search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    பணகுடி அருகே கிணற்றில் பிணமாக சிறுமி மிதந்ததால் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வள்ளியூர்:

    சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்த பாலகிருஷ்ணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாள். பல இடங்களில் தேடியும் அபிராமியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இதுகுறித்து பாலகிருஷ்ணன் போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை. 

    இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காணாமல் போன சிறுமி அபிராமி என்பது தெரியவந்தது. அவள் கொலை செய்யப்பட்டாளா? அல்லது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாளா? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசிய தா பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. #thapandian

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

    தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #US #ComaPatient
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி ‘கோமா’வில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அருகில் இருந்த நர்சு கவனித்தார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.

    உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. இச்சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதுகுறித்து அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #US #ComaPatient
    சாத்தான்குளம் மற்றும் கூடங்குளம் பகுதியில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மிக்கேல். இவரது மகள் ஜெனித் ஜெல்சியா (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனித் ஜெல்சியா கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. 

     இது குறித்து அவரது தந்தை ராஜா மிக்கேல் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜெனித் ஜெல்சியா எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி பாலா (வயது33). இவர்களுக்கு அருண் (6) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    இதில் மனம் உடைந்த பாலா தனது மகன் அருணை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று கண்டு பிடிக்க முடியாததால், அர்ஜுனன், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். 
    கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#DowryTorture
    விருதுநகர்:

    திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மகள் லாவண்யா (வயது 23)வுக்கும், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் லாவண்யா புகார் செய்தார்.

    எனக்கு திருமணத்தின் போது 30 பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 20 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கேட்டு கணவர் ராஜமுருகன், அவரது பெற்றோர் ஹரிராம்- விஜயா, கணவரின் சகோதரி மகாலட்சுமி ஆகியோர் சித்ரவதை செய்தனர்.

    மேலும், சில நாட்களுக்கு முன்பு கணவர் ராஜமுருகன் தாலியை பறித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜமுருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DowryTorture
    மதுரையில் தாய் இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 42). தொழிலாளி. இவரது தாயார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தார். இதனால் முத்துகாமாட்சி மன வேதனை அடைந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துகாமாட்சி தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே முத்துகாமாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிகால் நகரில் உள்ள டாஸ்மாக் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது.  இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும். அவரை கொலை செய்து விட்டு எரித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கரூர் அருகே வீட்டில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று  இரவு வீட்டில் தூங்கினார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து  அவரது மனைவி சாந்தி (42) கணவரை எழுப்பிய போது, சக்திவேல் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி சம்பவ இடத்திற்கு சென்று  உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். சக்திவேல் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது  மர்மநபர்கள் யாராவது தாக்கியதில் வீட்டிற்கு வந்து படுத்த அவர் காயம் காரணமாக இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அதியமான்கோட்டை அருகே கோவில் பூசாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்துள்ள சாமிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது55). இவர் அங்குள்ள மாரியம்மன்கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். 

    சம்பவத்தன்று சின்னசாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்னசாமிக்கு 3 மகனும், 2 மகளும் உள்ளனர்.
    மதுரையில் குழந்தை திருமணம் புகாரில் தாய் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது39). இவரது மகள் கயல்விழி (16). பழனிச்சாமி இறந்து விட்ட நிலையில் கடந்த 12-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (28) என்பவருக்கும் கயல் விழிக்கும் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாவட்ட சமூக நல அதிகாரி ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. குழந்தை திருமணம் குறித்து மதுரை அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணவேணி, ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை சுப்பிரமணியன், தாய் விஜயலட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் கண்ணன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    ×