search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணைத்தலைவர்"

    அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    திரைத்துறையில் நண்பர்களாக இருந்து வந்த ரஜினியும் கமலும் அரசியலில் நேர் எதிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரது கொள்கைகளும் மாறுபட்டு இருக்கின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகள் வாங்கி இருக்கிறார். 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் கடந்து இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறார்.



    ரஜினியும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளார்.

    அரசியல் களத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டால் பெரிய வெற்றி பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. ரஜினியும் கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு ஒரு வார இதழில் பேட்டியளித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்து இருக்கிறார்.

    மகேந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் தலைவர் கமலுக்கும் ரஜினிக்கும் நல்ல நட்பும் தோழமையும் உண்டு. ஆனால் அரசியலை பொறுத்தவரை அவருடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை காலமும் தலைவரும்தான் முடிவு செய்யவேண்டும். தவிர, கூட்டணி வி‌ஷயத்தால் எங்கள் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    ஆகவே, கூட்டணி பற்றி நாங்கள் அவசரப்பட மாட்டோம். தேசியக்கட்சிகள் வி‌ஷயத்திலும் எங்கள் நிலைப்பாடு இதுதான்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NITIAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார். அவர் ‘டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும். இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

    காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பூர்வீகம் குறித்து கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத்தலைவரை பதவிநீக்கம் செய்து மாயாவதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். #Mayawati
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவராக சமீபத்தில் ஜெய் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டார். நேற்று கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெய் பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் ஒருபோதும் ராகுல்காந்தியால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சி தலைவரின் பூர்வீகம் குறித்து அவதூறாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அதனால், அவரை தேசிய துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், ஜெய் பிரகாஷ் சிங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Mayawati
    ×