என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Solar power generation"
- சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
- புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.
நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.
இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.
இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
- 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமராக கடந்த 9-ந்தேதி பதவியேற்ற மோடி வாரணாசிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.
மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 926 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடியை அவர் விடுவிக்க உள்ளார்.
அத்துடன் வேளாண் தோழிகள் (கிருஷி சகி) திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார்.
பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமர், காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதாக மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வருவாய் ரீதியில் ஆதரவளிக்கும் நோக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி நிதி நேரடி பலன் பரிமாற்ற முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் இத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் தான் மோடி முதல் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியை தொடர்ந்து நாளை (புதன்கி ழமை) பீகார் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.
இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகி உள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இரண்டு கட்டப்பிரிவுகளுடன் கூடிய இவ்வளாகத்தில் மொத்தம் 1,200 இருக்கை வசதியுடன் 40 வகுப்பறைகளும் தலா 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்குகளும் உள்ளன.
550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி, சர்வதேச மையம், 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலான திறந்த வெளி அரங்கம், ஆசிரியர் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.
சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம், சுமார் 700 ஏக்கரில் நீர்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
- ஆன்மிக பூமியான புதுவையில் அதிக அளவிலான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் அறங்காவலர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோவில்களில் வருவாய் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆன்மிக பூமியான புதுவையில் அதிக அளவிலான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் அறங்காவலர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோவில்களில் வருவாய் உள்ளது. அதனால் அவற்றை பராமரிப்பது எளிதாக உள்ளது.
பெரும்பாலான கோவில்கள் வருவாய் இல்லாததால் அன்றாட செலவீனங்களுக்கு ஆலய நிர்வாகிகள் சிரமப்படுகின்றனர். கோவில்களுக்கு மின்கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வரும் காலத்தில் மின்துறை தனியார் மயமாக்கப்படலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
தனியார் மயமாக்கும் பட்சத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என பரவலான கருத்தும் உள்ளது. எனவே கோவில்கள் தங்கள் தேவைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டால் மின் கட்டணத்தில் பெரிய அளவு மிச்சமாகும். கோவில்களில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இதற்கு 50 சத வீதம் மானிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மீதம் உள்ள 50 சதவீதம் மானிய தொகையை மாநில அரசின் அறங்காவல் துறை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்