search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன்"

    ‘பைக்கிங் ராணிகள்’ என்றழைக்கப்படும் குஜராத்தை சேர்ந்த 3 பெண்கள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் வழியாக லண்டன் வரை சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்த டாக்டர் சரிகா மேத்தா என்பவர் இதற்கு முன்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சாகசப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

    தன்னுடன் குடும்பத்தலைவியான ஜினால் ஷா மற்றும் கல்லூரி மாணவியான ருட்டாலி படேல் ஆகியோரை இணைத்துக் கொண்டு ‘பைக்கிங் ராணிகள்’ என்ற குழுவை டாக்டர் சரிகா மேத்தா ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த குழுவினர்  ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் வழியாக 25 நாடுகளை கடந்து லண்டன் வரை சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். பெண்களின் பெருமிதத்தை பறைசாற்றும் விதமாக  கரடுமுரடான மலைப்பாதை, பாலைவனம் வழியாக செல்லும் இவர்களின் இந்த சாகசப் பயணம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலையடிவாரப் பகுதியில் இருந்து ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது.



    உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வாரணாசி நகரில் இவர்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    நேபாளம், பூடான், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், லாட்வியா, ரஷியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், மொராக்கோ வழியாக பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன் சென்றடைய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    மோடி என்று பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன் என லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். #LalitModi #RahulGandhi
    லண்டன்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 13-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மோடி என்று பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர் கள் என்று குறிப்பிட்டார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தார். தனி நபரான என்னை விமர்சிப்பதற்காக ஒரு இனத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார் என்று அவர் கூறினார்.

    ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி, பாட்னா நகர தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.



    இந்நிலையில் நிதி முறைகேடு புகாரில் சிக்கி இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளிட்டுள்ள செய்தியில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுல் காந்தியை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன். 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகிற்கே தெரியும்” என்றும் பதிவிட்டுள்ளார். #LalitModi #RahulGandhi
    ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். #Wikileaks #JulianAssange
    லண்டன்:

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.

    பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

    இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

    இந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். 

    ஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார்  கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Wikileaks #JulianAssange
    நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #NiravModi
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
     
    லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான அடுத்த விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #NiravModi
    லண்டனில் மைசூரின் கடைசி திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதனை மக்கள் ஆர்வத்துடன் மிகுந்த விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். #TipuSultanarmoury #UKAution
    லண்டன்:

    திப்பு சுல்தான் 1750ம் ஆண்டு நவம்பர் 20ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் மகனாவார். பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திப்பு, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

    திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின்போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் ஆயுதங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 97 லட்சத்து 27 ஆயிரத்து 497 ரூபாய்) ஏலம் போனது. மேலும் வெள்ளி பூண் கொண்ட துப்பாக்கி, மற்றும் குறுவாள் ஆகியவை 60 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 880 ரூபாய்) ஏலத்திற்கு விடப்பட்டது.



    இந்த துப்பாக்கிகள் மற்ற துப்பாக்கிகளை போல் இல்லாமல் மிகவும் அதிக சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்கத்தினால் முலாம் பூசப்பட்ட வாள் காண்போரை கவரக்கூடிய வகையில் இருந்தது. இந்த வாள் 18500 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 519 ரூபாய்) ஏலம் போனது. #TipuSultanarmoury #UKAution  
    பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோட் கலைஞர் ஒருவர், மனித அமைப்பை அப்படியே கொண்டு ரோபோட்டை உருவாக்குகின்றார். #Robotartist #DrawPeople
    லண்டன்:

    உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இந்த பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் உருவாக்கி வருகின்றார். இதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலைநயத்துடன் செய்து வருகிறார்.

    இதையடுத்து இந்த ரோபோட், அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. பெண்களைப் போன்று இயற்கையான முடிகள், புருவங்கள் போன்றவற்றை பொருத்தும் பணியில் சிறப்பு கலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், ‘ஐடா ரோபோட்டினால் மக்களிடையே உரையாட முடியும். இன்றைய தொழில்நுட்பத்தினைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். ஐடாவின் அசைவுகள், நகர்வுகள் யாவும் மனிதர்களை போல இயல்பாக இருக்கும். கண் விழிகள் பொருத்தப்பட்டு,  ஐடா இருக்கும் அறை முழுதும் பார்க்கும் அளவிலும், மனிதர்களுடன் கண் அசைவின் மூலம் தகவல்களை பரிமாற முடியும்.

    மேலும் கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு ஐடா இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும். இந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

    மெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.



    கார்ன்வாலின் பால்மவுத் நகரில் உள்ள பொறியியல் கலை நிறுவனத்தின் மூலம் பல பொறியாளர்களின் தொடர் முயற்சியினால், இந்த ரோபோட் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன. #Robotartist #DrawPeople  

    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    லண்டன்:

    கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி செய்தி வெளியிட்டுள்ளது.

    டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali
    லண்டன்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali

    இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினரும் பாகுபாடு இன்றி இந்தியாவில் கொண்டாடினர்.

    இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #Diwali
    லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். #ArsonAttack #IndianOriginFamily
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு 4, 5 இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மயூர் கார்லேகர் குடும்பத்தினரை எழுப்பி விட்டனர். இதனால் அவர்கள் உயிரோடு எரித்துக்கொல்ல நடந்த முயற்சியில் இருந்து தப்பினர். உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    இது குறித்து மயூர் கார்லேகர் கூறும்போது, “நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அக்கம்பக்கத்தினர் உரிய வேளையில் தட்டி எழுப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சரியான நேரத்தில் இந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    சம்பவ இடத்தில் பதிவான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மாநகர போலீசார் துப்பு துலக்குகின்றனர்.

    இதை வெறுப்புணர்வு குற்றமாக கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    மயூர் கார்லேகர், மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானே டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர். 1990-க்கு பின்னர் லண்டனுக்கு குடும்பத்துடன் சென்று குடியேறினார். டிஜிட்டல் ஆலோசகராக இருந்து வருகிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் முதல் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்பே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாட ஆரம்பித்த ஸ்ருதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் தொடர்ந்து பாடி வருகிறார். அத்துடன் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

    கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஸ்ருதிஹாசன் தான் இசை அமைத்திருந்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கும் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். நேற்று முன் தினம் நடந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருதிரளான கூட்டம் வந்தது. 

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தானே இசையமைத்து பாடல்களை பாடினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், அந்நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
    ×