என் மலர்
நீங்கள் தேடியது "speech"
- தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
- மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
மதுரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-
அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.
மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.
புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ெதரிவித்தார்.
- கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் மின் கட்டணம், பால் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
மக்கள் நினைத்தால் ஆட்சியில் யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவார்கள். இரண்டு ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி முடிந்துவிட்டது. இன்னும் மக்கள் இரண்டு ஆண்டுகள் மட்டும் பல்லை கடித்துக்கொண்டு ஓட்டி விட்டால் மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
அப்போது நிறுத்தப்பட்ட அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். விராலிமலை தொகுதி யாரும் கண்டிராத அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையும் விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன் கல்குடி அய்யப்பன், சுப்பிரமணி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
- அனைத்து தரப்பு திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழியில் நடை பெற்ற நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் முத்து.மகேந்திரன், அலெக்சாண்டர், முருகன், சாமிநாதன், முத்து குபேரன், செல்வமுத்துகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல.சேதுரவிக்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினர் நிவேதா முருகன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா பொதுமுடக்கம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக அதனை சமாளித்தது.
தொடர்ந்து கடந்த ஆட்சியில் அரசு கஜானாவை வெற்றிடமாக்கி வைத்தபோதும், அரசின் வருமானத்தை பெருக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
இதில், நகர துணை செயலாளர் முத்து, சிவப்பிரியாதுரை நகரப் பொருளாளர் கோடங்குடி சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர் தனராஜ், நிர்வாகிகள் திருச்செல்வம், லெனின், துரை, சரவணன், பாருக் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
- முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை மீட்டெடுப்போம் என மாநில பொது செயலாளர் பேசினார்.
- இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறி னார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளராக ராமநாதபுரம் வேலு மனோகரன் மகளிர் கல்லூரி தாளாளர் தொழிலதிபர் வேலு மனோகரன் பொறுப்பேற்றார். அவருக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் யாதவ சங்க திருமண மகாலில் நடந்தது. ராமநாதபுரம் யாதவ சங்க தலைவர் மணிமாதவன் தலைமை தாங்கினார். பாலமுருகன் வரவேற்றார்.
முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், தாலுகா யாதவ சங்க தலைவர்கள் ராமு யாதவ் (பரமக்குடி), நாகலிங்கம் (முதுகுளத்தூர்), தில்லைமுத்து யாதவ் (ராமே சுவரம்), ராமு (திருவாடனை), வழக்கறிஞர் முனியசாமி, அன்பு பாலகிருஷ்ணன், ராமேசுவரம் தொழிலதிபர் சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில புதிய பொது செயலாளர் வேலு மனோ கரனை வாழ்த்தி பேசினர். ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஜெயக்குமார், மூத்த வழக்கறிஞர் அன்புச் செழியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் ஒப்புதலுடன் மாவட்டத்தில் யாதவ மகா சபை புதிய தலைவராக புத்தேந்தல் குரு பிரகலாதன், செயலாளராக முதுகுளத்தூர் கருப்பசாமி, பொருளாளராக பரமக்குடி கனகராஜ் ஆகியோர் நிய மிக்கப்படுவதாக தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொது செயலாளர் வேலு மனோகரன் அறிவித்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். மக்கள் தொகையில் நாம் 3-வது இடத்தில் இருந்து வருகிறோம். நமக்குரிய உரிமைகளை பெறுவோம். மாநில, மாவட்ட அமைப்பை வலுப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது கோரிக்கையை அரசி டம் இருந்து சுலபமாக பெற முடியும். முடக்கப்பட்ட மதுரை யாதவர் கல்லூரியை கள ஆய்வு மேற்கொண்டு மார்ச் மாதத்திற்குள் மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில் ராமநாதபுரம் யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.
- விவசாய பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.
- குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் துறையின் மூலம் மிளகாய் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரு கிறது. குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது. பொதுவாக விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு விவசாயம் செய்து வருவதுடன் பல்வேறு தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே வேளையில் உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துதலில் ஆர்வம் காட்டவேண்டும். எந்த அளவுக்கு பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவுக்கு பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
அப்தபோதுதான் சரியான லாபம் கிடைப்ப துடன் வரும் காலங்களில் விவசாய பணிகளை அதிக அளவு மேற்கொள்ளவும் உள்பத்தியை அதிகரிக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குநர்கள் ரமேஷ், சிவகுமார். பிரியங்கா, ஜெகதீசன்.ரவிகுமார்,க முதி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ். விவசாய சங்க தலைவர்கள் முத்துராமலிங்கம், அருணா சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாபநாசம், அய்யம்பேட்டை, சாலியமங்கலம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.
- பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.
பாபநாசம்:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எச். ஜவாஹிருல்லா பேசியதாவது :-
பாபநாசம் உப கோட்டம், அய்யம்பேட்டை உப கோட்டம், சாலியமங்கலம் உப கோட்டம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.
பாபநாசம் தொகுதி இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் (மும்முனை மின்சார மோட்டார்கள்) மற்றும் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.
எனவே இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மின் பிரச்சனையை போக்கிட துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, கோரிக்கை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அம்மாபேட்டை-பாபநாசம் ஆகியவற்றை இணைத்து ஓரு புதிய அலுவலகம் தொடங்கப்படும். இதேபோல் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோரிக்கை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
விருதுநகர்
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் பாண்டியன் நகர் எம்.ஜி.ஆர். திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார்.
விருதுநகர் நகர செயலாளர் நைனார் முகமது, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம, விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பசாமி, ராமலட்சுமி, ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். சிலிண்டர் மானியம் தருவோம் என்று கூறினார்கள், 2 வருடமாக எதுவுமே செய்யவில்லை. பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு ஓட்டு கேட்டு வந்தார். அந்த செங்கலின் விலை தற்போது 12 ரூபாய் உயர்ந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு செங்கல் ரூ.5 மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 12 ரூபாய்க்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த சிமெண்ட் விலை இன்றைக்கு 600 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. கம்பி விலைகள் அனைத்தும் கூடிவிட்டன. 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால் கூட அதன் செலவு தற்போது விலைவாசி உயர்வு காரணமாக 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எல்லா விலையும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர்.
தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க. அரசு அதிருப்தி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். தமிழகத்தில் சரியான ஆளுநர் கிடைத்துள்ளார். ஆளுநருக்கும் தி.மு.க.வுக்கும் சரியான போட்டி நடக்கிறது. தி.மு.க.வினரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் என்ன செய்தாலும் கடைசியாக ஆளுநரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டி உள்ளது. சட்டசபையில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து விட்டு கையெழுத்து வாங்க மட்டும் கவர்னர் மாளிகைக்கு ஏன் செல்கின்றனர்?
மத்திய அமைச்சர்களை விமர்சனம் செய்வது இந்திய பிரதமரை விமர்சனம் செய்வது ஆளுநரை விமர்சனம் செய்வது ஆளுநரை ஒருமையில் பேசுவது, கடைசியில் அவர்களிடமே சென்ற கையெழுத்து கேட்பது திட்டங்களுக்கு நிதி கேட்பது. எப்படி தமிழகத்திற்கு நல்லது நடக்கும். ஏதாவது பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வினர் எதையாவது செய்கின்றனர்.
தற்போது சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். 2 ஏக்கர் நிலம் தருகின்றோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்தார். கடைசியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கவே இல்லை. வருகிற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
- இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்
இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.
மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.
பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியா, ஜெர்மனி இடையே வர்த்தக உறவு அதிகம் உள்ளது.
- ஒன்றிய அரசு இதற்கு பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, பிப்.28-
கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில்"எக்ஸ்பி ரிமெண்டா" என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார்.
அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: -நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான உற்பத்தி, நிர்வாக திறன் போன்றவைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. அறிவியல் ரீதியாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக முதல் அமைச்சரின் நான் முதல்வன் என்ற மாணவர்களுக்கான திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவை எப்போதுமே தனிச்சிறப்பு கொண்டது. தொழில்ரீதியான முன்னேற்றம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழிற்நிறுவனங்களின் தேவை கள் அனைத்தும் நிறைந்த இடம் என கோவைக்கு பல சிறப்புகள் உள்ளன.
தற்போது அறிவியல் ரீதியாகவும் கோவை சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. 'எக்ஸ்பிரிமெண்டா' அறிவியல் மையம் மூலம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படும். அறிவியல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். வருங்காலங்களில் அறிவியல் வளர்ச்சி இம்மையம் புதிய உத்வேகம் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கவுரவ விருந்தினராக சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
ஜி.டி நாயுடு அறக்கட்டளை அறங்காவலர்கள் ஜி.டி. ராஜ்குமார், அகிலா, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்துவது தமிழகத்தில் மட்டும் தான். அந்த அளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே வர்த்தக உறவு அதிகம் உள்ளது. என்ஜினீயரிங் துறையில் ஜெர்மனி உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளது. அவ்வாறு ஜெர்மனியில் செயல்ப டுத்தக்கூடிய அதன் சிறப்பு திட்டங்கள், பயிற்சிகள் கோவையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வேலை நிமித்தமாகவும், படிப்பதற்காக வரும் அதிக நபர்கள் செல்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு நல்ல நட்பு நிலை உள்ளது.தற்போது கிராஸ் சர்டிபிகேசன் என்று சொல்லக்கூடிய சான்றிதழ் இங்கே படிக்கும் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது படித்தால் ஜெர்மனிக்கு நேரடியாக சென்று வேலைவாய்ப்பை பெறலாம். ஜெர்மனியில் படிப்பு ரீதியாக எந்த ஒரு சான்றிதழும் பெற வேண்டியது இல்லை. இதுபோன்று பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. பொறுத்தவரை தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேலாக ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியானது 2020 -21 -க்கான நிதி ஆகும். இது தவிர மேலும் ரூ.3000 கோடிக்கு மேலாக ஜி.எஸ்.டி. வரவேண்டியது உள்ளது. மாதம் மாதம் வர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையும் தாமதம் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. மாடலில் மாறுதல் தேவை. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய வழிமுறைகளை மிகவும் எளிதாக மாற்ற வேண்டும் மதுரையில் நடக்கக்கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து எடுத்துரைக்கப்படும் பட்ஜெட்டை பொருத்தவரை முதல்வரின் உத்தரவுபடி திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கல்விக்கடன் தள்ளுபடி குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் என்ன சொன்னாரோ அது நடக்கும். தமிழகத்தின் நிதியை பொருத்தவரையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது. வருவாய் அதிகரித்துள்ளது கடன் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் அதானி பங்குகள் சரிந்து வருகின்றன. இது குறித்து நான் ஒரு நிதி அமைச்சராக பேசவில்லை, பங்குச்சந்தைகளில் பணிபுரிந்த அனுபவத்தில் பேசுகிறேன். இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் அதானி பங்குகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பாக தொடர்பாக ஆர்.பி.ஐ., செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் தற்போது தான் அதானி பங்குகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது என்பது இல்லை. பல ஆண்டுகளாகவே இந்த விவாதம் நடந்து வருகிறது.
பாராளுமன்றத்தில் கூட குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தற்போது தான் பூதாகரமாக எழுந்துள்ளது. ஒன்றிய அரசு இதற்கு பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
- மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, உலக சமுதாய சேவா சங்கம், சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
''ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும், 30 நிமிடமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும், யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். பயிற்சி முடித்த மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்க தவறக்கூடாது என்றார்.
அதன்பின், பயிற்சி முடித்த, 650 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் சங்கமேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.
- முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
- கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலா் பாண்டி வரவேற்றர். மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முடங்கி கிடந்த முதுகுளத் தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. கமுதி மற்றும் முதுகு ளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
காவிரி குடிநீர் பிரச்சினை ஒரு ஆண்டில் முழுமையாக தீரும். பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கேயே ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கமுதியில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர் கல்லூ ரியில் கூடுதல் பாடப்பி ரிவுகள் கொண்டுவரவும், காலி இடங்களை நிரப்பவும், புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சி சேர்மன் அப்துல் வஹாப் சகாரணி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர்பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெயபால், மணலூர் ராமர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் அருணாசலம் நன்றி கூறினார்.=
- நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.