search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggling liquor"

    • தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
    • 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கலால் துறை சார்பில போலி மதுபானம், எரிசாராயம் கடத்துவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேட்டுப் பாளையம் பகுதியில் தாசில்தார் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாகன எண்ணின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த லாரி விசாகப்பட்டினத்தில் இருப்பது போல காட்டியுள்ளது.

    இதனால் மேட்டுப்பா ளையத்தில் நின்றுக் கொண்டிருந்த வாகன எண் போலியானது என தெரியவந்தது. இதனையடுத்து லாரியை சோதனை செய்ததில், அதில் ரகசிய அறை இருந்தது. அதில் 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இதனையடுத்து அந்த போலி பதிவு எண் கொண்ட லாரியின் உரிமை யாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் புதுவை மதுபானங்கள் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நகராட்சி பொதுக்கூட்ட மேடை சந்தில் புதுவை மதுபானத்தை புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான நேரு வீதி, செஞ்சி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் அதிகளவில் கிராமப்புறங்க–ளில் இருந்து வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இந்த பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதனருகே நகராட்சி பொதுக்கூட்ட மேடை சந்தில் புதுவை மதுபானத்தை புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

    இதுகுறித்து திண்டி வனம் போலீசாரிடம் பொது மக்கள் பல்வேறு முறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாருக்கு தெரிந்தே விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் புதுவையில் இருந்து கடத்தப்பட்டு மதுபானம் விற்கப்படு வதால் அருகே உள்ள டாஸ்மாக்குக்கு விற்பனை குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், குமார், உதவி-சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் குற்றபிரிவு போலீசார் பராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று இரவு வில்லியனூர் பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் 2 சாக்கு பைகளுடன் நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் வைத்திருந்த பைகளில் சோதனை நடத்தியபோது அதில் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெயில்வே காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது30) என்பதும் இவர் புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    ×