search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
    புதுடெல்லி:

    ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

    வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு கொடுத்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #ChandrababuNaidu
    மாணவியை ரகசிய திருமணம் செய்த ஆட்டோ டிரைவர், இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சக்திவேல் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 8 மாதங்களாக காதலித்துள்ளார்.

    வீட்டில் யாருக்கும் தெரியாமல் டி.கல்லுப்பட்டி கோவிலில் வைத்து மாணவியை ரகசிய திருமணமும் செய்துள்ளார்.

    ஆனால் கடந்த சில நாட்களாக மாணவியுடன் சேர்ந்து வாழ சக்திவேல் மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தரப்பில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    அதில், சக்திவேல் வேறு பெண்ணை திருமணம் செய்யும் நோக்கத்தில் இருப்பதாகவும், அதற்காகவே தன்னுடன் வாழ மறுப்பதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் பட்டப்பகலில் பனியன் தொழிலாளியை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக்கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் கார்த்திக் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது வழிமறித்த 6 பேர் கும்பல் கார்த்திக்கை உருட்டுக்கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.

    சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் தப்பி ஓடினர். பொதுமக்கள் காயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன பிரச்சினை? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே தாயின் கண்முன்னே இளம்பெண்ணை காரில் வந்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கைலவணம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் பார்த்திபா (வயது 19). இவர் பி.இ. படித்துள்ளார்.

    கடந்த 3-ந் தேதி காலை தமிழ்ச்செல்வியும், பார்த்திபாவும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், சரவணன், மாரிமுத்து, புகேழேந்தி, சுப்பிரமணியன், தங்கம்மாள், சங்கீதா, மாதவன் ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து பார்த்திபாவை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் தடுத்துள்ளார். ஆனால் அவரை தள்ளிவிட்டு பார்த்திபாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ் பெக்டர் ஜெகதீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    வடமதுரை அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே பாடியூரைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே மில்லில் மதுரையைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

    இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். எனவே 2 பேரும் கோவையை விட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள பாடியூருக்கு வந்தனர். மைனர் பெண்ணை குமார் கடத்தி வந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து 2 பேரையும் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

    மகள் மாயமானது குறித்து மதுரை போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே 2 பேரையும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை தண்டல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    முருகேசனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த முருகேசன் கருவேலம் பட்டியில் உள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளிமலைப் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மேலும் தகராறு அதிகரித்தது.

    இதில் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஒட்டப் பட்டியைச் சேர்ந்தவர் துரை (வயது 37). இவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். 

    இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெர்சின் என்ற மகன் உள்ளார். துரை வேலைக்காக வெளியூருக்கு சென்று விடுவதால் மோனிஷா தனது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற துரை வீடு திரும்பி வந்ததும், மோனிஷா தனிக்குடித்தனம் செல்லலாம் என்று அவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை கண்ட மோனிஷாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி இந்துமதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அருண் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்துமதியை பார்ப்பதற்காக அவரது தாயார் செல்வி வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் செல்வி, மகள் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவரது கணவர் மற்றும் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. ஜவகர், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஆறுகாணி கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மகன் சரத் (வயது 18). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் அவர், மேல்படிப்பிற்கு பணம் இல்லை என சரத் கூறி வருத்தப்பட்டு வந்தார். நேற்று உறவினர் வீட்டில் படுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆறுகாணி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    நெல்லை மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது68). இவரது மகள் மகராசி (29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாப்பிள்ளை பார்த்து வந்தனர். 

    இந்த நிலையில் வீட்டில் இருந்த மகராசி கடந்த 23-ந்தேதியன்று திடீரென்று காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்க வில்லை. இதுதொடர்பாக சண்முகசுந்தரம் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகராசியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பட்டன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சுபலட்சுமி (18). இவருக்கும் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி முதல் சுபலட்சுமியை காணவில்லை.

    இது குறித்து சுந்தர்ராஜ் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.
    பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குஞ்சம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் முத்துவேலன், ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி அமுதா (வயது34). இவர் உசிலம்பட்டி பெண் போலீசாக  பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த  உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினையால் அமுதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.


    இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார்.  இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.

    இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.  பசு நல்லிணக்கத்தின் அடையாளம்.  இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.  சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.  இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறினார்.

    இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. புகார் அளிக்கும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
    ×