என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "soil"
- மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
- நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.
காஞ்சிபுரம்:
விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.
- பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
- இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.
மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.
இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார்.
தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
- டெல்லி சுதந்திர தின பூங்காவிற்குபொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
- ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் இந்திய அஞ்சல்துறை சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியில் அமைய உள்ள 75ம் ஆண்டு சுதந்திர தினப்பூங்காவிற்கு பொன்னமராவதி வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்வில் பொ ன்னமராவதி வட்டாரத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது.
ஊர்வ லத்தை பொன்ன மராவதி தாசில்தார் எம்.வசந்தா தொடங்கி வைத்தார். பொன்னமராவதி சேங்கை ஊரணியில் தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக வந்து அமரகண்டான் வடகரையில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.
தொடர்ந்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்றனர். வருவாய் ஆய்வாளர் எஸ்.சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் எம்.சண்முகம், ரோட்டரி சங்க மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பி னர் ஆர்யு.ராமன், முத்தமி ழ்ப்பாசறை அறங்காவலர் நெ.ராமச்ச ந்திரன் ஆகியோர் பங்கேற்ற னர்.
முன்னதாக பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டி.நாராயணசாமி வரவே ற்றார். தலைவர் மா.சக்திவேல் நன்றி கூறினார்.
- பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
- மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண் மற்றும் களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவ ட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவி க்கை செய்யப்பட்டு ள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் ராஜ பாளையம் மேல் வைப்பாறு வடிநில கோட்டம் கட்டுப் பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 4 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்து வதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண் பாண்ட தொழில் பயன் பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.
எனவே இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாய நிலம் தொடர்பான பட்டா, 10 (1) அடங்கல், சிட்டா, கிரைய பத்திரம் மற்றும் புலப்பட நகல் ஆகிய வற்றுடன் மண்பாண்ட தொழி லாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும் சம்பந்தப் பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டது.
- தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் என்பதால் அதிகளவு காற்று வீசி வருகிறது.
உடுமலை:
தடையில்லா போக்குவரத்திற்கு ஏதுவாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் இந்த சாலைகள் விரைவான பயணத்திற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தை கூட குறைவான நேரத்தில் விரைவாக சென்றடைய முடிகிறது.
அந்த வகையில் உடுமலையில்இருந்து பழனிக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வெளி மாவட்டங்கள், சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சூழலில் உடுமலை நகராட்சியின் எல்லையில் உள்ள வெஞ்ச மடைக்கு அருகே இணைப்பு சாலை சந்திக்கும் வளைவு பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டது.இதனால் விபத்துக்கள் குறைந்து பாதுகாப்பான பயணம் கிடைத்தது. ஆனால் தடுப்புச் சுவரின் இரண்டு புறங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதில்லை. இதனால் அங்கு மண்குவியல் குவியலாக தேங்கி மலை போல் குவிந்து உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் என்பதால் அதிகளவு காற்று வீசி வருகிறது. அப்போது அங்கே தேங்கியுள்ள மண் காற்றோடு காற்றாக பறந்து சென்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை மண் பதம் பார்த்து வருவதால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் விபத்து நேரிடும் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து சாலையின் தடுப்பு சுவரை யொட்டிய இரண்டு பகுதியிலும் தேங்கி உள்ள மண் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வாகன ஓட்டியில் மத்தியில் எழுந்து உள்ளது.
- குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி இல்லாமல் சரள் மண் அள்ளியது சோதனையில் தெரிய வந்தது.
நெல்லை:
நாங்குநேரி அருகே குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இளந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரள் மண் ஏற்றிக் கொண்டு 3 டிராக்டர்கள் அந்த வழியாக சென்றது. அதனை போலீசார் சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் 3 யூனிட் சரள் மண் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து 3 டிராக்ட ர்களை பறிமுதல் செய்த போலீசார் மண் கடத்தியதாக கலுங்கடியை சேர்ந்த டக்ளஸ் சாமுவேல் (வயது 33), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாச்சலம் (49), ஆழ்வாநேரியை சேர்ந்த பிச்சுராஜா (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சூரங்குடி பகுதியில் உள்ள குளத்தில் சரள் மண் அள்ளியதும், அதை செங்கல் சூளைக்கு டிராக்டர்களில் கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
- உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார்.
- இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை லட்சுமி ஜூவல்லர்ஸ்நகைக்கடை மாடியில் நடந்தது. இதில் உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார் .பின்பு மண் வளம் பாதுகாப்பு குறித்த குறும்படம் அனைவருக்கும் காட்டப்பட்டது.
இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஏக்கர் நிலத்தின் மண் பாலைவனம் ஆகிறது. 62 சதவீதம் மண்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது .இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பாலைவனமாக மாறி வருகிறது எனஅவர் தெரிவித்தார். மேலும் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்காகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாபெரும் வாகன பேரணி வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது எனவும் இதற்கு அனைத்து பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது .மேலும் ஐநா.வின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் .இதேபோல் தமது பகுதியிலும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டும் எனஈஷா யோகா மையம் சார்பில் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
- நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- சோதனையில் அனுமதி இல்லாமல் செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது.
களக்காடு:
நாங்குநேரி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டியன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டின், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தப்பி ஓடிய டிரைவர் பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
- இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டுவரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது.
இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர். இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் லாரி ஓட்டுநர்கள் சென்று விடும் நிலையில் அப்பகுதி மக்களே மண்ணை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.
இதனால் நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண் சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் சிதறிய மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சீர்காழி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் கிராந்திகுமார் பாடி தகவல்
- கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த தாலுகா அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
கோவை,
கோவை மாவட்டத்தில் விவசாயப் பயன் பாட்டுக்காக 34 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 653, பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 27, மாநகராட்சி கட்டுப்பாட்டில் 9 என மொத்தம் 719 நீர்நிலைகள் உள்ளன. இதில், ஆண்டுதோறும் விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆனைமலை வட்டத்தில் ஆழியாறு அணை, குளப்பத்துக்குளம் ஏரி, பேரூர் வட்டத்தில் கங்கநாராயண சமுத்திரம், கோளரம்பதி குளம், புதுக்குளம், குனியமுத்தூர் செங்குளம், பேரூர் பெரியகுளம், வெள்ளிமேடு குளம், உக்குளம், ஊத்துப்பள்ளம் தடுப்பணை, மதுக்கரை வட்டத்தில் வெள்ளலூர் குளம், எட்டிமடை குளம், கந்தன் குட்டை, மோதிரா குட்டை, செங்குட்டை, செட்டிபாளையம் குட்டை, காடுகுட்டை, உத்தாராண்டையார் கோயில் குட்டை, பெரியகுட்டைமாரப்பன் தோட்டம் அருகிலுள்ள குட்டை, சூலூர் வட்டத்தில் சூலூர் சின்னக்குளம், கண்ணம் பாளையம் குளம், நீலாம்பூர் குளம், இருகூர் குளம், ஒட்டர் பாளையம் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், அன்னூர் வட்டத்தில் சொக்கம்பாளையம் குளம், அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம், ஆலம் பாளையம் குளம், குன்னத்தூ ராம்பாளையம் குளம், மயானகுட்டை, மோதன் கவை குட்டை, காளியம்மன் கோவில் குட்டை என 34 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற நில உரிமைச்சான்றினை இணைத்து மீண்டும் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வறண்ட நஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த தாலுகா அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக சாலை காட்டியளிக்கிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழ கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளதால் கிராமவாசிகள் பல அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில்
மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மண்சாலையை தார் சாலையாக மாற்றிதர வேண்டும் என கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வண்டல் மண் அள்ள 213 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- பொதுப்பணித்துறை-200, ஊரகவளர்ச்சிதுறை- 506 என மொத்தம் 706 கண்மாய்களில் மண் அள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்கள் துார்வாரப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகள் மண்மேவி மேடாகி உள்ளது. இதையடுத்து விளைநிலத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி தாலுகா அலுவலகத்தில் பட்டா, சிட்டா, அடங்கல் விபரங்களுடன் விண்ணப்பித்துள்ள 213 விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், கண்மாய் வண்டல் மண் விளைநிலத்தில் இடுவதால் மண்ணின் வளம் மேம்படும். பொதுப்பணித்துறை-200, ஊரகவளர்ச்சிதுறை- 506 என மொத்தம் 706 கண்மாய்களில் மண் அள்ளலாம். வருவாய்துறை, கனிமவளத்துறையினர் ஆவணங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர். இதுவரை 3 ஆயிரத்து 196 கனஅடி அளவிற்கு கண்மாய்களில் மண் அள்ளியுள்ளனர். இறவை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன அடி, மானாவாரிக்கு 75 கனஅடி வரை மண் எடுக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்