என் மலர்
நீங்கள் தேடியது "special worship"
- முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல் நாள் சஷ்டி விழாவில் தாரகா சுரனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்க ப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ முருகப்பெருமான் எதிரில் இருந்த தாரகாசூரணை போரில் வென்று தலையை துண்டிக்கும் நிகழ்ச்சி நடந்தது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசித்து சென்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாழப்பாடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில், மூலவருக்கு தேன், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் காட்சி யளித்தார்.
இதேபோல், வாழப்பாடி காசி விஸ்வநாதர் மற்றும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொட்டவாடி கந்தசாமி கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டியையொட்டி அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- இளையான்குடி அருகே உள்ள தர்காவில் தமிழ்மகன் உசேன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சிவகங்கை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள தர்காவிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் புதூரில் புலவர் மீரா தர்காவில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.
பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் ஜாதி, மதம் கிடையாது. அவரவர் மத வழிபாட்டின் படி இறைவனிடம் வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட பிரார்த்திப்போம் என்றார்.
முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரசெயலாளர் மீரா, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- இன்று மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7-ந்தேதி) மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து ஏழு மணி அளவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.
பிறகு சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி முழு ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பக்தர்களே, அவர்கள் கொண்டு வந்த பசும்பாலால் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் முழு கொப்பரை தேங்காயை பக்தர்கள் கொண்டு வந்து யாக தீயில் போட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் நாமக்கல், பரமத்தி, பரமத்திவேலுார், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, ஜேடர்பாளையம், வெங்கரை, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டி மஹா காலபைரவருக்கு யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிரா தேவி-மஹா காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவ வேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும்,
பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல் லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழ வேண்டியும் ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடுடன் தொடங்கிய யாக வழிபாட்டில், காலை 10.30மணிக்கு மஹா கால பைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் மிக பிரம்மாண்டமாக பக்தர்கள் திரளாக பங்கேற்க ''பைரவா போற்றி போற்றி... காக்கும் கடவுளே மஹா கால பைரவா போற்றி போற்றி, கருணையின் தெய்வமே காலபைரவா போற்றி போற்றி '' என பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்ன தானமும் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
சிறப்பு வழிபாடு களுக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்கு ழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
- தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
ஆண்டுதோறும் தைப்பூசதிருவிழாவுக்கான அனுமதி கேட்டும், பாதயாத்திரைவரும் பக்தர்களின் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி, அடிவாரம் வடக்கு கிரிவீதி வீரதுர்க்கையம்மன், கிழக்கு கிரிவீதி அழகுநாச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் நேற்று முன்தினம் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உபயதாரர்கள் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.
- அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
நெல்லை:
அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்ப டுகிறது.
இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நெல்லை அருகன்குளம் காட்டு ராமர் கோவில் எனப்படும் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நாளை காலை பூர்ணாபி ஷேகம் நடக்கிறது. அதன் இறுதியில் பஞ்சாபிஷேகம் நடக்கிறது.
இதில் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
இதில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
அதனைத்தொடர்ந்து பல்வேறு பழங்களை கொண்டு பழக்காப்பு விழா நடக்கிறது. இதில் பழங்களால் செய்யப்பட்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படுகிறது. மாலையில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. தொடர்ந்து கடன் தொல்லை நீங்க வேண்டுவோர் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடத்துவர்.
நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அதிகாலை சிறப்பு ஹோமங்கள், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், 108 தேங்காய் கொண்டு ஆஞ்சநேயர் ஹோமம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பின்னர் அன்னதானமும், மாலையில் ராமர்சீதா திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதேபோல் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில், நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், தச்சநல்லூர் டவுன் ரோட்டில் உள்ள ஆஞ்சநோயர் கோவில், பாளை ராஜ கோபாலசுவாமி கோவில், ராமசாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அனிச்சம்பாளையம் குட்டுக்காடு காவேரி கரை யில் ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் மேல தாளங்கள் முழங்க தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மதியம் 12 மணிக்கு காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளான நன்செய்இடையார், பொய்யேரி, காமாட்சி நகர், குப்பச்சிபாளையம், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதேபோல் பரமத்தி வேலூரில் எல்லையம்மன் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழாவை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் வடை மாலை சாற்றப்பட்டு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வடை,
பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது.
- கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
நெல்லை:
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.
இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதன்படி நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்கள், சபைகள் உள்ளிட்டவை பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை மற்றும் மாலை சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது. பாளை தெற்கு பஜார் சவேரியார் ஆலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குறித்த குடில்கள் மற்றும் சொரூபங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை ஜெபமானது காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
- பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர்.
குமாரபாளையம்:
சஷ்டியையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை பாலமுருகன் கோயில், முதலியார்தெரு பாலமுருகன் கோயில், பள்ளிபாளையம் சாலை மருதமலை முருகன் கோயில், வட்டமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
திருப்பூர்:
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அவினாசி, தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், சேவூர், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் கங்காதீசுவரர், மாரியம்மன் கோவில், அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. நவநீதகிருஷ்ணன் ஸ்ரீ பூமா நீளாச்சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், நலுங்கு பொடி, நெய் அபிஷேகங்கள் நடைபெற்றது. உடுமலை குட்டை திடலில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசன்ன விநாயகர் கோவிலில் அதிகாலை பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதே போல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேப்ேபால் திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், சுக்ரீஸ்வரர் ஆலயம், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர், முருகன், அம்மன் ஆலயங்களிலும் , ஊத்துக்குளி தென் திருப்பதி கோவில் மற்றும் சாய்பாபா கோவில் ஆகியவற்றில் மக்கள் காலை முதலே வந்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம் சிவன்மலை கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.