search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    ரூ.2¾ லட்சத்துடன் இளம்பெண் குழந்தையுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ஐ.ஓ.பி. நகரைச் சேர்ந்தவர் மதுமோகன்ராஜ் (வயது27). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு சுஜாதா (24) என்ற மனைவியும், ஜவான் நாராயணன் என்ற 10 மாத கைக்குழந்தையும் உள்ளது.

    சம்பவத்தன்று சுஜாதா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த மதுமோகன்ராஜ் மற்றும் உறவினர்கள் இருவரையும் பல இடங்களில் தேடினர். ஆனால் பலனில்லை.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் சுஜாதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம் அடைந்தார். பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் திரும்பி வந்தார்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

    இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.

    இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

    இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    உடுமலை கவுசல்யா இன்று திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். #udumalaikousalya

    திருப்பூர்:

    உடுமலை கவுசல்யா இன்று திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வருகிறோம். அறக்கட்டளைக்கு சந்தோஷ்ஸ்ரீ என்ற பெண் நேற்று வந்தார். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி பாதுகாப்பு கேட்டு அறக்கட்டளையில் தங்க அனுமதி கேட்டார். அவருக்கு நாங்கள் அனுமதி வழங்கி பாதுகாப்பு அளித்தோம்.

    இரவு 9.30 மணிக்கு 2 போலீசார் அறக்கட்டளைக்கு வந்து எங்கள் பாதுகாப்பில் இருந்த பெண்ணை தரதரவென இழுத்துச்சென்றனர்.

    இதை தடுக்க முயன்ற சங்கரின் தம்பியை போலீசார் தாக்கினர். சட்டத்திற்கு புறம்பாக நடந்த 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். #udumalaikousalya

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 26). இவருக்கும் உச்சப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது மணமகள் வீட்டில் இருந்து 10 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அதன்பிறகு குமார் கள்ளக்காதலி மற்றும் உறவினர்களான ஜெயராமன், அவரது மனைவி தேவி ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொடுமைப்படுத்தினார்.

    இது தொடர்பாக நந்தினி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று பெரும்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனைசெய்பவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு மற்றும் உரிம சான்றிதழை ஆன்லைனில் பெறுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படி, வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இ-பேமெண்ட் வாயிலாக மட்டுமே பெற முடியும். இணையதளத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் இருந்து அதற்கான தொகையினை உரிமம் அளிக்கும் அரசு நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டல்கள் அல்லது உணவு  நிறுவனங்களில் பயன்படுத்தினாலும் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலும் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    கேரளாவில் ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காக பதிவாகி உள்ளது. போஸ்கோ வழக்குகளும் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 215 வழக்குகள் பதிவாகி இருந்தது. இது 2017-ம் ஆண்டு 1101 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

    2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மட்டும் கேரளாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 999 வழக்குகள் பதிவாகி உள்ளது.

    இதிலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை போல பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை தொடர்பாக 14254 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 1987 வழக்குகள் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் வரை 11302 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில், 1645 கற்பழிப்பு வழக்குகள் ஆகும். #tamilnews
    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RafaleCase #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

    பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

    ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #RafaleCase #SupremeCourt

    ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி விஜி (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    இவர் தான் குடியிருக்கும் மாடி வீட்டின் கீழ் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும், அவரது மனைவி விஜிக்கும் இடை யே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் விஜியின் தம்பி சரவணன் தனது அக்காவை அடித்து கொலை செய்து தூக்கி போட்டு விட்டதாக கீரமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

    இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமாக  என விசாரித்து வருகிறார்கள்.
    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு மற்றும் உரிம சான்றிதழை ஆன்லைனில் பெறுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படி, வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இ-பேமெண்ட் வாயிலாக மட்டுமே பெற முடியும். இணையதளத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் இருந்து அதற்கான தொகை யினை உரிமம் அளிக்கும் அரசு நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை ஓட்டல்கள் அல்லது உணவு நிறுவனங்களில் பயன்படுத்தினாலும் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலும் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி மற்றும் வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 70). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி காலை 9 மணியளவில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆண்டிமடம் நான்கு ரோட்டில் டவுன் பஸ் ஒன்றில் ஏறிவந்தார். சிறிது தூரம் வந்தபின் டிக்கெட் எடுப்பதற்காக பையை திறக்க குனிந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    உடனடியாக கண்டக்டரிடம் கூறினார். கண்டக்டர் இடையில் நிறுத்தாமல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பஸ்சில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்து சென்ற 4 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனடியாக ஒரு ஆட்டோவில் அந்த 4 பெண்களையும் ஏற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் ஏர்வாடியை சேர்ந்த ரவி மனைவி சுப்பு(37), ராஜா மனைவிகள் ராணி(25), ரம்யா(36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) ஆகியோர் என்பதும், மேலும் அவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், அறிவழகன் ஆகியோர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் நகையை திருடிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    குமரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58) தொழிலாளி. இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் பாஸ்கரன் காணப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒழுகினசேரி பகுதியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெர்னாட்சேவியர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளச்சல் சாஸ்தன்கரை பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் ரோச். இவரது மகள் நிகிஷா (25). இவருக்கும் திருமணம் ஆகவில்லை.

    இவரது பெற்றோர் நேற்று அருகில் உள்ள வள்ளவிளைக்கு சென்று இருந்தனர். வீட்டில் நிகிஷா மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ் பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடைவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) டிரைவர். இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். மேலும் இவருக்கு திருமணம் ஆகாத வருத்தத்திலும் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் சுரேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    ×