search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹசிம் அம்லா 32 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். #hashimAmla #Smith
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ரன் எடுத்தார்.

    4-வது ரன்னை எடுத்த போது அவர் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். சுமித்தை அவர் முந்தினார். அம்லா 124-வது டெஸ்டில் 9282 ரன் எடுத்துள்ளார். சுமித் 9253 (116 டெஸ்ட்) 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். காலிஸ் 13,206 ரன்னுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார். #hashimAmla #Smith
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில், 196 ரன்களை சேஸிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    அதன்பின்னர், இலங்கை முதல் இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 68 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது. இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோவும், குசால் மெண்டிசும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். இறுதியில் 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்னாண்டோ 75 ரன்னும், மெண்டிஸ் 84 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
      
    இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது இலங்கை அணி. மேலும், தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையையும் இலங்கை அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SAvSL
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    மார்கிராம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, குயின் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால், தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
     
    இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ, காசன் ரஜிதா ஆகியோர் 3 தலா விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. #SAvSL
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்த குசல் பேரேராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. #KusalPerera #SAvSL
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி 304 ரன் இலக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற குசல் பெரேரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 153 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி விக்கெட்டை வைத்து அபாரமாக விளையாடி ஆட்டத்தை மாற்றி குசல் பெரேரா இலங்கையை வெற்றி பெற வைத்தார்.

    கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ். 214 ரன், இங்கிலாந்துக்கு எதிராக, 1984). லாரா (வெஸ்ட் இண்டீஸ். 153 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1999).

    ஜெயவர்த்தனே (இலங்கை. 123 ரன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006), டெண்டுல்கர் (இந்தியா. 103 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2008), வி.வி.எஸ். லட்சுமண் (இந்தியா. 103 ரன் இலங்கைக்கு எதிராக 2010). ஆகியோர் வரிசையில் குசால்பெரைரா இணைந்தார்.

    இதை தொடர்ந்து குசல் பெரேராவுக்கு பாராட்டு குவிகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியதாவது:-

    குசல் பெரேரா மிக சிறந்த வீரர். இதை ஒரு மிக சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். அவரது ஆட்டத்தை மறக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறும் போது “குசல் பெரேரா ஒரு அருமையான இன்னிங்சை விளையாடி இருக்கிறார். அவர் நெருக்கடியான நேரத்தில் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை என்றுமே யாராலும் மறக்க முடியாது” என்றார்.

    இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசல் பெரேராவை வெகுவாக பாராட்டினார். #KusalPerera #SAvSL
    இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று தொடங்குகிறது. #SLvsSA
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என்ற கணக்கில் உதை வாங்கிய இலங்கை அணி, ஸ்டெயின், பிலாண்டர், ரபடா, டுனே ஆலிவர் ஆகிய தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக கூட்டணியிடம் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான்.

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணி உள்ளூரில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. அண்மையில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதும் இதில் அடங்கும். அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #SLvsSA

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபரை கைது செய்த பெருங்குடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் விக்டர். நேற்று இவர் பணியில் இருந்தார். அப்போது கும்பகோணம் ஆடுதுறையை சேர்ந்த முகம்மதுரியாஸ் (வயது 26) என்பவரின் பாஸ்போர்ட் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    விமான நிலைய அதிகாரிகளின் பரிசோதனையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விக்டர் இதுதொடர்பாக பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து முகம்மது ரியாசை கைது செய்து விசாரித்தார்.

    விசாரணையில் முகம்மது ரியாஸ் கொழும்பில் உள்ள பூவரஞ்தோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், கும்பகோணம் கருப்பூர் நேதாஜி நகரில் தற்காலிகமாக வசிப்பதும் தெரிய வந்தது.

    இலங்கையை சேர்ந்த முகம்மது ரியாஸ் எதற்காக கும்பகோணம் வந்து தங்கி உள்ளார்? தமிழகத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏன் இலங்கை செல்ல முயன்றார்? என்பது தொடர்பாக பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

    319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 499 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து விளையாடியது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி நிலை குலைந்தது. இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஸ்டார்க் 5 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றிமூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. #SLvAUS
    மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. #India #Mattala #SriLanka #MattalaRajapaksaInternationalAirport
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. தற்போது, இந்தியாவை சரிக்கட்டும்வகையில், மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீதி 30 சதவீத பங்குகளே இலங்கை அரசிடம் இருக்கும்.

    இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை இந்தியா புனரமைக்கும் என்று இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvSL #PatCummins
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

    முதல் நாளில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் லாபஸ்சேக்னே மற்றும் டிராவிஸ் ஹெட்டின் பொறுப்பான ஆட்டத்தால் 323 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்சின் மிரட்டலான பந்து வீச்சில் இலங்கை அணி சிக்கியது.

    இதனால் இலங்கை அணி 50.5 ஓவரில் 139 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிமானே 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஜே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற்து. பேட் கம்மின்ஸ்  ஆட்ட நாயகன் விருது பெற்றார். #AUSvSL #PatCummins
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. #SLvAUS #JhyeRichardson #PatCummins
    பிரிஸ்பேன்:

    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சண்டிமால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் சண்டிமால் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசல் மெண்டீஸ் 14 ரன்னிலும், தனஜெயா டி செல்வா 5 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய, இலங்கை அணி விக்கெட்டுகளை காப்பாற்ற கடுமையாக போராடியது.

    தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா(20), பெரேரா (1) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், லயன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். #SLvAUS #JhyeRichardson #PatCummins
    இலங்கையில் தமிழர்கள் கொன்று புதைப்பா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #PMK #RamaDoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை வடக்கு மாநிலத்தின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று எழுப்பப்படும் ஐயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

    மன்னார் நகரில் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளம் தோண்டிய போது பூமிக்கு அடியில் ஏராளமான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ வல்லுனர்கள், தடயவியல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

    அவர்களின் ஆய்வில் இதுவரை 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 125 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

    மன்னார் நகரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் யாருடையவை என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஆய்வகத்துக்கு எலும்புக்கூடுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவு வெளி வந்த பிறகு தான் இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சந்தர்ப்ப சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது எலும்புக் கூடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது.

    2009-ம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரில் விடுதலைப்புலிகள் போரை நிறுத்திய நிலையில், ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப்படைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்தன. அடுத்த சில நாட்களுக்கு பன்னாட்டு ஊடகங்களையும், உள்நாட்டு செய்தியாளர்களையும் சண்டை நடந்த வடக்கு மாகாணத்திற்குள் அனுமதிக்காத சிங்களப் படைகள், கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் உடல்களை அழிக்கும் பணியிலும், அகற்றும் பணியிலும் ஈடுபட்டன. அவ்வாறு போர் முனையிலிருந்து அகற்றப்பட்ட தமிழர்களின் உடல்களில் ஒரு பகுதி மன்னார் நகரில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

    மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தமிழர்களுடையது தான் என்று கருதுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மன்னார் பகுதியில் ஒரே இடத்தில் 300 பேரை புதைக்கும் அளவுக்கு அப்பகுதிகளில் அதிக அளவிலான உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் கடந்த காலத்தில் இடுகாடாக இருந்திருக்கலாமா? என்றால் அதற்கும் வாய்ப்புகள் இல்லை.

    ஏனெனில், இடுகாடாக இருந்தால் உடல்கள் இடை வெளிவிட்டு கிடை மட்ட மாகத்தான் புதைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அவ்வாறு புதைக்கப்பட வில்லை. மாறாக, ஒரே இடத்தில் ஒன்றின்மீது ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதால் அவை, இனப்படு கொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

    இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதே உலக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய வி‌ஷயமாகும்.

    ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கத் தேவையான பல ஆதாரங்கள் கிடைத்தும் அவற்றை பாதுகாக்காமல் தவறவிட்டதன் மூலம் தமிழர்களுக்கு உலக சமுதாயம் பெருந்துரோகம் செய்துள்ளது. இனியும் அத்தகைய துரோகங்களை ஈழத்தமிழருக்கு பன்னாட்டு சமுதாயம் இழைக்கக்கூடாது.

    இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. எனினும், அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கான நீதிமன்ற விசாரணையை இலங்கை அரசு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், மன்னாரில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு இனப்படுகொலை நடந்ததை உறுதி செய்துள்ளது.

    இது குறித்து விசாரணை நடத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுங்குற்றங்களை ஆவணப்படுத்த, சர்வதேச அளவில் நடுநிலையான, சுதந்திரமான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு ஆவணப்படுத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #RamaDoss

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் வலைகளை நாசப்படுத்தியதுடன் ஒரு மீனவரையும் தாக்கியுள்ளனர். #TNfishermen #TNfishermenchased #LankaNavy
    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில்,  590-க்கும்  மேற்பட்ட படகுகளில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.

    அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டனர்.

    அப்போது சில கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து வலைகளை அறுத்து எறிந்தனர். தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவரது படகிற்குள் நுழைந்த கடற்படையினர், ரீகன் உள்பட 4 மீனவர்களை தாக்கினர்.

    மேலும் பல மீனவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை விட்டுவிட்டு இரவிலேயே கரை திரும்பிவிட்டனர்.

    தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது மீன்பிடி தொழிலை நசுக்கும் செயல். இதனை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி இதேபோல் சுமார் 3 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது நினைவிருக்கலாம். #TNfishermen #TNfishermenchased  #LankaNavy  
    ×