என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special attention"
- மாவட்ட தலைவர் முருகன் உட்பட, பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
- பனியன் தொழிலில், பல்முனை ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பல்வேறு நெருக்கடி ஏற்படுகிறது.
திருப்பூர்:
எச்.எம்.எஸ்., திருப்பூர் மாவட்ட மாநாடு, காந்திநகர் முத்தன்செட்டியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். பனியன் சங்க துணை தலைவர் ரத்தினமூர்த்தி வரவேற்றார். மாநில செயல் தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். தேசிய தலைவர் ராஜாஸ்ரீதர், கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் முருகன் உட்பட, பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, பொங்கல் போனசாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளருக்கும் அரசு உதவி வழங்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அரசு சார்பில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் கட்டுதல், பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலையை கட்டுக்குள் வைத்திருத்தல், விசைத்தறித் தொழிலை பாதுகாத்தல், நலவாரிய உறுப்பினர் குழந்தைகளுக்கு 1-ம்வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை உதவி வழங்குதல், தமிழக அரசு 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு உதவி வழங்குவது போல், மாணவர்களுக்கும் உதவி வழங்குதல், சிறு கடைகள், வீடுகளுக்கு நிபந்தனையின்றி மின் இணைப்பு வழங்குதல், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் புதிதாக இ-ஷார்ம் திட்ட பதிவை கைவிட்டு 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களை தொடர்ந்து செயல்படுத்துதல் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பனியன் தொழிலில், பல்முனை ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பல்வேறு நெருக்கடி ஏற்படுகிறது. பிரதான மூலப்பொருளாக உள்ள நூலிழைக்கு மட்டும், 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட வேண்டும். மத்திய அரசு பனியன் தொழில் மீது சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே, வங்கதேசம் உள்ளிட்ட போட்டி நாடுகளுக்கு செல்லும் ஆர்டர்களை திருப்பூர் பக்கமாக திருப்ப முடியும் எனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.