search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snapdragon 8150"

    குவால்காம் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் பிராசஸர் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Snapdragon



    குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஃபிளாக்ஷிப் பிராசஸர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவால்காம் நிறுவனம் தனது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

    இவ்விழா டிசம்பர் 4ம் தேதி ஹவாயில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 8150 பிராசஸரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸர் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கடந்த ஆணஅடு நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப் உடன் அட்ரினோ 640 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிராசஸர் 'ஸ்னாப்டிராகன் 8XX' என்ற வகையில் பெயரிடப்படும் என கூறப்பட்டது.



    புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் இருக்கும் என்றும், இது சில காலத்திற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    குவால்காம் உருவாக்கி இருக்கும் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 845 விட 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் மாநாட்டின் கரு முதல் 5ஜி அனுபவத்திற்கு தயாராகுகங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

    குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 
    ×