search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Video"

    • டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை சந்திக்கும். பல வீடியோக்கள் வைரலாகும்.

    அந்த வகையில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது. வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது.

    இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×