search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கருணாசை அவரது மனைவி கிரேஸ் இன்று சந்தித்து பேசினார். ஒருமணி நேர சந்திப்பை தொடர்ந்து கிரேஸ் புறப்பட்டு சென்றார். #Karunas
    வேலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    கருணாசை அவரது மனைவி கிரேஸ் இன்று ஜெயிலில் சந்தித்தார்.

    ஒருமணி நேர சந்திப்பை தொடர்ந்து கிரேஸ் புறப்பட்டு சென்றார். #Karunas

    கேல் ரத்னா விருது தராத அதிருப்தியில் பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை இன்று சந்திக்க உள்ளதாகவும் தனக்கு சாதகமான முடிவு வரவில்லை எனில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.



    இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிருப்தி தெரிவித்தார்.

    கேல்ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால் அவர் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இது தொடர்பாக அவர் நேற்று பேட்டியளித்த போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை இன்று சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியாவை நேற்று மாலை மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் சந்தித்து பேசினார்.

    இது தொடர்பாக பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரியை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் நேற்று மாலையே அவரை சந்திக்க அழைப்பு வந்தது.



    அப்போது கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என்றேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு.

    விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்விவகாரத்தை கவனிப்பதாக மத்திய மந்திரி கூறி உள்ளார்.

    இன்று மாலை வரை அரசின் பதிலுக்காக காத்து இருப்பேன். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    சமீபத்தில் சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் 100 பேரை பிரதமர் மோடி டெல்லியில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். #Modi #AnganwatiWorkers
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்கிடையே, அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2,250-ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டது.



    அங்கன்வாடிகளில் உதவியாளர்களாக வேலை பார்ப்போருக்கு மாதச் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இருவித அங்கன்வாடிகளிலும் சிறப்பாக பணியாற்றுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 மற்றும் ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சம்பள உயர்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களில் சுமார் 100 பேர் இன்று டெல்லிக்கு வருகை தந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.  #Modi #AnganwatiWorkers
    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #Modi #AshrafGhani
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்த அஷ்ரப் கனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சந்தித்து பேசினார்.



    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு, தலிபான்களுடனான சமரச உடன்படிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளின் நிலவரம் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஷ்ரப் கனி இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Modi #AshrafGhani
    ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா புகார் கூறியுள்ளார். #RahulGandhi #NiravModi
    புதுடெல்லி:

    நிதி மந்திரி அருண் ஜெட்லியை, விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச்செல்லும் முன்பு பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதனை காங்கிரஸ் எம்.பி. புனியா பார்த்தார் என்று ராகுல் காந்தி புகார் கூறினார். இந்த புகார் கூறிய சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா, ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்தார் என புகார் கூறினார்.



    2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி டெல்லி இம்பீரியல் ஓட்டலில் நடந்த ஒரு திருமண மது விருந்தில் ராகுல் காந்தி நீரவ் மோடியை நீண்டநேரம் சந்தித்து பேசினார். நீரவ் மோடிக்கும், அவரது உறவினர் மொகுல் சோக்சிக்கும் தவறாக கடன் வழங்கிய அதே காலகட்டத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு படையினரிடம் இதற்கான ஆவணங்கள் இருக்கும். இதனை ராகுல் காந்தி மறுக்க தயாரா? அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? இதை தவறு என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பூனாவாலா கூறியுள்ளார். ஆனாலும் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. #RahulGandhi #NiravModi 
    ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SushmaSwaraj #Russia
    மாஸ்கோ:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில், ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாஸ்கோவில் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் கூறுகையில், இந்தியாவின் சிறந்த நண்பனை காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மாஸ்கோவில் செர்கே லாவ்ரோவுடன் நடைபெற்ற சந்திப்பு மிகுந்த பயனுடையதாக இருந்தது என பதிவிட்டுள்ளார். 
     
    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு செல்லும் சுஷ்மா சுவராஜ், அங்கு நடைபெறும் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23-வது சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SushmaSwaraj #Russia
    பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டினார். #KeralaFlood #KCVenugopal #PMModi
    கொச்சி:

    முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.



    ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.



    கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார். #KeralaFlood #KVVenugopal #PMModi
    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். #KamalHassan #YogendraYadav
    சென்னை:

    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு கமல்ஹாசனுக்கு இந்த சந்திப்பில் யோகேந்திர யாதவ் நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த யோகேந்திர யாதவ், “மக்கள் நீதி மய்யத்தின் தேவை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிற்கும் இன்றியமையாததாக இருக்கும்”, என்று கூறினார்.

    மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KamalHassan #YogendraYadav
    பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் காமராஜ் நேற்று சந்தித்து பேசினார். #MinisterKamaraj #UnionMinister #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய நுகர்பொருள் விவகாரங்கள், பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை, தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு துறை அமைச்சர் காமராஜ் புதுடெல்லி கிருஷி பவனில் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழ்நாட்டில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவினை நீட்டிப்பு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் காமராஜ், மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

    இந்த சந்திப்பின்போது, எம்.பி.க்கள் கோபால், விஜிலா சத்யானந்த், தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் முதன்மை உள்ளுறை ஆணையாளர் (தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி) என்.முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.  #MinisterKamaraj #UnionMinister #RamVilasPaswan
    மலையாள நடிகர் மோகன்லால் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சர்வதேச மலையாளிகள் கருத்தரங்கில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். #MohanLal #Modi
    மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன்லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

    கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், வட்டமேஜை கருத்தரங்கத்தை சிறந்த முறையில் நடத்த மத்திய அரசின் ஆதரவு கோரியும், இதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மோகன்லால் நேற்று சந்தித்து பேசினார்.

    தனது அறக்கட்டளையின் சார்பில் மோகன்லால் ஆற்றிவரும் சமூகப்பணிகளை பாராட்டிய பிரதமர் மோடி, அவரது எளிமையும், தன்னடக்கமும் வியக்கவைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். #MohanLal #Modi
    தி.மு.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார். #DMK #MKStalin #MKAzhagiri
    ஆலந்தூர்:

    கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.

    அமைதி பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கே:- தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை சந்திப்பீர்களா?

    ப:- சந்திக்க மாட்டேன்

    கே:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்?

    ப:- ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்.


    கே:- தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏற்க தயார் என்று கூறி இருந்தீர்கள். அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

    ப:- 5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முடிவை தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.அழகிரியின் பேரணிக்கு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், மு.க.அழகிரியின் பேரணிக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பேரணி செல்லக்கூடிய சாலையில் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால் பேரணிக்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் என்றார். #DMK #MKStalin #MKAzhagiri
    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்து தென்னிந்திய கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கனகதுர்கா ஆலையத்துக்கு வழிபட வந்த கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமியை ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தென்னிந்திய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக இணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, இதுதொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ×