search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    சினிமா மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை இன்று திரையுலக பிரமுகர்கள் சந்தித்து வலியுறுத்தினார். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
    மும்பை:

    மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்தார்.

    சினிமா, தனியார் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குழுவாக சென்று மும்பை நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தினர்.

    உலகளாவிய அளவில் தங்களது துறைகள் மிகப்பரவலாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட இந்த குழுவினர்,  இந்த துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தினர்.

    உலக அரங்கில் இந்தியாவின் ஹாலிவுட் ஆக திகழ்ந்து வரும் மும்பை நகரத்தின் முன்னேற்றத்துக்கு உதவுமாறு பிரதமரை அவர்கள் கேட்டுகொண்டனர்.  தங்களது துறைக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.



    அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக மோடி வாக்குறுதி அளித்ததாக பிரதமரின் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

    பிரதமருடனான இந்த சந்திப்பில் பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவகன், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், கதாசிரியரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி, தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சித்தார்த்த ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முகமது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  இப்ராஹிம் முகமது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக  இப்ராஹிம் முகமது சோலிஹ் டெல்லி வந்துள்ளார். ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இங்குள்ள ஐதராபாத் இல்லத்தில்  இப்ராஹிம் முகமது சோலிஹ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடந்த இந்த ஆலோசனைகளின்போது இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

    மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

    இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள  இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், திமுக உடனான கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #DMK #Stalin
    புதுடெல்லி:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
     
    அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #DMK #Stalin
    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MekedatuDam #Modi #BanwarilalPurohit #RajnathSingh
    புதுடெல்லி:

    கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    தமிழக சட்டசபையில் நேற்று கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். #MekedatuDam #Governor #Modi #RajnathSingh
    இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. #G20Summit #Trump #Putin
    மாஸ்கோ:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து கடல் பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகி உள்ளது. 
     
    உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி 20 மாநாட்டின்போது புதினை டிரம்ப் சந்திக்கிறார். இந்த சந்திப்பை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. #G20Summit #Trump #Putin
    தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். #AnnaArivalayam #MKStalin #Vaiko
    சென்னை:

    திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் மதிமுக, விசிக கூட்டணியில் இல்லை. தோழமைக் கட்சிகள் தான் என தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய இந்த பதிலால் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

    இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.



    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்த 3 பேரை விடுவித்துள்ளனர். சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட என தெரிவித்துள்ளார். #AnnaArivalayam #MKStalin #Vaiko
    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் டி.டி.வி. தினரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் புறப்பட்டனர். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி:

    கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது அங்கு டி.டி.வி. தினரனும் வந்திருந்தார். இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    முன்னதாக தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகிய செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  கட்சியில் இருந்து  செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விலகிய கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.



    அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா? அல்லது, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi  

    ‘கஜா’ புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami ##GajaCyclone #Modi
    சென்னை:

    ‘கஜா’ புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை (வியாழக்கிழமை) காலை பிரதமர் நரேந்திரமோடியை அவர் சந்திக்கிறார்.

    ‘கஜா’ புயல் கடந்த 16-ந் தேதி தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.



    சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல், தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.

    தற்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    இன்று (புதன்கிழமை) காலை சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது.

    இந்தப் பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின்போது, ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் அவர், சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் பிரதமர் நரேந்திரமோடியிடம் வழங்குகிறார். மேலும், மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்கவும், அதற்கு தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.

    அதன்பிறகு, தமிழ்நாடு இல்லம் திரும்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பு குறித்து அவர் விளக்குகிறார். அதன் பிறகு, மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.  #EdappadiPalaniswami ##GajaCyclone #Modi
    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:



    மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை வரவேற்று திமுக சார்பில் ஏற்கனவே அறிக்கை விடுத்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளேன்.

    மேலும், தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார். #ChandrababuNaidu #Stalin
    சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஆகியோரை நேற்று சந்தித்தார். 



    இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று மாலை திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    அவருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது துரை முருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். 

    பாஜகவுக்கு எதிராக ஓரணியில் சேர்வது குறித்து ஸ்டாலினும், நாயுடுவும் ஆலோசனை நடத்தினர். #ChandrababuNaidu #Stalin
    ×