search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மனைவி ஷோபனா. பன்னீர் செல்வம் சேலத்தில் பொது பணித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

    தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துஇன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். 
    திருச்சியில் முன்விரோத தகராறில் வாலிபரை கடத்த முயன்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் காட்டுமன்னார் கோவில் ஈச்சமண்டியை சேர்ந்த பூமிநாதன். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் சக்திவேல் தனது நண்பர்களுடன் கேரளாவிற்கு வேலைக்கு செல்ல திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பூமிநாதன் மற்றும் அவரது கட்டிட மேஸ்திரி புதுக்கோட்டை மணி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சக்திவேலை தாக்கி அவரை ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர். உடனே அவர் சத்தம் போட்டார். இதனால் பயந்து போன 4 பேரும் தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து சக்திவேல் பொன்மலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர். பூமி நாதன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.       
    திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த சிந்துப்பட்டி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மொக்கமாயன் (வயது 42) விவசாயி.

    குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத் தினருடன் சண்டை போடுவார். இதனை மொக்கமாயனின் தந்தை காசிமாயன் நேற்று முன்தினம் கண்டித்தார்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மொக்கமாயன் வி‌ஷம் குடித்து விட்டார் என அவரது மனைவி சத்தம் போட்டார். உடனே அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மொக்கமாயன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மொக்கமாயனின் தாயார் பேச்சியம்மாள் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகனின் நெற்றியிலும் உடலில் சில பாகங்களிலும் காயம் இருந்தது. எனவே அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் மொக்கமாயனின் மனைவி முத்து, அவரது உறவினர் ஜோன்ஸ் மற்றும் காசிமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரத்தில் காதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் ராஜா.இவரும் இதே கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவை சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா பெற்றோரை பார்க்க விரும்பியதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்துள்ளனர்.

    அதன் பின்னர் ராமநாதபுரம்அருகே சக்கரகோட்டையில் வாடகை வீடு பிடித்து தங்கி வந்தனர். சில மாதங்களாக குமார் ராஜா வேலைக்குச் செல்லவில்லை. இதனை சண்முக பிரியா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார்ராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கணவர் குமார்ராஜா, மாமியார் ராஜம்மாள், உறவினர் செல்வம் ஆகிய 3 பேர் மீது கேணிக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகுபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 23). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது பழனியம்மாள் எழுதிய டைரி சிக்கியது. அதில் பழனியம்மாள் அழகாக இல்லை அவரது தங்கைதான் அழகாக இருப்பதாக கூறி தினந்தோறும் சரவணன் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனை உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.

    மேலும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    கோவை அருகே நேபாள சிறுமி மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள வாகராயன் பாளையத்தில் வசித்து வருபவர் நரேஷ் (35). அங்குள்ள கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் நேபாளம் ஆகும். கடந்த 20 வருடங்களாக இங்கு தங்கி உள்ளார்.

    நரேஷ் மனைவி கீதா. இவர்களது மகள் சுஜ்மிதா (10). நரேசின் உறவினர் தினேஷ் ராசி பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சிறுமி சுஜ்மிதா செல்ல வேண்டும் என தனது தந்தை நரேசிடம் தெரிவித்தார். ராசிபாளையத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சிறுமியை ராசிபாளையத்திற்கு நரேஷ் ஏற்றி விட்டார்.

    ஆனால் சிறுமி உறவினர் வீட்டுக்கு செல்லவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போதும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து நரேஷ் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகிறார்கள். சிறுமியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றவர் கடத்தி சென்றாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள 16 தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. இதில் தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் உள்ள குளறுபடிகளை பட்டியல் எடுத்து மாநகராட்சி அதிகாரியிடம் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கி உள்ளார். #DMK #VotersList

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று சென்னை மாநகராட்சிக்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியல் குளறுபடியை ஆதாரத்துடன் பட்டியல் எடுத்து வழங்கினார்.

    அதில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிக்கு தி.மு.க. சார்பில் பொறுப்பாளராக உள்ளதாகவும், 5 தொகுதியிலும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததில் நீக்கப்பட வேண்டிய பெயர்கள் 25 ஆயிரத்துக்கும் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதில் இடமாற்றம் இரட்டை பதிவு, இறந்தவர்கள் பெயர்களை அதிகாரிகள் இன்னும் நீக்காமல் உள்ளதாக குறிப்பிட்டுள் ளார்.

    சென்னையில் நடைபெற்ற முகாமில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்தால் தான் நீக்க முடியும் என்று கூறி விட்டனர்.

    எனவே தேர்தல் அதிகாரி இதற்காக தனி குழு அமைத்து சரி பார்த்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் குளறுபடி சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் காணப்படுகிறது. நான் 5 தொகுதிகளில் ஆய்வு செய்ததில் தொகுதிக்கு 25 ஆயிரம் ஓட்டுகள் நீக்கப்பட வேண்டிய கண்டறிந்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளே விட மறுப்பதால் அங்கு ஆய்வு நடத்த முடியவில்லை. அங்கு கணக்கெடுத்தால் இன்னும் அதிகம் இருக்கும்.

    எனவே தேர்தல் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் பட்டியலை சரிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் சென்று முறையிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பகுதிச் செயலாளர் மதன்மோகன், லயோலா லாசர் உடன் இருந்தனர். #DMK #VotersList

    பென்னாகரம் அருகே ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது60). இவர் ஆடு மேய்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மாதையனுக்கு திடீரென மயக்க ஏற்பட்டு மயங்கி கிடந்தார். 

    இதை பார்த்த குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

    இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர் அருகே மாடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வெல்டிங் தொழிலாளி திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர்:

    நாகையை அடுத்த மேலசெட்டிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 42). வெல்டிங் தொழிலாளி. இவர் நாகூரை சேர்ந்த சரவணராஜ் என்ற காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தர்.

    இந்நிலையில் நேற்று திருவாரூர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஒரு வீட்டில் தெய்வேந்திரன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது மாடியில் தெய்வேந்திரன் வெல்டிங் வேலை பார்த்த போது, திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து பலியான தெய்வேந்திரன், உடலை காண்டிராக்டர் சரவணராஜ் மீட்டு, நாகையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் தெய்வேந்திரன் அண்ணன் ராஜகோபால், திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனது தம்பி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண் மீது சூப் கடைக்காரர் போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். #MinisterJayakumar #AudioIssue
    சென்னை:

    தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் தகவல் பரவியது. அந்த பெண்ணிடம் அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் பேசுவது போன்ற உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே ‘அது தன்னுடைய குரல் அல்ல. ‘மார்பிங்’ செய்யப்பட்டிருக்கிறது.’ என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.



    இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண் சிந்து மீது சென்னை வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் 19-வது பிளாக்கில் வசிக்கும் பி.சந்தோஷ்குமார்(வயது 26) என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மண்ணடி புது தெருவில் ‘சூப்’ கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு பிராட்வே பிரபாத் குடியிருப்பில் வசித்தும் வரும் சிந்து என்ற பெண் தினமும் வருவார். 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கும், எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

    அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நானும் சிந்துவும் நெருக்கமாக பழகி வந்தோம்.

    கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் திடீரென்று சிந்து என் வீட்டுக்கு வந்தார். என்னிடம், ‘எனது அம்மாவுக்கு இதயக் கோளாறு இருக்கிறது. உடனே ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும்’ என்று கூறி அழுதார்.

    நான் என் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை கொடுத்தேன். அதன்பிறகு பலமுறை சிந்துவை அழைத்தபோது, எனது போனை எடுக்கவில்லை. இது தொடர்ச்சியாக நடந்ததால், நான் அவருடைய வீட்டுக்கு சென்ற போது, சிந்துவும், அவரது தாயார் சாந்தியும், மேலும் 2 பேர் இருந்தனர்.

    நான் சிந்துவை அழைத்த போது, ‘அவருடைய தாயார் என்னை அவமானப்படுத்தினார். சிந்துவை தவறான உறவுக்கு அழைத்தாய் என்று போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன்’ என்றும் மிரட்டினார்.

    என்னை ஆட்களை வைத்து மிரட்டிய சாந்தி மற்றும் அவரது மகள் சிந்து மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்ட ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த புகார் மனுவை இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி பெற்றுக்கொண்டு, விசாரணை நடத்தி வருகிறார். #MinisterJayakumar #AudioIssue
    ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.

    பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒரு தொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக பேச ராகுல்காந்திக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தையே நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என்று கூறுகிறார். ஆனால், அவர்கள் கட்சியினரால் கோஷ்டி பூசல் இன்றி சும்மா இருக்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia 
    திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள கூலிகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் தமிழ் செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். 

    கடந்த 20-ந்தேதி அன்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் தமிழ்செல்வி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் பதறி போன சின்னத்துரை மனைவியின் தந்தை சக்திவேலுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தமிழ்செல்வியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து இண்டூர் போலீசில் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தமிழ்செல்வியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×