என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sonam
நீங்கள் தேடியது "Sonam"
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், ட்விட்டரில் இருந்து வெளியேறியதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. #SonamKapoor
இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் துல்கர் சல்மானுடன் ஜோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இருந்து வெளியேறும் தனது முடிவை அவர் அறிவித்துள்ளார். சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். டுவிட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும் என தனது ட்விட்டர் செய்தியில் சோனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இருந்து வெளியேறும் முடிவிற்கான குறிப்பிடத்தக்க சம்பவம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், மும்பையில் சுற்று சூழல் சீர்கேடு பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்த பதிவுக்கு எதிராக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவை அடுத்தே சோனம் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அந்த ட்விட்டர் பதிவில் சோனம், நகரை அடைய எனக்கு 2 மணிநேரம் ஆனது. ஆனாலும் சேர வேண்டிய இடத்தினை அடையவில்லை. சாலைகள் மோசம் ஆக உள்ளன. சுற்று சூழல் சீர்கேடு அதிகம் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவது ஒரு கெட்ட கனவாக உள்ளது என பதிவிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நபர் ஒருவர் சோனம் பதிவில், பொது போக்குவரத்து அல்லது குறைவான எரிபொருளை எடுத்து கொள்ளும் வாகனங்களை பயன்படுத்திடாத உங்களை போன்ற நபர்களாலேயே சுற்று சூழல் சீர்கேடு அளவு உயர்ந்து வருகிறது.
I’m going off twitter for a while. It’s just too negative. Peace and love to all !
— Sonam K Ahuja (@sonamakapoor) October 6, 2018
லிட்டர் ஒன்றுக்கு 3 அல்லது 4 கி.மீ. அளவுக்கே மைலேஜ் தரும் உங்களுடைய ஆடம்பர கார், உங்களுடைய வீட்டில் உள்ள 10 அல்லது 20 ஏ.சி.க்கள் ஆகியவையே உலக வெப்பமயம் ஆவதற்கு பொறுப்பு என்பது உங்களுக்கே தெரியும். முதலில் உங்களால் ஏற்படும் சுற்று சூழல் சீர்கேட்டை கட்டுப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு சோனம் அளித்துள்ள பதில் பதிவில், உங்களை போன்ற நபர்களால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே பெண்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதற்கு கடினம் ஆக உள்ளது என தெரிவித்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X