என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99810
நீங்கள் தேடியது "அமேதி"
அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.
அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இங்குள்ள பரவுலியா கிராமத்தின் குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங். கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர்.
உபியின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Amethi #karmabhoomi #RajivGandhi #sacredland #Priyanka
லக்னோ:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தொகுதிக்கும் தங்களது குடும்பத்துக்கும் இடையில் உள்ள நெருக்கமான பந்தம் தொடர்பாக குறிப்பிட்டார்.
’சில உறவுகள் இதயத்தோடு நெருக்கமாக உள்ளவையாகும். இந்த அமேதி தொகுதி எங்கள் தந்தையின் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) புண்ணியபூமி, எனவே, இது எங்களது புனிதஸ்தலம். அதனால்தான், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கலுக்காக நாங்கள் இங்கே குடும்பமாக வந்திருக்கிறோம்’ என பிரியங்கா உணர்வுப்பூர்வமாகவும், உருக்கமாகவும் தெரிவித்தார். #Amethi #karmabhoomi #RajivGandhi #sacredland #Priyanka
மக்களவவைத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். #RahulGandhi
17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தை மேற்கொள்கிறார். இதையடுத்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 6-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019
உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
லக்னோ:
வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.
இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
லக்னோ:
வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.
இந்நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமேதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நலத்திட்ட விழாவில் பேசிய பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது என தெரிவித்துள்ளார். #Amethi #BJP #SmritiIrani #Modi #RahulGandhi
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இன்று சுற்றுப்பயணம் செய்தார்.
அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரத்தை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமேதி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 2017ல் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது.
காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில்தான் அமேதியின் வளர்ச்சி அதிகரித்து வந்துள்ளது. அமேதி முன்னேற்றத்துக்கு மோடி அரசுதான் காரணம்.
அயோத்தியா விவகாரத்தில் கோர்ட் நடவடிக்கைகளை வேகப்படுத்தாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Amethi #BJP #SmritiIrani #Modi #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனவரி 4ம் தேதி அமேதிக்கு செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Amethi #RahulGandhi #SmritiIrani
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இவர், கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனவரி 4ம் தேதி அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதிக்கு ஜனவரி 4ம் தேதி செல்லவுள்ளார். அங்கு கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரத்தை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
ஒரே நாளில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அமேதியில் முற்றுகையிட உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Amethi #RahulGandhi #SmritiIrani
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். #RahulGandhi #Amethi
அமேதி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடுகிறார்.
கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது 2-வது முறை ஆகும். ராகுல் காந்தி கடந்த மாதம் அமேதி தொகுதிக்கு செல்வதாக இருந்த பயண திட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். #RahulGandhi #Amethi #Tamilnews
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடுகிறார்.
கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது 2-வது முறை ஆகும். ராகுல் காந்தி கடந்த மாதம் அமேதி தொகுதிக்கு செல்வதாக இருந்த பயண திட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். #RahulGandhi #Amethi #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X