என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் அருகே அதிமுக தொண்டர் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது
Byமாலை மலர்25 April 2019 10:38 PM IST (Updated: 25 April 2019 10:38 PM IST)
குடவாசல் அருகே அ.தி.மு.க. கொடிமேடை இடிப்பு பிரச்சினையில் அ.தி.மு.க. தொண்டரை அடித்துக் கொலை செய்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
குடவாசல் அருகே பருத்தியூர் பள்ளிகூட தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது45). அ.தி.மு.க. தொண்டர். இவரது வீட்டின் எதிரே அ.தி.மு.க. கொடி மேடை இருந்துள்ளது. அதனை தேர்தல் நேரத்தில் அரசு துறை அதிகாரிகள் இடித்துவிட்டனர். அந்த கற்களை அதே தெருவை சேர்ந்த ராமசந்திரன் மகன் ராஜப்பா (40) மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் அள்ளி சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த குமார் தகாத வார்த்தைகளை பேசி நான் கட்டிய கொடிமேடை கற்களை யாரோ அள்ளி சென்றுவிட்டனர் என்று திட்டியுள்ளார்.
இதனை ராஜப்பா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ராஜப்பா இரும்பு கம்பியை எடுத்து வந்து குமாரை தாக்க முயன்றுள்ளார். அப்போது ரம்யா என்ற பெண் தடுத்து இரும்பு கம்பியை பிடுங்கிவிட்டார். அந்த சமயத்தில் அருகில் கிடந்த கருவேலம் கட்டையை எடுத்து ராஜப்பா, குமாரை தாக்கியுள்ளார். இதில் குமாரின் மண்டை உடைந்தது. அப்போது அங்கு ஓடி வந்த ராஜப்பாவின் தந்தை ராமச்சந்திரன் (60) 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குமாரை அதில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்து விட்டார்.
ராமச்சந்திரன் மருத்துவமனையில் தனது மகன் ராஜப்பா கட்டையால் அடித்ததை மறைத்து குமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து அடிப்பட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து குமாரின் மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலம், ராஜப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் மீது கொலைவழக்கு பதிவுசெய்து ராமச்சந்திரன், அவரது மகன் ராஜப்பா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×