search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற துணை பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த சக்கந்தி மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் சிவகங்கை செந்தமிழ்நகரில் வசிக்கும் ராகவன்(வயது60) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். ராகவன் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் துணை பதிவாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    சுரேஷின் மனைவி சங்கீதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ராகவன் கடந்த 1.9.2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் பணம் பெற்றாராம். ஆனால் அவர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காமல் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டாராம். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சங்கீதா புகார் செய்தார்.

    அப்போது முன் பணமாக ரூ.3 லட்சத்தை ராகவன் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம். இது குறித்து சங்கீதா மீதி பணத்தை கேட்கும் போது அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சங்கீதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்மொழிவர்மன், சசிகலா ஆகியோர் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் ராகவன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏரியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் அம்மா வீட்டிற்கு சென்ற 32 வயது பெண்ணை 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள அஜ்ஜன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி காந்தாமணி (வயது32). இவர்களுக்கு 5 வயது குழந்தை உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு காந்தாமணி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி காந்தாமணி வீட்டில் இருந்து தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் ஐய்யண்ணன் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஐய்யண்ணன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் (வயது20) என்பவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூரில் பள்ளி வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சேலாம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து அதே வளாகத்தில் உள்ள விடுதிக்கு இரவு 9 மணி வரை வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடினார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே இரவு 10.30 மணியளவில் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி கிடப்பதை பள்ளி விடுதியின் ஊழியர்கள் கண்டனர்.

    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனா, உதவி தலைமை ஆசிரியர் கில் பர்ட் குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமைஆசிரியர் நேரில் வந்து விசாரனை செய்தனர்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மருத்துவக்குழுவினர்கள் மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து உடன் போலீசில் புகார் கொடுக்காமல், 2 நாட்கள் கழித்து 3-வதுநாள் அதாவது 15-ந் தேதி தான் பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனா, மாணவி பலாத்காரத்துக்கு பள்ளி ஊழியர் ஆல்பர்ட் என்கிற ஆல்பர்ட் சவுந்தர்ராஜன் காரணமாக இருக்கலாம் என திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் மாணவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரனை நடத்தினார்.

    இது தொடர்பாக ஆல் பர்ட்சவுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆல்பர்ட் சவுந்தர்ராஜன் தற்போது நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியும் மருத்துவ சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்த சம்பவத்தை ஏன் உடன் போலீசில் தெரிவிக்க வில்லை. அதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? யார்? புகார் கொடுக்க விடாமல் தடுத்தது யார்? என்றும், தாமதமாக புகார் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்றும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தை பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளிதேவ சேனா உடன் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. கல்வித் துறை அதிகாரிகாரிகள் 17-ந் தேதி வெளியான செய்தியை பார்த்துதான் கல்வி நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சமி விசாரனை செய்துள்ளார்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மாணவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தகவல் அறிந்த உடன் பள்ளிக்கு இரவு சுமார் 12 மணியளவில் வந்துவிட்டேன்.

    அப்போதே மகளிர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டேன். புகார் கொடுக்க தாமதமானதற்கு காரணம் மாணவியிடம் நன்கு விசாரித்து பிறகு புகார் கொடுத்தோம். கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு உடன் தகவல் தெரிவிக்காதது தவறுதான் என்றும் தெரிவித்தார்.

    தற்போது இந்த வழக்கு குறித்து முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கலெக்டருக்கு விசாரனை அறிக்கையை சமர்பித்துள்ளார். கலெக்டரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் பரபரப்பாக உள்ளது.

    உசிலம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிம்மநத்தத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது 17 வயது மகள் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26), சின்னச்சாமி (27), கணேசன் (43) ஆகிய 3 பேரும் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டு சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தானம், உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சின்னத் தம்பி, கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காஞ்சீபுரம் அருகே போலி கையெழுத்து போட்டு சொத்து அபகரித்தது குறித்து பள்ளி தாளாளர் மீது முதல் அவரது முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலை தனியார் பள்ளியில் தாளாளராக இருப்பவர் அருண்குமார்.

    இவருக்கும் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை தேன்மொழிக்கும் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது மகன் கவுதம் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தாய் தேன்மொழியுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் தேன்மொழி தனது மகன் கவுதமுடன் வந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில் தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி முன்னாள் கணவர் அருண்குமார் சொத்தை அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 1992-ம் ஆண்டு ஓரிக்கை பகுதியில் 809 சதுரடி கொண்ட காலி மனையை சொந்த பணத்தில் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த இடம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பத்திரதுறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெற்று பார்த்த போது 2004-ம் ஆண்டு முன்ளாள் கணவரான பள்ளி தாளாளர் அருண்குமார் மற்றும் அவருடைய தாயார் மனோகரி இருவரும் சேர்ந்து எனது கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடாக விற்று இருப்பது தெரியவந்தது.

    எனக்கு சொந்தமான காலிமனையை சட்டவிரோதமாக மோசடியாக அபகரித்த பள்ளி தாளாளர் அருண்குமார் உள்ளிட்ட நபர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூ வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 42). பூ வியாபாரியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளன.

    நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூதப்பாண்டி அருகே முதல் மாடியில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலியானார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை பூதப்பாண்டி காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞானதாஸ் மற்றும் அவரது நண்பர் அஜித்(20) ஆகியோர் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். முதல் மாடியில் அவர்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து ஞானதாஸ் தவறி விழுந்தார்.

    உடனே பதறிப்போன அவரது நண்பர் அஜித் கூச்சலிட்டு அலறினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    இதையடுத்து தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஞானதாசை அவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மத்திய சிறையில் கைதி மரணமடைந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.

    கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.

    இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.

    அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.

    என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.

    ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.

    இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.

    காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    2 குழந்தைகளின் தாய் மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்யாறு:

    கலசபாக்கம் பொற்கனூர் பகுதியை சேர்ந்தவர் பானு இவரது மனைவி ஹேமாவதி (வயது 27). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த ஹேமாவதி 2 குழந்தைகளுடன் சேத்துப்பட்டு அருந்ததிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன். செய்யாறில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் ஹேமாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவனை காணவில்லை. இது குறித்து மாணவனின் பெற்றோர் அனக்காவூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதில் எனது மகனை ஹேமாவதி என்ற பெண் ஆசை வார்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தனர். இதைதொடந்து போலீசார் ஹேமாவதி வீட்டுக்கு அவரை தேடி சென்றனர். அங்கு அவர் இல்லை. இதனால் அவர் மாணவனுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குபதிவு செய்து மாணவன் மற்றும் ஹேமாவதியை தேடி வருகின்றனர்.

    மதுரை அழகப்பன் நகரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 8 பவுன் தங்க செயினை மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அழகப்பன் நகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முத்து ராக்கு (வயது 55). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றபோது 2 மர்ம வாலிபர்கள் முத்துராக்குவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். இந்தப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது.

    எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகையை கொடுங்கள், பத்திரமாக மடித்து தருகிறோம் என்று கூறினர்.

    இதை நம்பிய முத்துராக்கு, தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய 2 வாலிபர்களும் ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்துக் கொடுத்தனர்.

    வீடு திரும்பிய முத்து ராக்கு பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் காகிதங்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்து ராக்கு இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாண்டியம்மாள் (வயது 45). இவர் ஆரப்பாளையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.

    கோரிப்பாளையம் அருகில் சென்றபோது பாண்டியம்மாள் வைத்திருந்த மணிபர்சை யாரோ அபேஸ் செய்து விட்டனர். அதில் அவர் 7 பவுன் தங்க தாலிச்செயினை வைத்திருந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரம் அடுத்த பொட்டல் காலனியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 37), தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (36). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் டென்னிசன் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த மனைவி விஜயலெட்சுமி மற்றும் அவரது 2 மகன்களும் மாயமாகி இருந்தனர்.

    இதையடுத்து அவர்களை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று அவரது தலைமையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மீண்டும் புகார் தெரிவித்துள்ளனர். #IdolWing #PonManickavel
    சென்னை:

    பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இன்று மேலும் சில அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.



    “தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் பொன் மாணிக்கவேல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தான் சுட்டிக்காட்டும் நபர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என அவர் சொல்கிறார். காணாமல் போன சிலைகளில் பலவற்றை மீட்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. ஆனால் கைது செய்ய நிர்பந்திக்கிறார். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் இளங்கோ. #IdolWing #PonManickavel

    ×