search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படத்தின் இரண்டாவது ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அடுத்த ஜஸ்ட் லுக்கை ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    நேபாளத்தில் பலியான தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனின் உடலுக்கு ஆண்டிப்பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் (வயது 69). இவரது மனைவி நாகரத்தினம் (67). இவர்கள் இருவர் உள்பட அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர்.

    நேபாளம் வழியாக கைலாய மலைக்கு சென்ற போது மோசமான வானிலை காரணமாக ராமச்சந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் வெங்கடேஷ் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரன் உடலை பெறுவதற்காக அவர்கள் 2 பேரும் நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு சென்றனர்.

    அங்கு ராமச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மகன் வெங்கடேசன் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் காட்மாண்டுவில் இருந்து நேற்று மாலை ராமச்சந்திரனின் உடல் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு பகல் 12.30 மணியளவில் உறவினர்கள் கொண்டு வந்தனர்.

    அவரது வீட்டு முன்பு ராமச்சந்திரன் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராம மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்படுகிறது. #tamilnews
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    காந்திநகர்:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும். செஷல்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் கடற்படை தளம் அமைப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 6 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

    இதையடுத்து, இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.



    அந்த பதிவில் ‘வன்முறைக்கு எதிரான அகிம்சை எனும் கொள்கையை நாம் நமது குழந்தைகளுக்கும் இந்த உலகத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்’  என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செஷல்ஸ் அதிபர் டேபி பவுரி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்கள். #Rajini
    ‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

    ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 

    ரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர். 



    படத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. 

    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 



    தேனி, மதுரை என தென் மாவட்டங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும், படம் வருகிற ஆகஸ்டில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    தூத்துக்குடியில் ‘காலா’ படம் வெளியான தியேட்டரில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு ரஜினி ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது ரஜினி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்வது சரியல்ல என்று கூறும் ரஜினியின் ‘காலா’ படத்தில் போராட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது

    இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் இன்று வெளியானது. தூத்துக்குடியில் ‘காலா’ படம் காசிக்கடை பஜாரில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காலையிலேயே அந்த தியேட்டரின் முன் திரண்டனர்.

    பின்பு 8.30 மணியளவில் ரசிகர்கள் அனைவரும் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம் திரையிடுவதற்கு முன்பாகவே தியேட்டருக்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் திடீரென எழுந்து நின்றனர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரையின் அருகில் நிற்க, மற்றவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன் எழுந்து நின்றனர். பின்பு அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து ‘காலா’ படம் திரையிடப்பட்டது. அதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து அருண் குமார், விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #VijaySethupathi #Anjali
    `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', `செக்க சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    இதில் அருண் குமார்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி அருகே இலஞ்சியில் பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. இறைவி படத்தை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 



    `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண்குமார் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 

    மலேசியா மற்றும் தென் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali

    மாணவி பிரதீபாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide #MKStalin
    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6.45 மணிக்கு பெருவளூர் கிராமத்துக்கு வந்தார். அவர், பிரதீபாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பிரதீபாவின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகையையும் அவர் வழங்கினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். நீட் தேர்வினால் அன்று அனிதாவையும், இன்று பிரதீபாவையும் இழந்து இருக்கிறோம். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதில்லை. எனவே இவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழகத்தில் இதுபோன்ற நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் பலரும் பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide #MKStalin
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கன்னியாகுமரியில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இதில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராஜ் மற்றும் ஆல்பின், ஜான்மில்டன், சேவியர், சிலுவை தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், மணக்குடி பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.#SterliteProtest
    அஞ்சலி நடிப்பில் `காளி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ANJALIasLISAA #Anjali
    சமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 



    அஞ்சலி அடுத்ததாக `லிசா' என்ற திகில் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் `மதுரவீரன்' படத்தை இயக்கிய பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இவர் `மதுரவீரன்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #ANJALIasLISAA #Anjali #Lisaa

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்களும், பொதுமக்களும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.#rajivgandhi #deathanniversary #leaderspayhomage
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.

    இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்
    காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். #rajivgandhi #deathanniversary #leaderspayhomage
    ×