search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snapdragon 855"

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #oneplus #5G



    குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. 



    2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும் சாதனங்களை உருவாக்க ஒன்பிளஸ் மற்றும் குவால்காம் பணியாற்றி வருகின்றன.

    இதுகுறித்து குவால்காம் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கூறும் போது, 

    ஒன்பிளஸ் வெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மட்டுமே எங்களது தேர்வாக இருக்கிறது. இந்த பிராசஸரின் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் 5ஜி வசதிகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை சிறப்பான தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் தொடர்ந்து வழங்கும். 

    என தெரிவித்தார். #oneplus #5G #Snapdragon855
    குவால்காம் நிறுவனம் வர்த்தக ரீதியிலான உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்தது. #Qualcomm



    ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் மொபைல் சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கும்.

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மொபைல் போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைவான எம்.எம். வேவ் பேன்ட்களை வழங்குகிறது.



    அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை 2019 ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.எம். வேவ் வசதி மற்றும் 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைந்த வர்த்தக ரீதியில் உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என குவால்காம் தெரிவித்துள்ளது. 



    இதுதவிர புது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4ம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ. என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ. செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3டி சோனிக் செனசார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கிறது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. இந்த பிராசஸர் உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி. வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்கும் வசதி கொண்டிருக்கிறது. #Qualcomm #Snapdragon855
    ×