search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southwestmonsoon"

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜிஜூ தலைமையில் 31 பேர் அடங்கிய மத்திய குழு நாளை வருகிறது. #Southwestmonsoon #Keralaflood

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனத்த மழை மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது.

    கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு ஜூலை 9-ந்தேதி வரை 39 பேர் உயிரிழந்து இருந்தனர். அதன் பிறகு மழை அதிகரித்ததால் பலி எண்ணிக்கை 116-ஐ தொட்டுவிட்டது. நேற்று மட்டும் ஆலப்புழா, பத்தனம் திட்டா, வயநாடு, அடூர் ஆகிய இடங்களில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் இறந்துள்ளனர்.

    மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

     


    ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 564 நிவாரண முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதில் 95 ஆயிரத்து 540 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக ஆலப்புழா முகாமில் 50 ஆயிரத்து 836 பேர் தங்கி உள்ளனர். கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, பத்தனம் திட்டா, வயநாடு பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இவற்றில் 245 வீடுகள் இடிந்து விழுந்து விட்டன.

    மழை தீவிரமடைந்து உள்ளதால் இன்று நடைபெற இருந்த மகாத்மாகாந்தி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற இருந்த மேல்நிலைப்பள்ளி துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு ரூ.113.19 கோடி மதிப்புள்ள தென்னை, வாழை, மரச்சீனி, நெல் உள்பட விவசாய பயிர்கள் சேதமடைந்து உள்ளன.

    மழை பாதித்த மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் ரெயில்களை 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும்படி ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ரெயில்வே பாலங்களையும், தண்ட வாளங்களையும் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜூ தலைமையில் 31 பேர் அடங்கிய மத்திய குழு நாளை கேரளா செல்கிறது. கோழிக்கோடுக்கு விமானம் மூலம் வரும் இந்த குழுவினர் முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிடுவார்கள் என்று மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம் கூறி உள்ளார். #Southwestmonsoon #Keralaflood

    ×