search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன்"

    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க்கிடம் இழந்துள்ளது. #NewYorkovertakes #topfinancialcentre
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்ததுபோல் இனி வர்த்தக உறவுகளை இனி பிரிட்டன் தொடர முடியாது என கருதப்படுகிறது. எனவே, உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

    அவ்வகையில், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை  நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.


    இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100  நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயார்க், இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #NewYorkovertakes #topfinancialcentre
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். #NawazSharif #KulsumNawaz
    லண்டன்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.



    இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #NawazSharif #KulsumNawaz 
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, தேனீர் இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  



    உணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லரும், அடில் ரஷீத்தும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    அடுத்து இறங்கிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  

    இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 63 ரன்னுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 90 ரன்களை சேர்த்துள்ளது. 

    இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா2 விக்கெட்டும் வீழ்த்தினர். #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvIND
    மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் உயிரிழந்த ஒரு பெண், ‘நான் இறந்தபோது எப்படி உணர்ந்தேன்’ என்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
    லண்டன்:

    ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும், அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மிச்சைலி, கட்டிலில் படுத்தபடியே, சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும், அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், மரணம் மிகவும் அமைதியானது, அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற இன்னும் 107 ரன்கள் தேவைப்படுகிறது. #INDA #WIA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.



    இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக ஆடிய விஜய் சங்கர் 30 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி சார்பில் ரேமன் ரீபர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து  வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர்.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் மேம்ப்பெல் 61 ரன்னுடனும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ சார்பில் மொகமது சிராஜ் 4 விக்கெட்டுக், ரஜ்னீஷ் குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாத்வ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
    ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரை சதமடித்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரி 66 ர்ன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இன்னும் ஒரு நாள் மீதமிருக்க, 107 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்தியா ஏ வெற்றி பெறும் என்றே தெரிகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது. #INDA #WIA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கேம்ப்பெல், தாமஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் கருண் நாயர், அங்கிட் பாவ்னே மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக ஆடிய விஜய் சங்கர் 30 ரன்களும் எடுத்தனர். 



    இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி சார்பில் ரேமன் ரீபர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய ஏ அணியை விட 206 ரன்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvENGA #ENGAvINDA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சாம் ஹெய்ன், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

    இருவரும் சேர்ந்து 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய சாம்
    ஹெயின் 108 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 83 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

    இந்தியா ஏ சார்பில் தீபக் சாஹர், கலீல் அகமது தலா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ரிஷப் பந்த் 15 ரன்னிலும், மயங்க் அகர்வால் 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 20 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், ஹனுமா விஹாரி 37 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்ட்யா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது. #INDAvENGA #ENGAvINDA
    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏற்பட்ட தீயை, 58 தீயணைப்பு துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட போல்கால்கள் வந்துள்ளது. இதையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

    அவர்கள் அங்கு செல்வதற்குள் கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின் பால்கனி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    பிரிட்டனுக்கு பணிக்கு சென்று அங்கேயே வாழும் பிற நாட்டவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற சமீபத்திய அறிவிப்பை திரும்பப்பெறும் திட்டமில்லை என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. #UKImmigrantPolicy #India
    லண்டன்:

    பிரிட்டன் அரசு சமீபத்தில் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கியது. இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பிரிட்டனில் உயர் பணிகளில் இருக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மிகப்பெரிய பிரசாரம் மேற்கொண்டனர். அரசின் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

    இதையடுத்து, குடியுரிமை விதி குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை மந்திரி கரோலின் நோக்ஸ், அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணி புரிபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். #UKImmigrantPolicy #India
    ×