search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soybean"

    இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து சீனா உத்தரவிட்டு உள்ளது. #China #Soybean #ImportTariffs #India
    பீஜிங்:

    சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு சீனாவும் கடுமையாக வரி விதித்து இருப்பதால் அவ்விரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டு உள்ளது.

    இந்த நிலையில், அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் நல்லுறவு பராமரிக்க விரும்புவதாக தெரியவந்து உள்ளது.



    அந்த வகையில் இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் பிறப்பித்து உள்ளது. இது ஜூலை 1-ந் தேதி முதல் அமல் ஆகிறது.

    சோயாபீன்ஸ் மீது 3 சதவீதமும், சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வருகிறது.

    அமெரிக்காவில் இருந்துதான் சீனா அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்தது.இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #China #India #Tamilnews
    ×