என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99728"
- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர்.
- நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர். இதனை பார்த்த பூபாலன் ஏன் பள்ளி வளாகத்தில் மது அருந்துகிறீர்கள் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபாலனிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பூபாலனை மீண்டும் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் வழிமறித்து மிரட்டி உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என எச்சரித்துள்ளனர். இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் பூபாலன் புகார் செய்தார்.
இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வீட்டின் சுவற்றின் அருகே விழுந்து வெடித்ததில் அங்கிருந்த மரம் லேசாக பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பூபாலனை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது பற்றி சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
காட்பாடி அடுத்த கரசமங்கலம் சிங்கா ரெட்டியூரில் சிலர் இன்று காலை கானாறு வழியாக நடந்து சென்றனர். அப்போது கானாறு பள்ளத்தில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
மேலும் அவரது ஒரு கையில் 5 விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என தெரியவில்லை.
இறந்தவர் சிகப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.
தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் (வயது16) தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 சேர்ந்து உள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கல்லூரி மாணவர் நந்தாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.
குரோம்பட்டை சி.எல்.சி. லைன் ரோட்டில் சென்ற போது முன்னாள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக விக்னேஷ், நந்தா ஆகியோருக்கும் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் அங்கேயே காத்திருந்தனர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை வழிமறித்து மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக குத்தினர்.
இதில் விக்னேசும், நந்தாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மதனையும், அவரது மகன் நித்தியானந்தத்தையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.
இப்போது விக்னேஷ் இறந்ததால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 39). தனியார் மில் பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது மேல் மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் வழி மறித்து தகராறு செய்தார். இதை அர்ஜூணன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். மேலும் அர்ஜூணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை குமரகுரு பள்ளத்தை சேர்ந்தவர் கீதா (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீதாவை விட்டு அவரது கணவர் ராஜு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து கீதா தனது குழந்தைகளுடன் சாரம் ஜெயராம் நகர் அவ்வை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கீதாவுக்கும், தட்டு வண்டி தொழிலாளியான சடை ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 1.00 மணி அளவில் இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சடை ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கீதாவை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கீதா சாய்ந்தார். இதனை பார்த்ததும் சடை ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் கீதாவின் உறவினர்கள் திரண்டு வந்து கீதாவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய சடை ஆனந்தை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் எதிரே கடற்கரையில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது.
இது பற்றிய தகவலின் அடிப்படையில் சோலை நகர் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் லாஸ்பேட்டை நாவற்குளம் சினேகன் நகரை சேர்ந்த சம்பந்தம் (வயது 68) என்பது தெரியவந்தது. புதுவை அரசு அச்சகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சம்பந்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்