search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sony Walkman"

    • சோனி நிறுவனத்தின் முற்றிலும் புது வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
    • புது சோனி வாக்மேன் நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதியை வழங்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    சோனி நிறுவனம் 1979 ஆண்டு வாக்கில் கேசட் வாக்மேன் மாடலை அறிமுகம் செய்தது. 150 டாலர்கள் விலை கொண்டிருந்த சோனி வாக்மேன் மிகவும் பிரபலமான சாதனமாக மாறியது. மேலும் கடந்த ஆண்டுகளில் இசை பிரியர்களை கவரும் வகையில், வாக்மேன் மாடல் கணசமான அப்டேட் மற்றும் ஏராள மாற்றங்களை பெற்று விட்டது.

    இந்த வரிசையில், சோனி இந்தியா நிறுவனம் புது பிளேயர் NW-ZX707 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வாக்மேன் ஆடியோ பிரியர்களை மனதில் கொண்ட மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் புது வாக்மேன் S மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

    இது வாக்மேனுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் ஆடியோ தரத்தை மேம்படுத்தும் வசதி கொண்டுள்ளது. புது சோனி வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே, வைபை வசதி, மியூசிக் ஸ்டிரீமிங், டவுன்லோட் வசதி, மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    இதில் உள்ள S-மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வங்குகிறது. இத்துடன் ஆடியோ தரத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் மேம்பட்ட ஃபைன் டியூன் செய்யப்பட்ட கபேசிட்டர்கள், FTCAP3, சாலிட் ஹை பாலிமர் கபாசிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி வாக்மேன் மாடலில் எட்ஜ் ஏஐ, DSEE அல்டிமேட், டிஜிட்டல் மியூசிக் ஃபைல்களை ரியல் டைமில் அப்ஸ்கேல் செய்யும் வசசதி கொண்டிருக்கிறது. முற்றிலும் புதிய சோனி NW-ZX707 வாக்மேன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ×