search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை அணி. #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-0 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    டிக்வெலா 34 ரன்களும், தரங்கா 36 ரன்களும், குசால் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய குசால் பெராரா அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    திசாரா பெராராவும், டாசன் ஷனகாவும் அதிரடியாக ஆட இலங்கை அணி 300 ரன்களை கடந்தது. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தனர்.

    ஷனகா 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். திசாரா பெராரா 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி, டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. ஆனால் இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா 40 ரன்களும், டுமினி 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டும், திசாரா பெராரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டாசன் ஷனகாவுக்கு வழங்கப்பட்டது. #SAvSL
    இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதற்கான பரிசீலனைக்கான குழுவை அமைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    கொலும்பு:

    இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பரிசீலனை செய்ய இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    இலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China
    கொலும்பு:

    இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கடனுக்கு சுமார் சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த இந்திரஜித் குமாரசாமி, அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #SriLanka #IndrajitCoomaraswamy  #China
    இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. #IND19vSL19
    இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது.

    இதற்கிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தி பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    தொடக்க ஆட்டக்காரரான பவன் ஷா அதிகபட்சமாக 49 ரன்களும், ஆயுஷ் படோனி 36 ரன்களும், சமிர் சவுத்ரி 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில்,  இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் துல்ஷன் 3 விக்கெட்டும், பெர்னாண்டோ, மனசிங்கே, பரனவிதனா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் நிபுன் தனஞ்செயா 92 ரன்களும், சூரிய பந்தாரா 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இலங்கை அணி 45.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், தொடரையும் சமன் செய்துள்ளது. #IND19vSL19
    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னையில் வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    சென்னை:

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து பல்வேறு அரிய பொருட்கள் கடல் மார்க்கமாகவும், விமான போக்குவரத்து மூலமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. அதனை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுப்பதற்கும், கடத்தப்பட்டவற்றை பறிமுதல் செய்வதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 11.15 கிலோ எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.



    இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்திய 3 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ENGvIND
    தம்புல்லா:

    இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 87 ரன்களும் (78 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் விளாசினர்.

    வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி கண்டியில் நடக்கிறது.  #SriLanka #SouthAfrica #2ndODI  #கிரிக்கெட்  #தென்ஆப்பிரிக்கா #இலங்கை 
    இலங்கையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. #TrichyAirport
    கே.கே.நகர்:

    இலங்கை தலைநகரான கொழும்புவில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது மத்திய வான் நுண்ணறிவு பிரிவுஅதிகாரிகள் விமானத்தை பரிசோதனை செய்த போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பெட்டி கிடந்தது.

    பெட்டியை உரிமைகோரி யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 22 கிலோ நட்சத்திர ஆமைகள் இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

    பின்பு விசாரணை நடத்தியதில் அந்தப் பெட்டியை யார் வைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது வனத்துறையினர் அந்த ஆமைகளை பரிசோதனை செய்தபோது அந்த ஆமைகளின் மீது வைரஸ் கிருமி இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வைத்து மீண்டும் இலங்கை நாட்டிற்கு இன்று காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமைகள் மருந்துக்காக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #TrichyAirport
    இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக துவக்கி வைத்தனர். #PMModi #Srilanka #PMRanilWickremesinghe
    புதுடெல்லி:

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில், இந்திய அரசின் உதவியுடன் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, இந்தியாவின் உதவியுடன் முதற்கட்டமாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 2016-ம் ஆண்டு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை துவக்கிவைக்கப்பட்டது.



    இந்நிலையில், இலங்கை முழுவதும் இந்த அவசர ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்தனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் காணொளி காட்சி மூலம் இந்த சேவையை துவக்கி வைத்தனர்.

    இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, இலங்கை முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்த இந்தியா உதவியதில் பெருமிதம் கொள்வதாகவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #PMModi #Srilanka #PMRanilWickremesinghe
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #SriLanka #SouthAfrica
    கொழும்பு:

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

    காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணாரத்னா ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    முந்தைய டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. #SriLanka #SouthAfrica
    இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica
    கொழும்பு:

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (காலை 10 மணி) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் தான் சரிந்தன. இந்த டெஸ்டிலும் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஹெராத், தில்ருவான் பெரேரா, சன்டகன் ஆகிய சுழல்தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா அல்லது சரண் அடையுமா? என்பது தெரியும்.

    ஹெராத் கூறுகையில், ‘உள்ளூரில் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென்ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என்றார். தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா இன்னும் 3 ரன் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களையும், இலங்கையின் மேத்யூஸ் 8 ரன் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களையும் கடப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தால், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரான பொல்லாக்கின் (421 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2-வது நாளில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கள்ளத்தனமாக படகு மூலம் தப்பி செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் மண்டபம் கடற்கரை பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அய்யனார் கோவில் கடற்கரை அருகே 3 பேர் படகில் ஏறுவதற்காக வந்து கொண்டிருந்தனர். கியூ பிரிவு போலீசார் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முகாமை சேர்ந்த ராஜன் (வயது 33), அவருடைய மனைவி ரூபா என்கிற அனு (22), மண்டபம் முகாமை சேர்ந்த நிஷாந்தன் (26) என்று தெரிய வந்தது.

    இவர்களில் ராஜன் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் நடந்துள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் திருடி கொண்டு வரும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று கொடுப்பது ரூபா என்றும் கூறப்படுகிறது. நிஷாந்தன் மீது ராமநாதபுரம் பகுதியில் நகை திருடியதாக வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.

    திருட்டு சம்பந்தப்பட்ட பல வழக்குகள் உள்ளதால் போலீசாருக்கு பயந்தே 3 பேரும் கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் தீட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார், அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏஜெண்டு யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே போர் நடந்த முன்னாள் போர்க்களத்தில் இருந்து சுமார் 38 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #SriLanka
    கொழும்பு:

    இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள முன்னாள் போர்க்களத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி தோண்டப்பட்ட போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கட்டிட வேலை நிறுத்தப்பட்டு அந்த இடம் மாஜிஸ்திரேட் பிரபாகரனின் மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது, அந்த பகுதியில் இருந்து சுமார் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் தற்போது மன்னார் மருத்துவமனையில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட இலங்கையின் முன்னாள் போர்க்களமானது, கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் அரசுப்படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் ஆகும். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மன்னார் பகுதியை கைப்பற்றியபோது, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான படைகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே இங்கு போர் நடைபெற்றது.

    இலங்கையில் தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதோடு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLanka
    ×