search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Tax Movement"

    • வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • கர்நாடகா கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்திற்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துவிட்டது. அது கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணம், மாநிலத்தினுடைய இக்கட்டான நிலையின்போது பயன்படவில்லை. அந்த பணம் எல்லாம் வடக்கு மாநிலத்திற்கு செல்கின்றன.

    15-வது நிதிக் கமிஷனுக்குப் பிறகு வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை தாங்க முடியாது. நம்முடைய மாநிலத்தின் நலத்தை பாதுகாக்க, நியாயமான முறையில் நடத்த நாம் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் "SouthTaxMovement" ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிப்ரவரி 7-ந்தேதி (நாளைமறுநாள்) டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்ம் நடத்தப்படுகிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்ள இருக்கிறார்.

    தெற்கு மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ஒருபோதும் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்த தவறான எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும். கடின உழைப்பால் வலுவான தேசத்தை உருவாக்கி வரும் கர்நாடகா இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.

    ×