search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart Phone Application"

    • கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி இந்த திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கி உள்ளது.
    • ஹெல்சின்கி நகரில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில பின் ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஹெல்சின்கி:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

    ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதைத் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பின் ஏர், பின்னிஷ் போலீஸ் மற்றும் பின் ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி இந்த திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கி உள்ளது.

    இந்த திட்டம் ஹெல்சின்கி நகரில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில பின் ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதற்காக பின் டி.சி.சி. பைலட் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், பின்லாந்து எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அனுப்ப வேண்டும்.

    பயணிகள் தங்களது பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவும். இதற்காக தனியாக பாஸ்போர்டை உடன் எடுத்துச் செல்ல தேவை இருக்காது.

    இந்த திட்டம் சோதனை அடிப்படையில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர், இத்திட்டத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் போலந்து, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளும் இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபட் டுள்ளன. எதிர்காலத்தில் இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.

    இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டில் இருக்கும் ஒரு ஆபத்து என்ன வென்றால், ஹேக்கர்கள் பாஸ்போர்ட் தரவுகளைத் திருடி அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை எப்படி தடுப்பது என்று பின்லாந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×