search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. #RanilWickremesinghe #MaithripalaSirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

    அதில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இடம் பெற்றுள்ளன.

    இந்த 2 கட்சிகளுக்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் கொள்கை உருவாக்க மத்திய கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது. அதில் தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சமீபத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சந்தித்து பேசினர். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 2020-ம் ஆண்டுக்கு முன்பே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

    இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் ஆதரித்தனர்.

    விக்ரமசிங்கேவின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள 16 மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே அதிபர் சிறிசேனாவுக்கு இதுகுறித்து கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

    இத்தகைய நெருக்கடி காரணமாக கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலகும் முடிவை சிறிசேனா மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இலங்கை சுதந்திரா கட்சியின் மந்திரிகள் சிலர் கூட்டணி அரசில் இருந்து பதவி விலகினர். பின்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ் மற்றும் முஸ்லிம் மைனாரிட்டி கட்சி எம்.பி.க்கள் உதவியுடன் ரனில் விக்ரமசிங்கே முறியடித்தார். #RanilWickremesinghe #MaithripalaSirisena

    இலங்கை காரை நகர் துறைமுகத்தில் உள்ள 107 தமிழக படகுகளில் 20 மட்டும் தான் மீட்கும் நிலையில் இருந்ததாக அதிகாரிகளும் மீனவர்களும் தெரிவித்துள்ளனர். #tamilnadufisherman
    ராமேசுவரம்:

    107 படகுகளில் 20 மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளதாக இலங்கை சென்ற மீனவ அதிகாரிகள், மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள், இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டுத்தர வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை அரசின் அறிவுறுத்தலின் படி 184 விசைப்படகுகளை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த படகுகளை இந்தியா கொண்டு வருவது குறித்தும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சென்ற இந்த குழு நேற்று இலங்கையில் காரை நகர் துறைமுகம் சென்றது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 107 தமிழக படகுகளை ஆய்வு செய்தனர்.

    அங்கிருந்த படகுகளில் 20 மட்டும் தான் மீட்கும் நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளும் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காங்கேசன் துறைமுகம், கிராஞ்சி, மன்னார் மற்றும் கல்பட்டி ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள 77 படகுகளை தமிழக குழு ஆய்வு செய்கிறது. #tamilnadufisherman
    விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள், மீனவர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர். #Fisherman #Srilanka #Fishermanboat

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    இதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படாத நிலை உள்ளது.

    இலங்கையில் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள படகுகளை மீட்கக்கோரி தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை அரசுடன் பேசியது. இதனைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் வரையில் சிறைபிடிக்கப்பட்ட 184 படகுகளை விடுதலை செய்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து படகுகளை எடுத்துச் செல்ல இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    184 படகுகளையும் தமிழகம் கொண்டு வர முடியுமா? அவை சேதம் அடைந்துள்ளதா? என்பவை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் குழுவினர் இன்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்கின்றனர்.

    ராமேசுவரம், புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் 5 மீன்வளத்துறை அதிகாரிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்காக ராமேசுவரம் மீனவ சங்கத்தலைவர்கள் சேசுராஜா, ஆல்வின் பெர் னாண்டோ, அடைக்கலம், காளிமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையில் இன்று காலை மதுரை புறப்பட்டனர்.

    மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கதிரேசன் (ராமநாதபுரம்), முருகேசன் (புதுக்கோட்டை) மற்றும் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரும் மீட்புக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் இலங்கை செல்கின்றனர்.

    அங்கு 15-ந் தேதி வரை தங்கி இருந்து மன்னார், ஊர்க்காவல்துறை, திரிகோணமலை, யாழ்ப் பாணம் பகுதிகளில் உள்ள படகுகளின் நிலை குறித்து இந்தக்குழு ஆய்வு செய்ய உள்ளது. #Fisherman #Srilanka #Fishermanboat

    துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChenniAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த கடலூரை சேர்ந்த பயணி ராஜேஷ் (வயது 34) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் தங்கத்தில் செய்யப்பட்ட 3 சாவிகள் இருந்தன. மேலும் அவர் அணிந்து இருந்த பெல்ட் கொக்கியும் (பக்கிள்) தங்கத்தால் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

    இதேபோல் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுகுமார் (35) என்பவர் தனது கைப்பைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து 2 பேரிடமும் யாருக்காக தங்கத்தை கடத்தி வருகிறீர்கள்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இலங்கையின் பல மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பெய்துவரும் கன மழைக்கு 8 பேர் உயிரிழந்தனர். #SriLankarains
    கொழும்பு:

    இலங்கையின் வல்லாளவிட்டா, புலத்சின்ஹலா, அகலவட்டா, மதுகாமா, படுராலியா, இன்கிரியா, படுல்லா, கலுட்டாரா, கல்லே, கெகல்லே ஆகிய மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது.

    இதைதொடர்ந்து, கடந்த இருநாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    கல்லே மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கின்கங்கா ஆற்றில் கரை புரண்டு பாய்கிறது. இதனால், நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதால் கின்கங்கா, காலு, அத்தனகாலு ஓயா ஆகிய ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கலுட்டரா மாவட்டத்தில் மூன்றாம் எண் அபாய எச்சரிக்கையும், ஹல்டுமுல்லா பகுதியில் இரண்டாம் எண் எச்சரிக்கையும், படுல்லா, பஸ்ஸாரா பகுதிகளில் ஒன்றாம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழைசார்ந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #eightdeadinSriLanka  #SriLankarains
    இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    கொலும்பு:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்குமான இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழகளின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    இலங்கையில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriLanka #HumanSkeletons #Grave
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இந்த போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும் போரின் போது மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இலங்கை அரசு பதில் அளிக்கவேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.



    இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டியபோது பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாவட்டம் முழுவதும் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.

    இந்த பணி நேற்று 79-வது நாளாக நீடித்தது. அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டியபோது அதில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது ஆகும். ஒரே குழியில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SriLanka #HumanSkeletons #Grave 
    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி, மூன்றாவது டி- 20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDWvSLW
    கொழும்பு:

    இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மூன்றாவது டி-20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணியின் யசோதா மெண்டிசும், சமன் அட்டப்பட்டும் களமிறங்கினர். யசோதா மெண்டிஸ் விரைவில் அவுட்டானார். இலங்கை அணியின் சமன் அட்டப்பட்டு 28 ரன்களும், சசிகலா ஸ்ரீவர்தனே 35 ரன்களும், நிகாஷி டி சில்வா 31 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை மகளிர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி, ஹர்மன்பிரித் கவுர் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 40 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் சமன் அட்டப்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி 20 போட்டி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. #INDWvSLW
    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கை கண்டியில் அவருக்கு நினைவகம் மற்றும் சிலை அமைக்க கோரி அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் எம்.ஜி.ஆர். பேரன் வலியுறுத்தினார்.
    கொழும்பு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, கல்வி மந்திரி வேலுப்பிள்ளை ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதல்-மந்திரி சரத் ஏகநாயகே, கண்டி எம்.பி. வேலுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ் கன்னா, நடிகை மதுமிதா கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் உள்ள அவரது டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் சந்தித்தார்.


    அப்போது கண்டியில் எம்.ஜி.ஆர். நினைவகம் மற்றும் திருவுருவசிலை அமைக்க வேண்டும். இதனால் 2 நாடுகளுக்கு இடையே அதிக நல்லுறவு வளரும்.

    மேலும் இங்கு லட்சக்கணக்கில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கண்டி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு புனித தலமாக மாறும் என்றார்.

    அதை உன்னிப்பாக கேட்ட விக்ரமசிங்கே, திரையுலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். மேலும் குமாரின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எம்.ஜி.ஆர். உருவம் பதித்த பட்டு சால்வையை குமார் அணிவித்தார்.

    இச்சம்பவத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது ஆப்கானிஸ்தான். #AsiaCup2018 #AFGvSL
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹமத் ஷா அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட் வீழ்த்தினார்.



    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. யுனைடெட் அரபு எமிரேட்சில் இலங்கை அணி பெறும் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பையில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றியதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #AsiaCup2018 #AFGvSL
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.. #AsiaCup2018 #AFGvSL
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முகமது ஷேசாத், ஜனத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேசாத் 34 ரன்களும், ஜனத் 45 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா பொறுப்புடன் விளையாடி 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

    அதன்பின் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சு மற்றும் அற்புதமான பீல்டிங்கால் இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.



    இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உபுல் தரங்கா 36 ரன்னும், திசாரா பெராரா 28 ரன்னும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரஹ்மத் ஷா வென்றார்.

    ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப், ரஷித் கான், மொகமது நபி, நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது. #AsiaCup2018 #AFGvSL
    ஆசிய கோப்பை போட்டியில் கை விரலில் ஏற்பட்ட காயத்தால் நாட்டுக்காக ஒரு கையால் மட்டுமே பேட் செய்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #AsiaCup2018 #TamimIqbal
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    ஆட்டத்தின் இறுதியில் தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கினார். கை விரல் காயத்தால் அவதிப்பட்ட அவர், ஒரு கையால் மட்டுமே ஆடினார். கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் 32 ரன்கள் சேர்த்தார்.

    நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    டாக்டர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறியுள்ளார். #AsiaCup2018 #TamimIqbal
    ×