search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Space X Star Ship Rocket"

    • கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கிது. அந்த நிறுவனம் இதுவரை உருாக்கியதிலேயே மிகப் பெரிய ராக்கெட் இதுவாகும்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஏவப்பட்ட நான்கு நிமிடங்க ளில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது.

    இந்நிலையில் ஸ்டார் ஷிப்பின் சோதனை 2-வது முறையாக நேற்று நடந்தது. டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    சுமார் 400 அடி உயரம் கொண்ட விண்கலத்தில் சூப்பர் ஹெவி எனப்படும் முதல் பகுதியில் பூஸ்டர் இருந்தது. மற்றொரு பகுதியில் 165 அடி உயர ஸ்டார் ஷிப் விண்கலம் பொருத்தப்பட்டது.

    ஏவப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் வெற்றிகரமாக ஸ்டார் ஷிப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. பூஸ்டரை தரையிறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்டார்ஷிப்பில் இருந்து பிரிந்த பூஸ்டர் வெடித்து சிதறியது.

    இது தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறும்போது, விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.

    எங்கள் ஸ்டார்ஷிப் விண்கலம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சோதனை மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி வருகிறது. இன்றைய சோதனை ஸ்டார்ஷிப்பின் நம்பகத் தன்மையை மேம்படுத்த உதவும்.

    இந்த ராக்கெட் ஏவுதல் ஸ்பேஸ் எக்ஸ் என்ஜினீயர்களால் நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்று தெரிவித்தது.

    ×