search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99515"

    அமாவாசை அன்று அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.
    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

    இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

    ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரமஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரமஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

    கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

    இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திரு விழா வாக அங்காளம்மன் ஊஞ்சல் திரு விழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.

    ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
    ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
    அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.
    அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
    பொதுவாக, நீர் நிலை களை தெய்வமாக வழிபடுவது இறையன் பர்களின் வழக்கம்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும், அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள் தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டாக்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர்.

    ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

    அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

    எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதி யன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன் னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்ன தானம் செய்வதும், மாற்றுத் திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச் சியைக் கொடுக்கும்.

    நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜைய றையில் முன்னோர்களின் படங்கள் முன்னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
    இந்த மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.
    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரையிலான காலத்தை ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள். இது பித்ருக்களை (முன்னோர்கள்) வழிபடுவதற்கு உகந்த காலமாகும். இந்த ஆண்டு மகாளயம் இன்று (25-9-2018) செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை உள்ளது. இந்த நாட்களில் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும், சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்றைய தினம் செய்கின்ற தர்ப்பணத்தில் நாம் விடும் எள் மற்றும் தண்ணீரை, சுவேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுவதாக நம்பிக்கை.

    மனிதர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் ஐந்து என்று சொல்லப்படுகிறது. அவை பிதுர்யக்ஞம் (தர்ப் பணம் மூலமாக முன்னோர்களுக்கு உணவளிப்பது), தேவயக்ஞம் (யாகங்கள், ஹோமங்கள் மூலமாக தேவர்களுக்கு உணவளிப்பது), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது.

    வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும், நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில், பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று.

    பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மகாளய புண்ணிய காலம். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.

    நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றவர்கள். அவர்களுக்கும், நம் முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிரயாச்சித்தமாகவும் மகாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது. இந்த மகாளயபட்ச பதினைந்து நாட்களிலும், பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதாக ஐதீகம். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்கிறார்கள்.

    அதன் மூலம் அவர்கள் திருப்தி யடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மகாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளய பட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறியதாகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக்கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோட்சனம் செய்யலாம். அதாவது பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் முன்னோர்களின் திதியன்று அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் வழங்கலாம். 
    அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
    சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி, அவர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.

    அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்வார்கள் என்றும், அதுவே தோஷமாக மாறும் என்றும் சொல்லப் படுகிறது.

    வீட்டில் பசியால் வாடும் தனது பெற்றோருக்கு உணவளிக்காமல், தெய்வத்திற்கு படையல் போட்டு நைவேத்தியம் செய்தாலும், ஆடை இன்றி தாய் தந்தையர் கஷ்டப்படும் போது, தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதாலும் பலன் கிடைக்காது. பித்ரு தோஷம் தான் வந்து சேரும்.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைப்பது நல்லது.

    மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

    ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 நாட்கள். இவைகளில் மன்வாதி நாட்கள்-14, யுகாதி நாட்கள் - 4, மாதப்பிறப்பு நாட்கள் - 12, அமாவாசை - 12, மகாளய பட்சம் - 16, வ்யதீபாதம்- 12, வைத்ருதி - 12, அஷ்டகா -4, அன்வஷ்டகா - 4, பூர்வேத்யு- 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த 96 நாட்களை விட, சிரார்த்தம் செய்ய மிக மிக உத்தமமான நாள் தாய், தந்தையரின் திதி நாள் தான்.

    துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக்கூடாது.

    ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும். 
    அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    பிரதமை - செல்வம் பெருகும்

    துவிதியை - வாரிசு வளர்ச்சி

    திருதியை - திருப்திகரமான

    இல்வாழ்க்கை

    சதுர்த்தி - பகை விலகும்

    பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்

    சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்

    சப்தமி - மேல் உகத்தார் ஆசி

    அஷ்டமி - நல்லறிவு வளரும்

    நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

    தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

    ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்

    துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

    திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

    சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை

    அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும். 
    முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர்.
    ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வது வழக்கம். ஒரு சிலருக்கு தன்னுடைய தாய் தந்தையரின், முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கும். அவர்கள் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் நன்மைகள் விளையும் என்பதால் ஏற்பட்ட சொல் அது.

    முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள், இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தைமாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பு வாய்ந்தவைகளாகச் சொல்வர்.

    இந்த மகாளய அமாவாசை புரட்டாசி மாதம் 22-ந் தேதி (8-10-2018) திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். 
    அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

    அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

    நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். ஆடி அமாவாசை தினத்தன்று எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
    உலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள் பார்வதிதேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு பரமசிவன் கூறியதை அறிந்து கொள்ளலாம்.
    உலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள் பார்வதிதேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரமசிவன் கூறியதாவது:-

    அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெறும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்னதானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும். இவ்வாறு சிவபெருமான் கூறினார்.
    அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

    அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரகணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும்.

    சனிக்கிழமை என்பது சனீஸ்வரருக்கு உகந்த தினமாகும். சனிக்கிழமையன்று தர்ப்பணம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகமாகும்.
    ஆடி அமாவாசை தினம் இந்த ஆண்டு சனிக்கிழமை வருகிறது. சனிக்கிழமை என்பது சனீஸ்வரருக்கு உகந்த தினமாகும். சனீஸ்வரருக்கு உகந்த தானியம் ‘எள்’ ஆகும். பித்ருக்களின் தாகம் தீர்க்கும் தர்ப்பணத்தில் முக்கிய இடம் பெறுவதும் ‘எள்’ தான்.

    அன்று நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகள் செய்த பிறகு சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் சனிபகவனால் உண்டாகும் தோஷங்கள் விலகும். சனிக்கிழமையன்று தர்ப்பணம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகமாகும்.

    ஆடி அமாவாசையான இன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.
    முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்திருந்த வேத விற்பன்னர்கள் மற்றும் புரோகிதர்கள் முன்பு அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் பச்சரிசி, எள், தர்ப்பைப்புல், தண்ணீர், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்து பின்னர் அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் கொண்டு போய் போட்டனர்.

    பின்னர் மீண்டும் நீராடி விட்டு கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. பக்தர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிகளவில் வந்திருந்ததால் கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதேபோல குழித்துறை வாவுபலிமைதானத்திலும் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். குழித்துறையில் இன்று வழக்கத்தை விட கேரள பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது.


    குழித்துறை வாவு பலி மைதானத்தில் பலிகர்ம பூஜை செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் கொடுக்கக்கூட இடம் இல்லாத வகையில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    கேரளாவில் அதிக மக்கள் குவிந்து தர்ப்பணம் கொடுக்கும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அங்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கேரள பக்தர்கள் மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியான குழித்துறைக்கு வந்து புனித நீராடி பலிகர்ம பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தர்ப்பணம் கொடுக்கும் அந்த பகுதி மக்களும் இன்று குழித்துறையில் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரியிலும் கேரள பக்தர்களின் கூட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது.
    ×