியது. அது ஜெயலலிதா மறைந்த பிறகும் இன்றும் தொடர்கிறது.

    எம்.ஜி.ஆர். கழகம் என்பது ஒரு அரசியல் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். கழக தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் யாராவது போட்டியிடுவர்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.

    ரஜினிகாந்த் எனக்கு மிக வேண்டிய, நெருங்கிய நண்பர். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி பேசியதில் ஜெயலலிதா கோபப்பட்டு என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். இன்றைக்கும் ரஜினிகாந்த் மிகப்பெரிய படங்களில் நடித்தாலும், பாட்ஷா என்று சொன்னால் அவருக்கு தனி புகழ் இருக்கிறது.



    அப்போது தான் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்தவர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர். பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்துவது அவரால் முடியுமா? என்றால் எனக்கு சந்தேகம். ஏன் என்றால் நான் பல நேரம் அவரோடு விவாதித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். சிந்தனையாளர். ஆன்மிக உணர்வு மிகுந்தவர். எதிர்பாராத வகையில் இயற்கையாகவே தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் நடிகர். அவரது அரசியல் நிலைமைகளை பற்றி கூற தயாராக இல்லை.

    எம்.ஜி.ஆர். போன்று அரசியல் உலகத்திலும், கலை உலகத்திலும் புகழ் பெற்ற மனிதரை இந்தியா கண்டது இல்லை. இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை. அ.தி.மு.க. என்று எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிற ஒரு பெரிய கூட்டுக்கம்பெனி தான் இருக்கிறது. அவர்களுக்கு அரசியலை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை. தனது பதவி காப்பாற்றப்பட வேண்டும். தன் பதவியின் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajiniKanth
    பிப்ரவரி மாதம் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, நடிகர் ரஜினிக்கு விஷால் நேரில் சென்று அழைப்பு வைத்திருக்கிறார். #Ilayaraja75 #Rajini
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது இசை சாதனையை பாராட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந்தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    இது தொடர்பாக விஷால் கூறுகையில், “பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மொழி கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழாவாக நடத்தப்படுகிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுசீலா, ஜானகி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்போம்” என்றார்.



    இதையடுத்து விஷால் இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ‘இளையராஜா-75’ இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். இதே போல் மற்ற பிரபலங்களையும் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
    தன்னுடைய அடுத்த படம் பற்றி வரும் வதந்திகளுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #ARMurugaDoss #Rajini #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

    இப்படம் அரசியல் கதையாக இருக்கும் என்றும், படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது இயக்குனர் முருகதாஸ், ‘நான் அடுத்ததாக இயக்கும் படம் ‘நாற்காலி’ இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். 



    இப்படம் பற்றிய முழு தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #ARMurugaDoss
    ×