search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    சேதுபதி படத்தை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சிந்துபாத் என்று தலைப்பு வைத்துள்ளனர். #Sindhubaath #VijaySethupathi
    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார். 

    கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `சிந்துபாத்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Sindhubaath #VijaySethupathi

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள், பலரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். #Madhavan #Anushka #HappyPongal2019
    பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 

    நடிகர்கள் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

    திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.



    கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #Madhavan #Anushka #HappyPongal2019
    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். #Tsunami #MemorialDay
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.

    இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

    நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  #Tsunami #MemorialDay
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



    இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஏராளமான பொதுமக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வருகை தந்ததால், மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary
    கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. #Karunanidhi #DMK #MKStalin
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி கருணாநிதியின் சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்பட தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.



    முன்னதாக கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவரது சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியின் மீது தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் கருணாநிதி இருப்பது போன்ற ஓவியம் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

    சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. முரசொலி நாளிதழ் ‘லேமினேசன்’ செய்யப்பட்டு சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.



    கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு, மு.க.ஸ்டாலினின் சொந்த செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த பணியை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் தலைமையில் அக்கட்சியினர் மேற்கொண்டனர்.

    இதற்கிடையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய படத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு (நேற்று) 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்தார். 
    புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி, நடிகை அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்ல இருக்கிறார். #VijaySethupathi #Anjali
    கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றிப் படத்தை தயாரித்திருந்தார்கள். தற்போது விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடைவிடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம். அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.



    சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
    சில படங்களில் நடித்து காணாமல் போன அஞ்சலி தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து பேய் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். #Anjali
    நடிகை அஞ்சலிக்கு இன்று 32 வது பிறந்தநாள். காணாமல் போனவர் மீண்டு வந்து தற்போது தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பேய் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மை டியர் லிசா, 3டியில் உருவாகும் ஓ ஆகிய பேய் படங்களில் நடிக்கிறார். 

    சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, சினிமாவில் ஒரு அங்கமாக எப்போதுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால், அஞ்சலி நன்றாக நடித்திருக்கிறார் என மக்கள் மனதில் பதிவேன். 



    அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து நடிப்பேன். கமர்ஷியல் படங்களில் மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு படங்களில் மட்டுமே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றார்.
    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் அந்த இடத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 -ந் தேதி இடிந்து விழுந்தது.

    இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார்(வயது 43), சோமனூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி(20), பல்லடம் அய்யம்பாளையத்தை ஈஸ்வரி(40) உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் உயிரிழந்த 5 பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அஞ்சலி கூட்டத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நள்ளிரவில் பஸ் நிலைய வளாகத்தில் இறந்தவர்களின் உருவபடங்கள் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி இரவோடு இரவாக  நிகழ்ச்சி நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews
    கருணாநிதி சமாதியில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். #DMK #Kanimozhi #Karunanidhi #memorial
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே உள்ள கருணாநிதி சமாதியில் ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் இருந்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட மகளிரணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை ஊர்வலமாக புறப்பட்டனர். கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஊர்வலத்துக்கு முன்னதாக சென்றது. அதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கருணாநிதி சமாதிக்கு வந்தனர்.

    முன்னதாக, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கேயே கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி வந்த கனிமொழி, தன்னுடைய தாய் ராஜாத்தியம்மாளுடன் சேர்ந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, சமாதியை சுற்றி வந்தார்.

    அதேபோல், தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றத்தினர் ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

    கவிஞர் வைரமுத்து மலேசியா தமிழர்களுடன் இணைந்து கருணாநிதி சமாதியில் நேற்று காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதியின் பிறந்தநாளை உலகத்தமிழர்கள் ‘கலைஞர் செம்மொழி திருநாள்’ என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். ‘பாரத ரத்னா’ விருதுக்கு தகுதியானவர் கருணாநிதி என்று மத்திய அரசே உணரும் என்பதே என் எண்ணம். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்றார்.  
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவை தோற்றுவித்தவருமான  அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.



    இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாஜ்பாய்க்கு மலரஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் முன்னோட்டம். #NanjamPalaVannam #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'.

    தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர், எடிட்டிங் -  நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம், வசனம் மற்றும் தமிழாக்கம் -A.R.K.ராஜராஜா, தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட்) மெஹபு பாஷா, இயக்கம் - ஸ்ரீகாந்த். 

    படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது,

    இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட், பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். 

    இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார். #NanjamPalaVannam #MaheshBabu #Venkatesh #Samantha #Anjali

    தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ படத்தில் கடைக்குட்டி சிங்கமாக நடித்திருக்கிறார். #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட்) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.

    தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா இப்படம் குறித்து இவர் கூறும்போது, ‘இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது’ என்றார்.
    ×