என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்பழகன்"
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள்- சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கட்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் தக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் கொள்கைப் பேராசான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே லட்சியம் என வாழ்பவர். கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகைக்கு டிசம்பர் 19-ம் நாளன்று 97-வது பிறந்தநாள்.
கலைஞரைவிட வயதில் மூத்தவர். தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாக கலைஞருக்குத் துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர். பேராசிரியர் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.
கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பெருந்தகையின் பிறந்த நாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேராசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் மாணவர்களாக கழகத்தினர் செயல்பட்டு, அவர் நமக்கு கற்றுத்தந்த கொள்கை பாடங்களுக்கு சிறப்பு சேர்ப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். புதுவை மாநில அரசு ஆசிரியர் தினத்தை கொண்டாடும் தகுதியை இழந்துள்ளது.
புதுவை அரசு பட்ஜெட்டில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை. 10 ஆண்டுக்கு முன்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தனர்.
படிப்படியாக இது குறைந்து தற்போது 74 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு அரசு பள்ளியின் கல்வித்தரம், உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்காததுதான் காரணம்.
மாணவர்களுக்கு பள்ளி திறந்து 3 மாதமாகியும் இதுவரை சீருடைகூட வழங்கப்படவில்லை. சைக்கிள், குடை, மழைக் கோட், உதவித்தொகை என எதையும் அரசு வழங்கவில்லை.
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கறுப்பு தினமாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை அவர்கள் மீது அரசு திணித்துள்ளது. 6 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது சம்பள கமிஷனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தியும், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தவில்லை.
சிறுபான்மையினர்தான் நிதியுதவி பெறும் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அரசு திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கிறது. கவர்னரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் வெளி நாட்டில் படிக்கும் மாணவி விமானத்தில் வரும்போது தமிழிசை சவுந்தரராஜனையும், அவர் சார்ந்த கட்சியையும் விமர்சித்தார். மலிவு விளம்பரம் தேடும் நோக்கத்தில் அந்த மாணவி செயல்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் அவரின் முகத்திற்கு எதிரே அவரைப்பற்றியோ, அவர் கட்சியை பற்றியோ விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே ஸ்டாலின் ரெயிலில் தன்னுடன் பயணம் செய்தவர் செல்பி எடுத்தபோது கன்னத்தில் அறைந்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் டுவிட்டரில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது அரியாங்குப்பத்தில் விமர்சித்தார் என்பதற்காக வேட்டியை மடித்து கொண்டு இறங்கி சென்றவர் நாராயணசாமி. தனக்கென்றால் ஒன்று, பிற கட்சிகளுக்கு என்றால் ஒன்று என இவர்கள் பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #DMKMeeting #Anbazhagan
புதுவை மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆரம்ப காலம் தொட்டே அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 600 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 3 மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் 1050 இடங்கள் உள்ளது.
இதில் 525 எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் அதற்குரிய சட்டத்தை கொண்டு வரமால் தொடர்ந்து புதுவை அரசு தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய ஊழலும் முறைகேடுகளும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் நிகர் நிலைப்பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கொடுக்கப்படாத நிலையிலும் ஆண்டுதோறும் 140 இடங்கள் பெறப்பட்டது. ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுபற்றி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அரசு எடுத்துக்கூறி இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதை செய்யாமல் தனியார் முதலாளிகளுக்கு சாதகமான நிலையை அரசு மேற்கொண்டது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டத்தை கொண்டு வரவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
அரசு சட்டத்தை கொண்டுவர எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டத்தின் இறுதி நாளில் சட்டத்தை கொண்டு வருவதாக எங்களை ஏமாற்றினர். தற்போது 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒரு இடம் கூட நமக்கு கிடைக்கவில்லை.
காலியாக உள்ள 450 இடங்களுக்கு மாஆப் கவுன்சிலிங் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்ப உள்ளனர். ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ. 19 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை கட்டண குழு நிர்ணயித்து உள்ளது.
கட்டண குழுவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெறப்படுகிறது அதுபோல பகுதியில் பெறாதது ஏன்..?
இதுதொடர்பாக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் மருத்துவக் கல்லூரி சீட்டு விவகாரத்தில் முதல் அமைச்சரும் கவர்னரும் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் புதுவை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு பெற்றுத்தர அரசு நினைத்தால் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.
ஆனால் இந்த போராட்டங்களில் 2 சதவீத மாணவர்கள் கூட பங்கேற்பது இல்லை. மாணவர் சங்கங்களும் அமைப்புகளும் அமைச்சர்களின் பாக்கெட்டிலேயே உள்ளது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயற்குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.
அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவது பற்றி இறுதி முடிவுகள் நாளை எடுக்கப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண் டும் கட்சியில் சேர்க்க கோரிக்கைகள் எழுந்துள்ளது பற்றியும் பேசப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அவர் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை விரும்பவில்லை என்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரவியது.
மேலும் மு.க.அழகிரி மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் இடம் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது.
மு.க.அழகிரி தரப்பிலும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் சிலர் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் வெளியான இந்த தகவல்கள் எதிலும் அடிப்படை உண்மை இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பதவி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த தி.மு.க. நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.
இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்த போது, “தற்போது மு.க.ஸ்டாலினின் கவனம் எல்லாம் தி.மு.க. முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியதாகத்தான் உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை ஒருமுகப்படுத்தி செயல்பட அவர் ஆலோசித்து வருகிறார். வேறு எந்த விஷயங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்றனர்.
இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மு.க.அழகிரியும் பதவிக்காக தம்பியிடம் சண்டை போட வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். தனது முக்கிய ஆதரவாளர்களில் சிலருக்கு மட்டும் பதவி பெற்றுக் கொடுக்க அவர் விரும்புவதாக சொல்கிறார்கள். எனவே அவரால் தி.மு.க.வில் எந்தவித சலசலப்பும் சர்ச்சையும் உருவாகாது என்று சொல்கிறார்கள்.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தனது பதவியை விட்டு கொடுக்கப் போவதாக முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார் என்று தெரிய வந்துள்ளது. எனவே நிர்வாக அமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
இதை உணர்ந்தே அழகிரியும் பிரச்சனை உருவாக்காமல் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களில் கே.பி. ராமலிங்கம், இசக்கிமுத்து போன்றவர்கள்தான் தொடர்ந்து அவர் பக்கம் உள்ளனர். மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் உள்பட பலர் அழகிரி ஆதரவு நிலையில் இருந்து மாறி விட்டனர்.
இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதங்களிலும் தி.மு.க.வினர் பங்கேற்று எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட இன்னும் 80 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே பதவிகள் குறித்து பேச அவகாசம் உள்ளது. ஆகையால் அழகிரிக்கு பதவி கொடுப்பது பற்றி இப்போதே பேச வேண்டியதில்லை” என்றார்.
பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவுரையைத் தொடர்ந்து தி.மு.க. மூத்த தலைவர்களும் அதே மனநிலைக்கு வந்துள்ளனர். இது அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இசக்கிமுத்துவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எனவே அவர் நேற்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.
பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், “அழகிரியை நான் மகான் என்று சொல்லவில்லை. அவரும் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் மதுரை மண்டலத்தில் தி.மு.க. வெற்றி பெற அவர் ஆதரவு நிச்சயமாக அவசியமாகும். எனவே அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்துவேன்” என்றார். #DMK #MKStalin #MKAlagiri #Anbazhagan
நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதல் அவர்கள் வகிக்கும் பதவிகளின் மாண்பை சீர்குலைத்து வருகிறது. சட்டமன்ற நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை இருவரும் உருவாக்கியுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் மக்களிடத்தில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவரை முடித்து வைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான நிதிகள் விவாதிக்கப்பட்டபோது கவர்னர் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை முன்வைத்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளிப்பது என்பது நேர்மறையான செயலாகும்.
கவர்னரின் செயலை பெரிதுபடுத்தாமல் சட்டமன்றத்தை மறுபடியும் கூட்டி இறுதி செய்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் தேவையான நிதி இருந்தும் ஜுலை மாதம் சம்பளத்தை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும். நிதிமசோதா தாமதத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை? என்றும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். நிதி ஒதுக்க மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கும் போது பல்வேறு நிபந்தனைகளை கவர்னர் விதித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்க அனுமதி உள்ளதா? இது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். கவர்னர் தன்னுடைய மாண்புகளை மறந்து அதிகார போதையில் செயல்பட்டு வருகிறார். புதுவை சட்டமன்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளி.
கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார். 31-ந் தேதிக்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் மீது தவறு இருந்தால் மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பபெற வேண்டும். இந்த அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து வரும் வேலையில் எதிர்கட்சி தலைவரான ரங்கசாமி அமைதியாக இருப்பது சரியல்ல.
முதுகெலும்பு உள்ள அரசாக இருந்தால் கவர்னர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம். நாங்கள் அதை ஆதரிக்க தயார். மின் மீட்டர் புகார் தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. நான் அங்கு சென்று அவர்களிடம் முகாமை முதலில் தலைமை அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று கூறினேன்.
வீடு வீடாக சென்று ரீடிங் எடுப்பது போல் மீண்டும் வீடு வீடாக சென்று கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரி முகாமை நிறுத்தியுள்ளேன். மின்துறையின் இந்த செயல் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகும். ஒருசிலரின் லாபத்திற்காக இதுபோன்ற மின் மீட்டரை பொறுத்தியுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்