search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty
    ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.

    தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



    படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்ரீ ராஜலெக்‌ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali
    மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #ADMK #MLABose #EPS #OPS
    மதுரை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ். உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் ஆபரேசன் செய்து கொண்டார். கடந்த வாரம் மதுரை திரும்பிய ஏ.கே.போஸ் ஜீவாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஏ.கே.போசுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர மாரடைப்பு காரணமாக ஏ.கே.போஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 70.

    ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிற்பகல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்; கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர்; தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



    அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன், நீதிபதி, கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஏ.கே.போஸ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

    ஜெயலலிதாவால் பாராட்டப்பட்ட ஏ.கே.போஸ் கடந்த 2006 முதல் 2011 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்ந் தெடுக் கப்பட்டார்.

    இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன், சங்கர் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். #ADMK #MLABose #EPS #OPS
    அருண் குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பு பரிசீலனையில் உள்ளது. #VijaySethupathi #Anjali
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    அருண்குமார் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் சேதுபதி. விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



    அந்த படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது. விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது. சேதுபதி 2 என்று பெயரிடப்படலாம் என்று செய்தி வந்த நிலையில், இப்போது `திருடாதே' அல்லது `மலைக்கள்ளன்' என 2 தலைப்புகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டுமே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali

    ஜூலை-30 தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நினைவு சின்னத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-30 தியாகிகள் நினைவு தினமாக கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்து வருகிறார்கள். அதுபோல இன்று ஜூலை 30-ந்தேதி தியாகிகள் நினைவு தினத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சுப்பையாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்து புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜிஸ் பாட்சா பங்கேற்றார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னைய்யா, சேது செல்வம், கீதநாதன், துரை.செல்வம், சுப்பையா, பூபதி, மூர்த்தி, மாதர் சங்கம் லதா ஹேமலதா, இந்திய வாலிபர் சங்கம் அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் அதன் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. சார்பில் சுதேசிமில்லில் இருந்து ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் நிர்வாகிகள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கரூரில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    கரூர்:

    தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றி அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். அதோடு மட்டும் அல்லாமல் இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று நாட்டிற்கு அளப்பரியா பணிகளை செய்தார். நேற்று அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கரூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் அவரது உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கரூர் கோட்டையண்ணன் கோவில் தெருவிலுள்ள ஒரு டீக்கடையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அங்கு வரும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியாக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மரக்கன்று நட்டு உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற செயல்பாட்டில் தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருந்தவர் அப்துல்கலாம்.

    எனவே அவரது நினைவு தினத்தையொட்டி அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர். இதேபோல் கரூரில் பல்வேறு தெருக்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கரூரை அடுத்துள்ள பசுபதிபாளையம் முடி திருத்துவோர் மருத்துவ சங்கம் சார்பில் கரூர் அருகே உள்ள செல்லாண்டிப்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக அப்துல்கலாம் உருவப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், முருகராஜ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’ படப்பிடிப்பின் போது, தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை நடிகை அஞ்சலி பதம்பார்த்திருக்கிறார். #Lisaa #Anjali
    `காளி' ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு', `நாடோடிகள்-2' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். 

    பிரபல ஒளிப்பதிவாளரும், ‘மதுரை வீரன்’ படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது. இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது. 



    இதனால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. ஏமாலி படத்தின் நாயகனான சாம் ஜோன்ஸ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #Anjali #Lisaa

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

    ‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

    நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

    இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படத்தின் அடுத்த ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் மோகன்லால் வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் மூன்று ஜஸ்ட் லுக்குகளை நடிகர் சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், அடுத்த ஜஸ்ட் லுக்கை நடிகர் மோகன் லால் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சமுத்திரக்கனி தற்போது கே.விஆனந்த் இயக்கத்தில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் இருவரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu
    கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என்று மூன்று தரமான படங்களை ராம் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, தங்க மீன்கள் சாதனா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தது.

    இதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மம்முட்டி, சத்யராஜ், சித்தார்த், வசந்த் ரவி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், கே.எஸ்.ரவிகுமார், விஜய், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மனோபாலா, கோபி நயினார், சசி, மீரா கதிரவன், ஈ.ராம்தாஸ், நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    சத்யராஜ் பேசும்போது ‘நான் முதலில் வில்லனாக நடித்துவிட்டு தான் கதாநாயகனாக மாறினேன். அப்போது எனக்கு உதவி செய்தது மம்முட்டி நடித்த படங்கள் தான். அவரை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். மம்முட்டி படங்களை ரீமேக் செய்துதான் நான் கதாநாயகன் ஆனேன் என்றார்.

    ஆன்ட்ரியா பேசும்போது ‘இந்த படத்தில் என்னை நடிக்க அழைக்கவில்லை என்று ராம் மீது கோபம் இல்லை. அஞ்சலி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்’ என்றார். #Peranbu #Mammootty #Anjali #Andrea

    ஆண்ட்ரியா பேசிய வீடியோவை பார்க்க:

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது, 

    கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?

    ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும். 



    கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?

    ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும். 

    இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,

    ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார். 



    பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு. 

    இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    அருண் குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து செல்லவிருக்கிறது. #VijaySethupathi #Anjali
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் `ஜூங்கா' வருகிற ஜூலை 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாகி வந்தது. இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் மலேசியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 



    கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள `96' படத்தின் டீசர் இன்று ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VijaySethupathi #Anjali

    ×