search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    சியோல்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.



    இந்நிலையில், கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், வர்டகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க  நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    நியூயார்க்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டிரம்ப் - கிம் சந்திப்பின் போது 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகள் குழுவும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. 

    சீன அதிபருடனான சந்திப்புக்கு பிறகு கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுபாடுகள் தென்படுகின்றன. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். #Trump #KimJongUn  
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PinarayiVijayan #Kamalhassan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

    அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

    ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Kamalhassan
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். #DMK #Karunanidhi #Mutharasan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

    அவரை அவ்வப்போது அறிவாலயத்துக்கும், சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கும் அழைத்துச் சென்று வருகின்றனர். அவருக்கு முழுமையான நினைவு சக்தி வரும் வகையில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சித் தலைவர்களும் அவ்வப்போது சென்று கருணாநிதியை சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சுப்புராயன், வை.சிவபுண்ணியம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

    முத்தரசனை கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகு சிறிது நேரம் உடல் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, வெ.வேலு உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பு பற்றி முத்தரசன் கூறுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி எங்களை அடையாளம் கண்டு சிரித்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அவரது உடல்நிலை முன்பை விட நன்றாக உள்ளது என்றார். #DMK #Karunanidhi #Mutharasan
    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ஐ.டி. ஊழியர் லாவண்யா இன்று சென்னை கமிஷனரை சந்தித்து பேசினார்.
    சென்னை:

    சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் லாவண்யா (வயது30). இவரது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா ஆகும்.

    சென்னை பள்ளிக்கரணையில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இரவு லாவண்யா பணிமுடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம்-தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது அவரை பின்தொடர்ந்த 3 பேர் அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார்கள். இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    பின்னர் அவர்கள் லாவண்யா அணிந்திருந்த நகை, பணம், லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஸ்கூட்டரை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கிடந்த அவரது ஸ்கூட்டரை மீட்டனர்.

    இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த நாராயண மூர்த்தி, விநாயக மூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆஸ்பத்திரிக்கு சென்று லாவண்யாவை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியமூட்டினார். போலீசாரும் அவருக்கு தைரியம் கொடுத்தனர்.

    3 மாத சிகிச்சைக்கு பிறகு லாவண்யா பூரண குணம் அடைந்தார். அவர் இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து நன்றி தெரிவித்தார். சம்பவத்தின்போது தனது உயிரை காப்பாற்றிய போலீசாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    அப்போது அவருடன் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து நான் மீண்டுவர எனக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் ஊக்கம் கொடுத்தனர். சம்பவம் நடந்த 10 நாட்கள் நான் எனது முகத்தை கூட கண்ணாடியில் பார்க்கவில்லை. போலீஸ் கமி‌ஷனர் என்னை சந்தித்து ஆறுதல் கூறி மன தைரியம் அளிக்கும் வி‌ஷயங்களை சொன்னார். என்னை யாரும் ஒதுக்கவில்லை. எல்லோரும் அளித்த ஊக்கம் தான் என்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது. எல்லோருமே எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்கள். தமிழக மக்களும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் சிவகுமாரை அண்ணன் என்று குறிப்பிட்ட லாவண்யா தான் குணமடையும் வரை அருகில் இருந்து அவர் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்த லாவண்யாவுக்கு முகத்தில் காயம் அடைந்த தழும்புகள் இருந்தன.
    மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் வின் மிண்டை சந்தித்தார். #SushmaSwaraj #WinMyint
    நே பை தா:

    இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மியான்மர் அதிபர் வின் மிண்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும், இந்த சந்திப்பின்போது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த டிசம்பரில் ரக்கைன் மாகாணத்திற்கு சுமார் 25 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WinMyint
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    பியாங்யாங்:

    பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.



    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    பனாமா சிட்டி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவுதமாலா, பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    வாஷிங்டன்: 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கிம் ஜாங் அன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    ×