search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ்"

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் மதுரை தோப்பூரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேர்வு செய்தோம்.

    4 வழிச்சாலை, ரெயில் நிலையம், மின்சார வசதி மற்றும் மருத்துவமனை அமையும் நிலத்துக்கு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.


    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் படிப்படியாக பணிகள் நடைபெறும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளரும் இது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    மதுரை:

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வறிக்கை பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதிய முதல்-மந்திரி நாளை தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    இதற்கிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றார்.

    அவர் முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று கூறுவதால் அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. டெல்லி ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்படும் முன் மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் டெலிபோனில் பேசினார். இதில் முதல்-மந்திரி பொறுப்புகளை மூத்த மந்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாளை பனாஜியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. புதிய முதல்- மந்திரி பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை மந்திரி சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

    கோவாவில் தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்காது என்று மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #manoharparrikar
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி 15-ந் தேதி அடிக்கல் நாட்டுவார் என தகவல் வெளியாகி உள்ளன. #AIIMS #AIIMSinMadurai #PMModi

    சென்னை:

    மதுரை தோப்பூரில் மத்திய அரசு உயர்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை நிறுவுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதற்காக தோப்பூரில் 200 ஏக்கல் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக கட்டப்படுகிறது.

    தென்னிந்தியாவில் முதலாவதாக அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் அடிக்கல் நாட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

     


     

    அடிக்கல் நாட்டு விழாவை காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பிரதமர் பங்கேற்கும் தேதி விவரம் விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த விழாவின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை தனியாக சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.



    இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் நர்சிங் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கேட்டு தொடரப்பட்ட வழக்கில், அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்தனர்.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கக்கேட்டு ஜெயகுமார் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவரது மனுவை கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து வக்கீல் ஜெயகுமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் விகிதாச்சாரம் அதிகமாக கொண்ட மிகப்பெரிய மாவட்டம் விழுப்புரம். இந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறியுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் நேற்று வக்கீல் கே.கே.எஸ்.கிருஷ்ணராஜ் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
    ×