search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள்"

    இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ பிரேமலதா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சிபிஎஸ்சி மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து பலதரப்பட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி அளித்தனர். அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சில பா.ஜ.க.வினர் பேசும் கருத்துக்கள் சர்ச்சைக்கு பெயர் போனவை என்றாலும், பெண் வன்கொடுமை குறித்து ஒரு பெண் எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்து தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    சென்னை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கத்தில் திருநங்கைகளை உல்லாசத்துக்கு அழைத்த 25 இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதியில் திருநங்கைகளுடன் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் கூடுவது வழக்கம்.

    போதையில் மிதக்கும் இளைஞர்கள் பலர் நள்ளிரவு நேரத்தில் உற்சாக மிகுதியில் சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதிக்கு செல்வதுண்டு. அங்கு எப்போதும் சாலையில் திருநங்கைகள் அணி வகுத்து நிற்பார்கள். அவர்கள் காரில் வரும் வாலிபர்களிடம் சென்று அருகில் உள்ள இருட்டான பகுதிக்கு செல்லலாம் என்று கூறுவார்கள். இதில் மயங்கும் இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் வாங்கிக் கொள்வார்கள்.

    இது தொடர்பாக திருநங்கைகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த குமார், கோயம்பேட்டை சேர்ந்த வருண்குமார், பாலா, ஆறுமுகம், ஆவடி சிவகுமார், சபரிநாதன், கொடுங்கையூர் ராஜேஷ்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் மேலும் 18 பேர் சிக்கினர். இவர்கள் 25 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இரவு நேரங்களில், இளைஞர்கள் யாரும், நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிக்கு திருநங்கைகளை தேடி வரவேண்டாம் என்றும் இதை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கைதான இளைஞர்கள் அனைவரும் 20 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    திருநங்கைகளின் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்து வேல்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    செல்போன் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு, அதை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அந்த இளைஞர்களிடம் சக்தி இருக்கிறது. அவர்களுக்கு தேவையான தெளிவும் உள்நிலையில் ஒரு சம நிலையையும் உருவாக்கி கொடுத்தால் அந்த சக்தியை ஒரு மகத்தான சக்தியாக மாற்ற முடியும்.

    அதன் அடிப்படையில் இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள் நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நாடு தழுவிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    கேள்வி:- மொபைல் அடிமைத் தனத்தில் இருந்து இளைஞர்களை எப்படி மீட்பது?


    சத்குரு பதில்:- மொபைல் என்பது ஒரு சிறந்த நவீன கண்டுபிடிப்பு. அதை நல்ல முறையில் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, கட்டாயத்தின் அடிப்படையில் மொபைல் போனை பயன்படுத்துவதால் தான் அதற்கு அடிமையாகி உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் அதை பயன்படுத்தினால் அந்த அடிமைத் தனத்தில் இருந்து விடுபடலாம்.

    கேள்வி:- இளைஞர்களின் தற்கொலையை தடுக்க உங்களுடைய ‘இளைஞரும் உண்மையும்’ என்ற பயணம் எப்படி உதவும்?

    பதில்:- இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்று. குறிப்பாக, 15 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் நம்முடைய தற்போதைய கல்வி முறையில் உள்ள அழுத்தங்களால் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என சொல்லப்படுகிறது.

    எனவே, கல்விமுறையில் கொள்கை அளவில் தேவையான மாற்றங்கள் செய்வதற்கு மத்திய அரசுடன் பேசி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீதம் நேரம் மட்டுமே கல்வி கற்பதற்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை விளையாட்டு, இசை, பாரம்பரிய கலைகள் போன்றவற்றுக்காக ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்க உள்ளோம்.

    கேள்வி:- நீங்கள் நடத்தும் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நகர்புறங்களில் தான் நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பயன்பெறுவார்கள்?

    பதில்:- கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள் அனைத்தும் தொலைதூர கிராமப் புறங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 9,000 கிராமப்புற மாணவர்கள் நகர் புறங்களுக்கு இணையாக தரமான ஆங்கில வழி கல்வி கற்கின்றனர். மேலும், ஈஷா வித்யா பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு முழு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, தமிழகத்தில் 400 அரசு பள்ளிகளிலும், ஆந்திராவில் 4000 அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கேள்வி:- இந்தியாவில் நிறைய வேலையின்றி சிரமப்படுகின்றனர். போதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

    பதில்- நம்முடைய இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப போதிய தொழில் வளர்ச்சிகள் இன்னும் உருவாகவில்லை. அரசு வேலை என்பது வெகு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும். மேலும், இளைஞர்கள் படித்து பட்டம் வாங்கி விட்டு பிறரிடம் வேலை கேட்டு செல்வதை சற்று குறைக்க வேண்டும். அவர்களே நேரடியாக மக்களுக்கு பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும்.

    கேள்வி:- மத்திய அரசுக்கு நீங்கள் அளிக்கும் பரிந்துரையில் விவசாயத் துறைக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள்?


    பதில்:- தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடை சந்ததியினர் விவசாயம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் உணவு பாதுகாப்பு என்பது பெரியளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே, புதிய கல்வி கொள்கை உருவாக்கும் போது அதில் விவசாய கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    பெற்றோருடன் சேர்ந்து சிறு வயதில் இருந்தே வயலில் இறங்கி வேலை பார்த்தால் தான் விவசாயத்தை கற்றுக் கொள்ள முடியும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டும் விவசாயம் செய்துவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒருசம நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் “இளைஞரும் உண்மையும்” என்ற ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது.

    இதன் தொடக்கமாக இம்மாதம் (செப்டம்பர்) கோவை, சென்னை, பெங்களூரு, மைசூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங்க், வாராணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    ஐ.ஐ.எம். பெங்களூரு, ஐ.ஐ.டி மும்பை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம். அகமதாபாத் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ‘இளைஞரும் உண்மையும்’ என்ற நிகழ்ச்சி அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் தாங்கள் விரும்பும் எந்த கேள்வியையும் சத்குருவிடம் கேட்க முடியும்.

    மேலும், இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள், கேள்வி பதில்கள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தப்பட உள்ளது. #JaggiVasudev
    தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட வழக்கில் 6 இளைஞர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #NIA #ISISMember
    புதுடெல்லி:

    கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கனகமாலா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் மன்சித் முகமது, சுவாலி முகமது, ரஷித் அலி, ராம்சத் என்.கே., சப்வன், ஜசிம் என்.கே. ஆகிய 6 இளைஞர்கள் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் அவர்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள், பகுத்தறிவுவாதிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டியது தெரிய வந்தது. இவர்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று தனிப் பகுதிகளை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் 6 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு மார்ச் மாதம் எர்ணாகுளம் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த கோர்ட்டு கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. 
    கர்நாடக மாநிலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் அருவியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Karnataka #selfieKills
    பெங்களூரு:

    இளைஞர்களின் செல்ஃபி மோகம் மிகவும் அதிகரித்து உயிர் பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதும், தங்கள் உயிரை இழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேகதாது அருவியில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, ஒருவர் அருவியில் தவறி விழ, அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவர்கள் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஷமிர் ரஹ்மான், பவானி சங்கர் என்பது தெரியவந்துள்ளது. #Karnataka #selfieKills
    இளைஞர்களுக்கு அ.தி.மு.க.வில்தான் எதிர்காலம் இருக்கிறது என்று மதுரையில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அவர்கள்.

    அவர் வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறார். எனவே தான் 1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க. இயக்கத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமாக சேர்ந்து வருகிறார்கள்.

    தி.மு.க.வில் உள்ள இளைஞர்களுக்கு பதவியும் கிடைக்காது. எதிர்காலமும் இல்லை. அங்கே அவர்களது வாரிசுகள்தான் பதவிக்கு வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எதிர்காலம் உண்டு.

    தேடி வந்து இளைஞர்களுக்கு பதவியை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இதை உணர்ந்த காரணத்தால்தான் அ.தி. மு.க.வில் இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். எனவே இந்த அரசுக்கும், ஆட்சிக்கும் இளைய சமுதாயம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, பரவை ராஜா, கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பாஸ்கரன், பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×