என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99866
நீங்கள் தேடியது "காலா"
காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கு எதிராக யார் போராடினாலும், படம் கண்டிப்பாக வெளியாகும். அதை யாரும் தடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது.
காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ்,
பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.
படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth #PrakashRaj
Prakash Raj Kaala Rajinikanth Nana Patekar Huma Qureshi Anjali Patil Samuthirakani Sampath Santhosh Narayanan Dhanush Wunderbar Films Kasthuri rao Lyricist Vivek காலா பா.ரஞ்சித் காலா ரஜினிகாந்த் நானா படேகர் ஹூமா குரோஷி அஞ்சலி பாட்டீல் கஸ்தூரி ராவ் சமுத்திரக்கனி சம்பத் சந்தோஷ் நாராயணன் தனுஷ் பிரகாஷ் ராஜ்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படம் தொடர்பாக ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Kaala #Rajini
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் வியாழன் ரிலீசாக இருக்கிறது. இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் ரஜினிக்கு அனுப்பி இருக்கும் வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனது கட்சிக்காரரின் தந்தை திரவியம் நாடார் 1957-ல் தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றவர். தூத்துக்குடி அப்போது கடும் வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டதால் புலம்பெயர்ந்தார்.
இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட அவர் மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டவர். அவரது காலகட்டத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு காவலராக விளங்கியவர்.
“இந்தப் படத்தின் கதை என்னுடைய அப்பா தொடர்பானது என்று தெரிகிறது. தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற என் தந்தை தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம். அவரை அங்குள்ள மக்கள் காட்பாதர் எனப் பொருள்படும் வகையில், ‘காத்வாலா சேட்’ என்றே அழைப்பர்.
காலா படத்திலும் அது குறித்து கூறப்பட்டுள்ளது. அதோடு என் தந்தை சர்க்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர். இதுவும் படத்தில் வருகிறது.
ஆனால், நிஜத்திற்கு விரோதமாக படத்தில் காட்வாலா சேட் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. என் தந்தை சட்ட விரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர்.
எனவே இப்படத்தால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு நடிகர் ரஜினி மற்றும் தனுஷ், 36 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். அவதூறுக்காக ரஜினி ரூ.101 கோடி தரவேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி நடித்திருக்கும் 2 நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி, வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்க படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #HumaQuereshi
காலாவில் ரஜினியின் காதலியாக நடித்து இருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. படத்தில் 40 வயது பெண்ணாக வருகிறார். மும்பையை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக வந்து ரஜினிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
காலா படத்தை தொடர்ந்து தென் இந்திய மொழிகளில் ஹூமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெங்கடேஷ், நாகசைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஹூமா குரோஷி விரைவில் தமிழில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HumaQuereshi
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வே, சுவிஸ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth
ரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ரஜினி. சமூக விரோதிகள் சிலரால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதாக கூறினார். ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது.
இதற்கிடையே காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ‘காலா’ படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலும் ரிலீசாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து ‘காலா’ ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ‘காலா’ படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth
கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதில் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajinikanth #Kaala #Karnataka
பெங்களூர்:
கர்நாடகாவில் காலா படம் திரையரங்குகளில் திரையிடுவதை எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட லன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜிடம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுத்துள்ளது.
நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.
இதுபற்றி ரஜினிகாந்த்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்’’ என்றார்.
ரஜினி அண்ணன் சத்திய நாராயணா கூறுகையில், ‘‘காலா படத்தை கர்நாடக மக்கள் எதிர்க்கவில்லை. சில தனிப்பட்ட அமைப்புகள் தான் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகாவிட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் படம் வெளியாகும்’’ என்றார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்த் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்சினையை நான் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன், மக்கள் முடிவை ஆதரிப்பேன்’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த 2016-ம் ஆண்டு ‘நாகர் காவு-2’ கன்னட படத்தை சென்னையில் 8 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தோம். ஆனால் சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் என்று படத்தை வெளியிடக்கூடாது என்று தடுத்துவிட்டார். அப்போது ரஜினிகாந்த் எங்கே போனார்.
கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #Kaala #Karnataka
கர்நாடகாவில் காலா படம் திரையரங்குகளில் திரையிடுவதை எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட லன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜிடம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுத்துள்ளது.
நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலா படத்தை திரையிடுவது தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சமாதானப்படுத்தினார்.
இதுபற்றி ரஜினிகாந்த்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்’’ என்றார்.
ரஜினி அண்ணன் சத்திய நாராயணா கூறுகையில், ‘‘காலா படத்தை கர்நாடக மக்கள் எதிர்க்கவில்லை. சில தனிப்பட்ட அமைப்புகள் தான் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகாவிட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் படம் வெளியாகும்’’ என்றார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்த் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்சினையை நான் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன், மக்கள் முடிவை ஆதரிப்பேன்’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த 2016-ம் ஆண்டு ‘நாகர் காவு-2’ கன்னட படத்தை சென்னையில் 8 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தோம். ஆனால் சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் என்று படத்தை வெளியிடக்கூடாது என்று தடுத்துவிட்டார். அப்போது ரஜினிகாந்த் எங்கே போனார்.
கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #Kaala #Karnataka
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படக்குழுவினர், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். #Kaala
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காலா படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் இடம் பெறும் ‘கண்ணம்மா...’ என்ற பாடலின் புரமோ வெளியானது. தற்போது காலா புரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.
இந்த புரமோவில், ‘நான் காலா... எமன், எமராஜ்’ என ரஜினி பேசும் வசனம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். #Kaala #Rajinikanth
போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு, போராடவே கூடாதென்று ரஜினி சொல்லவில்லை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். #Kaala #Ranjith
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘காலா’. இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயத்துடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் இயக்குனர் பா.இரஞ்சித்.
அப்போது, போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் நேற்று கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பா.இரஞ்சித், “அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் ‘போராட்டமே கூடாது’ எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். ‘போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை.
ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது’ என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார். போராட்டமே கூடாது என்றால், நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும். நிச்சயமாகப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாவது குறித்து இன்று முடிவு வெளியிடப்படும் என்று விஷால் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளா காலா படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய டிரைலர் வெளியாகிய நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
இதுகுறித்து கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறும்போது,
ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு.
இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்போம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் என பலரும் பேசியுள்ளோம். அது எங்களின் தனிப்பட்ட கருத்து, அதனால் படம் பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ரஜினி சார் அரசியல் வருவதில் தவறில்லை. படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே, மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு அவ்வளவுதான். எனவே இந்த பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு எட்டும் என்று நம்புகிறோம் என்றார். #Kaala #Rajinikanth
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘வர்மா’ படத்தில் ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்த நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஈஸ்வரி ராவ். ரஜினியுடன் நடிக்க இளம் நடிகைகள் எல்லாம் போட்டி போட ஈஸ்வரி ராவை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
காலா படம் வெளியாவதற்கு முன்பே இன்னொரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கவும் தொடங்கி விட்டார். பாலா இயக்க விக்ரம் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இதை படக்குழு ரகசியமாக வைத்து இருக்கிறது.
வர்மா படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தழுவல். அந்த படத்தில் ஒரு வேலைக்காரி வேடம் இருக்கும். அந்த வேடத்தையே பெரிய கதாபாத்திரமாக்கி அதில் நடிக்க வைத்துள்ளார் பாலா.
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தை எதிர்த்து போராட்டம் நடித்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். #Kaala #Rajini
‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்பது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘குசேலன்’ படப்பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுந்தபோது அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்தார். தற்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறி அரசியல் தலைவர் ஆகிவிட்டார். அவர் தனது அரசியல் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர் நடித்த ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக ரஜினிகாந்த் ஆணித்தரமாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், காவிரி நதி நீர் பங்கீட்டு அதிகாரங்களை காவிரி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
மேலும் அவர், காங்கிரஸ் -ஜே.டி.எஸ். கூட்டணி அரசு காவிரி நீரை விவசாயிகளுக்கு திறந்து விட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிட தடை விதிப்பதாக கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளன.
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், நான் அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ajith #SakshiAgarwal
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை’ என்றார்.
இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது கடவுள் கொடுத்த பரிசு என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியிருக்கிறார். #Kaala #SakshiAgarwal
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, ‘ரஜினி சார் படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் வெளிநாடுக்கு சென்ற போது அங்கு இருப்பவர்கள் ரஜினியை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் பார்த்ததில்லை என்று கூறினேன். ஆனால், இப்போது அவருடன் படத்திலேயே நடித்திருக்கிறேன் என்பது கடவுள் கொடுத்த பரிசாக கருதுகிறேன். ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது.
இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே, ஒரு படம் வரைந்தார். அது அந்த படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் வரைந்தார். நான் பேசுவதை கவனித்துக் கொண்டே படத்தையும் திறமையாக வரைந்தார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது.
இயக்குனர் பா.இரஞ்சித் தான் இப்படத்தின் தலைவன். இவர் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது.
படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷை படப்பிடிப்பின் போது நான் பார்க்கவே இல்லை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தான் பார்த்து பேசினேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இவரது நடிப்பு ஹாலிவுட் வரை சென்றிருப்பது பெருமை.
காலா திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூன் 7ம் தேதி ரசிகர்களை போல் நானும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X